அக்டோபர் மாத ராசி பலன் 2023 – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

october month rasi palan
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நல்ல பலன்கள் கிடைக்கக்கூடிய மாதமாக திகழப்போகிறது. குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்புகள் ஏற்படாது. வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்ததை விட அதிகமான அளவு பண வரவு ஏற்படும் என்பதால் சேமிப்புகளும் உயரும்.

- Advertisement -

வியாபாரத்தில் புதிதாக எந்த முயற்சிகளையும் எடுக்காமல் இருப்பது நன்மை பயக்கும். முதலீடுகள் செய்வதை முடிந்த அளவுக்கு தவிர்த்து விட வேண்டும். அலுவலகத்தில் சாதகமான சூழ்நிலையை ஏற்படும். விரும்பிய இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு சிலருக்கு கிடைக்கும். மேலும் அலுவலகம் ரீதியாக வெளிநாடு செல்வதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப்பெருமானையும், ஆஞ்சநேயரையும் வழிபட வேண்டும்.

ரிஷபம்

- Advertisement -

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகள் ஏற்படக்கூடிய மாதமாக திகழப் போகிறது. வெற்றிகளும், யோகங்களும் தேடி வரும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும் என்றாலும் முயற்சிகளில் தடைகள் உண்டாகும். செலவுகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் முடிந்த அளவுக்கு சுப விரையங்களாக மேற்கொள்ள வேண்டும். தெய்வப் பணியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் தெய்வ அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்க கூடிய மாதமாக திகழும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பதற்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்த்துக் கொள்வதன் மூலம் பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் அதிகாரிகளின் ஆதரவால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள முடியும். கொடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் செய்து முடிப்பதன் மூலம் பல நல்ல பலன்களை பெறலாம். வியாபாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த லாபத்தை விட கூடுதலாகவே லாபம் கிடைக்கும். இருப்பினும் அந்த லாபத்தை பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ துர்க்கை அம்மனையும் பைரவரையும் வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாக திகழப் போகிறது. எந்த முயற்சிகளை எடுத்தாலும் அதில் வெற்றிகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும் என்பதால் கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. திடீர் பண அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. பெற்றோரும் உடன் பிறந்தோறும் உங்களுக்கு முழு ஆதரவை தருவார்கள். இதுவரை தடைப்பட்டு இருந்த அனைத்து வேலைகளும் சிறப்பான முறையில் முடிவடையும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். அதனால் இழந்த மதிப்பையும் மரியாதையையும் திரும்பப் பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதுவரை எதிரிகளால் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும்.

வேலை செய்யும் இடங்களில் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு என்று எதை எதிர்பார்த்து இருந்தீர்களோ அவை அனைத்தும் நடக்கும். அலுவலகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரத்தை பொருத்தவரை உழைப்பிற்கு ஏற்ற பலன் தான் கிடைக்கும். எதிரிகளால் இருந்து வந்த மறைமுக தொல்லைகள் அனைத்தும் நல்ல முடிவுக்கு வரும். மேலும் வியாபாரத்தை விரிவாக்குவதற்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானையும் பைரவரையும் வழிபட வேண்டும்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உற்சாகம் மிகுந்த மாதமாக திகழப்போகிறது. சிலருக்கு ராஜயோகம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும். செலவுகள் அதிகரித்தாலும் செலவுக்கேற்ற வரவு ஏற்படும். இதுவரை கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்கி அன்பும் அரவணைப்பும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். உறவினர்களால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். வீண் விரயம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செலவு செய்ய வேண்டும்.

வேலை செய்யும் இடங்களில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தை பொருத்தவரை லாபம் கூடுதலாக தான் இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். இருப்பினும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சூரிய பகவானையும் துர்க்கை அம்மனையும் வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டிய மாதமாக திகழப்போகிறது. சிலருக்கு ராஜயோகம் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. வண்டி வாகனம் வாங்க கூடிய யோகம் இருக்கிறது. எதிரிகளால் இடையூறுகள் ஏற்பட்டாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். குடும்பப் பிரச்சினையில் மூன்றாவது நபரை தலையிட விடக்கூடாது. கணவன் மனைவிக்குள் சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையுடனும் நிதானமாகவும் செயல்பட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு அதிகரிக்கும் என்றாலும் உறவினர்களின் வருகையால் செலவுகளும் அதிகரிக்கும்.

வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் அதை செம்மையாக செய்து முடித்து அதில் வெற்றி அடைவீர்கள். வேலை சுமை அதிகமாகவே இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தை பொறுத்தவரை எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளால் வியாபாரத்தில் அனுகூலமான சூழ்நிலை தென்படும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பெரும்பாலையும் நந்தி தேவரையும் வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் மாதமாக திகழப்போகிறது. தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முயற்சிகள் அனைத்தும் கைகூடும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான நல்ல வாய்ப்புகள் உங்கள் வாயில் கதவை வந்து தட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் அனைத்தும் நீங்கும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.

வேலையைப் பொறுத்தவரை சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். இருப்பினும் வேலையில் கவனம் செலுத்த வேண்டும். திடீர் வருமானம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை சமயோகித புத்தியுடன் செயலாற்றி வெற்றி அடைவீர்கள். புதிய தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்பாக ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனையும் விநாயகப் பெருமானையும் வழிபட வேண்டும்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகரமான மாதமாக திகழப்போகிறது. முயற்சிகளில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் அந்த தடைகளை தவிடு பொடியாக்கி வெற்றி அடைவீர்கள். சுப காரியங்கள் கைகூடி வரும். வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தெய்வீக வழிபாட்டில் அதிக ஈடுபாடுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடம் உங்களுடைய செல்வாக்கும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் குழப்பங்கள் ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். இதுவரை உங்கள் மேல் இருந்து வந்த கெட்ட பெயர் நீங்கி செல்வாக்கு மரியாதையும் அதிகரிக்கும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்கள். வியாபாரத்தை பொருத்தவரை கூடுதலாக உழைக்க வேண்டும். இருப்பினும் அதற்குரிய லாபம் கிடைப்பது கடினம் தான். முதலீடு செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஆலோசனை கேட்டு முதலீடு செய்தால் நஷ்டத்தை தவிர்க்க முடியும். வியாபாரத்தை விரிவாக்க கூடிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு தட்சிணாமூர்த்தியையும் பெருமாளையும் வழிபட வேண்டும்.

