நான்கு திசையிலிருந்தும் பணவரவை ஈர்க்கக் கூடிய சக்தி நவதானியத்திற்க்கு உண்டு! இப்படி பணத்தை வைத்தால், சேமிப்பு இரட்டிப்பாகும்!

money1-1

சில பேர் சுலபமாகவே பணத்தை சம்பாதித்து விடுவார்கள். ஆனால், சம்பாதித்த பணத்தை எப்படி முறையாக சேமிப்பது? முறையாக சேமித்த பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது என்பது தெரியாது. நம் கையில் இருக்கும், பணத்தை நவதானிய தோடு சேர்த்து வைக்கும் போது, அந்த பணத்தின் மூலம், இரட்டிப்பான லாபத்தை நம்மால் அடையமுடியும். அந்த சூட்சமத்தை எப்படி செய்வது? என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

navadhaniyam

கடையிலிருந்து புதியதாக நவதானிய பேக்கட் ஒன்றை வாங்கி, வீட்டில் வைத்துக் கொள்ளவும். 9 தானியங்களும் கலந்த கலவையோடு சேர்த்து, சிறிய பாக்கெட்டுகள், நாட்டு மருந்து கடைகளில் விற்கும். அதை வாங்கிக் கொண்டாலே போதும். அதை பிரித்து, ஒரு பிளாஸ்டிக் டப்பாவிலோ, அல்லது கண்ணாடி பாட்டிலிலோ கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின்பு, ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொண்டு, அதில், நீங்கள் எவ்வளவு தொகை பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்தத் தொகையையும், எந்த குறிக்கோளுக்காக சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த குறிக்கோளையும், பச்சை நிற பேனாவில் எழுதி விடுங்கள். (உதாரணத்திற்கு வீடு கட்ட பணம் சேரக்க வேண்டும். நிலம் வாங்க பணம் சேர வேண்டும். குழந்தைகளை மேல் படிப்பு படிக்க வைக்க பணம் சேர வேண்டும். நீங்கள் உங்கள் மனதில் எவ்வளவு தொகையை சேர்க்க வேண்டும் என்று, நினைத்து வைத்துள்ளீர்களா அந்தத் தொகையையும் அதில் எழுதி விடுங்கள்.)

money

உங்கள் கையில் இருக்கும் சேமிப்புத் தொகையில் ஒரு தொகையை, வெறும் 100 ரூபாய் முதல் எவ்வளவு தொகையை வேண்டுமென்றாலும், உங்கள் குறிக்கோளை எழுதி வைத்திருக்கும் அந்த பேப்பரில் வைத்து, அதாவது முதல் காணிக்கையாக வைத்து, அந்த பேப்பரை மடித்து, நவதானிய டப்பாவில் போட்டு மூடி விடுங்கள். இந்த டப்பாவை உங்கள் வீட்டில் பத்திரமாக எங்கு வேண்டுமென்றாலும் எடுத்து வைத்து கொள்ளுங்கள். யார்கிட்டயும் காமிகாதிங்க!

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்து, உங்கள் வீட்டில் வைத்த பின்பு, நீங்கள் பணத்தை சேமிப்பதற்காக, எந்த சொந்தத் தொழில் செய்து முயற்சித்தாலும், அதில் இருந்து அதிகப்படியான லாபம் கிடைக்கும்.  நீங்கள் மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், அதல் கூடுதலான வருமானம் கிடைக்கும். இப்படி நீங்கள் எந்த வகையில் பணம் சம்பாதித்து சேமிக்க முயற்சி செய்தாலும், ஒரு வங்கியில் போய் கடன் தொகை கேட்டாலும் கூட, அதில் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் அந்த தொகையானது உங்களுக்கு கிடைக்கும்.

money1

நீங்கள் பணத்தேவைக்காக செல்லும் எந்த திசையாக இருந்தாலும் சரி, அந்த இடத்திலிருந்து பண வரவை ஈர்க்கும் கூடிய சக்தி, உங்கள் வீட்டில் வைத்திருக்கும் அந்த நவதானிய டப்பாவிற்கு உள்ளது. குறிப்பாக நீங்கள் எழுதி வைத்திருக்கும் பச்சை நிற எழுத்திற்கும் அதிக சக்தி உண்டு. புதனுக்குரிய பச்சை நிறம்,  பிரபஞ்சத்திடம் இருந்து சக்தியை ஈர்த்து நமக்காக தந்துவிடும். கூடிய விரைவில் உங்களது வருமானமும், சேமிப்பும் இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகமே இல்லை. சுலபமான பரிகாரம் தான். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள்.

money bag

குழப்பம் வேண்டாம். பாட்டிலுக்குல் நவதானியத்தை போடப் போகிறீர்கள். ஒரு வெள்ளை பேப்பரில் உங்களது குறிக்கோளையும், சேர்க்கவேண்டிய பண தொகையையும், பச்சை பேனாவில், எழுதி அந்த பேப்பரில், வெறும் நூறு ரூபாய் காணிக்கை வைத்தாலும் சரி, அதை வைத்து மடித்து நவதானிய பாட்டிலில் போட்டு மூடி வைத்துவிடுங்கள் இவ்வளவுதான்.

இதையும் படிக்கலாமே
சமயலறையில் இதை செய்தால் பிசுபிசுப்பும் இருக்காது பூச்சிகளும் இருக்காது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam semikka vazhigal. Panam athigam vara Tamil. Panam peruga in Tamil. Panam peruga pariharam Tamil