விருச்சகம்

விருச்சக ராசி காரர்களுக்கு இந்த மாதம் மன நிம்மதி நிறைந்த மாதமாக திகழப்போகிறது. வெற்றிகள் உங்களை தேடி வர போகிறது. புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். இதுவரை இருந்து வந்த சோதனைகள் அனைத்தும் சாதனைகளாக மாறப்போகிறது. தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். உடல் நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் அத்தியாவசியமான செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. புதிய வாகனம் வாங்கக்கூடிய யோகங்கள் யோகம் உண்டு. பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. வீடு வாங்கும் முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது குடும்பத்தில் பிரச்சினைகள் இன்றி மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்பட உதவும்.

வேலையை பொறுத்தவரை உங்களின் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கக்கூடிய மாதமாக திகழப் போகிறது. அதிகாரிகள் உங்களிடம் ஆலோசனை கேட்டு செயல்படும் அளவிற்கு உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் போன்றவை ஏற்படும். வியாபாரத்தை பொருத்தவரை லாபம் படிப்படியாக உயரும். பங்குச் சந்தைகள் மூலம் லாபம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கு முன் ஒரு முறைக்கு பலமுறை நன்றாக படித்து ஆலோசித்து கையெழுத்து இட வேண்டும். முடிந்த அளவு ஒப்பந்த ரீதியான செயல்பாடுகளை தவிர்ப்பது நன்மை பயக்கும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகனையும் ஆஞ்சநேயரையும் வழிபட வேண்டும்

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதம் திகழப்போகிறது. நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கும். இதுவரை வாழ்க்கையில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து சுமூகமான வாழ்க்கை ஏற்படும். பிறரிடம் கொடுத்த பணம் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பிறரிடம் பேசும் பொழுது வார்த்தையில் நிதானமும் கவனமும் தேவை. மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய மாதம். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மன வருத்தங்கள் அனைத்தும் நீங்கும். பிரிந்து இருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிகாரிகளும் உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக நடந்து கொள்வார்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வேலையில் கவனமாக செயல்பட்டால் வேலை சுமை குறைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வியாபாரத்தை பொருத்தவரை லாபம் சுமாராக தான் இருக்கும். இந்த மாதத்தில் புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்ப்பது மிகவும் நன்மை தரும். மறைமுகமாக போட்டிகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரையும் துர்க்கை அம்மனையும் வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் பிரச்சினைகளுக்கு விடிவு காலம் பிறக்கக்கூடிய மாதமாக திகழப்போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்பட்டால் சிறப்பான நல்ல பலன்கள் பெறலாம். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். வீடு வாங்கும் முயற்சியில் இருந்து வந்த தொய்வு நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை இருந்து வந்த மறைமுக எதிரிகள் அனைவரும் விலகி ஓடுவர். விலை உயர்ந்த பொருட்கள் களவு போவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் பிறரிடம் இருந்து விலையுயர்ந்த எந்த பொருட்களையும் வாங்க வேண்டாம்.

வேலையை பொருத்தவரை வேலையில் கவனமாக இருக்க வேண்டும். பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை எளிதில் சமாளித்து விடுவீர்கள். அதனால் உங்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு அந்த முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சூரிய பகவானையும் விநாயகரை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்பட வேண்டிய மாதமாக திகழப் போகிறது. நல்ல வேலை கிடைத்தாலும் பேச்சில் கவனம் இல்லாத சூழ்நிலையில் அந்த வேலை கைநழுவி போக வாய்ப்புகள் இருக்கிறது. பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் முதலீடு செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. பண வரவு திருப்திகரமாக இருக்கும் என்பதால் குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். தடைப்பட்டிருந்த திருமணம் விரைவில் கூடிவரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

வேலையை பொறுத்தவரை அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு, இடமாற்றம் போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரைக்கும் லாபம் அதிகமாக கிடைக்கும். மறைமுக எதிரிகள் விலகி ஓடுவர். புதிதாக முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் விபரீத ராஜ யோகத்தை பெறக்கூடிய மாதமாக திகழப் போகிறது. திடீர் பணவரவு ஏற்படுவதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எதிரிகளால் இருந்து வந்த தொல்லைகள் அனைத்தும் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும் என்றாலும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். அதனால் உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

வேலையை பொறுத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதற்கு ஏற்ற பலனையும் அனுபவிப்பீர்கள். உங்களுக்கு சாதகமான இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. வியாபாரத்தை பொருத்தவரை வியாபாரத்தை விரிவு படுத்தக்கூடிய முயற்சிகள் அனைத்தும் சாதகமாக நடைபெறும். மறைமுக தொல்லைகள் அனைத்தும் நீங்கும். வியாபாரத்தில் இதுவரை ஏற்பட்டிருந்த செலவுகள் அனைத்தும் குறையும். இருப்பினும் புதிய முயற்சிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அம்பிகையையும் சனீஸ்வர பகவானையும் வழிபட வேண்டும்.

- Advertisement -