- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவிநாயகர் மலர்களும் அதன் பலன்களும்

விநாயகர் மலர்களும் அதன் பலன்களும்

- Advertisement -

அனைத்து காரியங்களும் தடையின்றி நிறைவேறுவதற்காக முதலில் வணங்கப்படுபவர் முழு முதல் கடவுளான விநாயகர். “பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது” என்ற பழமொழி, வாழ்க்கையில் எந்த காரியத்தையும் தொடங்கும் போது அவர் வழிபாடு எவ்வளவு முக்கியமென வெளிப்படுத்துகிறது. ஒரு செயலை தொடங்க போய், வேறொன்றாக மாறிவிட்டது என்பதை அது குறிக்கிறது. விநாயகருக்குப் பிடித்த மலர்களை அர்ப்பணித்து வழிபட்டால், வினைகள் அகன்று விரைவில் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. அந்த வகையில் விநாயகர் வழிபாட்டின் பொழுது எந்த மலர் சாற்றி வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்? என்பதைத் தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

விநாயகருக்கு மிகுந்த ப்ரியமானது அருகம்புல் என்பது அனைவருக்கும் தெரியும். பச்சை நிறத்தில் துளிர்க்கும் அருகம்புல்லால் அர்ச்சனை செய்தால் ஆயுள், ஆரோக்கியம், மன அமைதி ஆகியவை கிடைக்கின்றன. குடும்பத்திலும், தொழிலிலும் ஏற்பட்டிருக்கும் தடைகள் அகலவும் உதவுகிறது. அதே போல் சிவப்பு செம்பருத்தி மலர் விநாயகரின் அன்புப் பூவாகும். இந்த மலரைச் சமர்ப்பித்தால் கடன் சுமைகள் குறையும்; பகைவரால் உண்டாகும் சிரமங்கள் நீங்கும். அரளி மலரும் விநாயகர் பூஜையில் முக்கிய இடம் பெறுகிறது. சிவப்பு, வெள்ளை, மஞ்சள் என பல நிறங்களில் கிடைக்கும் இந்த மலரை அர்ப்பணிப்பது மன உறுதி, தைரியம் மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற்றத்தைக் கொடுக்கிறது.

- Advertisement -

மணமிக்க மல்லிகை மலர் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். இது மன நிறைவு, குடும்ப அமைதி ஆகியவற்றைத் தருவதோடு, பெண்களுக்கு சுபீட்சமும், சந்தோஷமும் அதிகரிக்கச் செய்கிறது. தாமரை மலர் அர்ச்சனை மிகவும் பவித்ரமானதாக கருதப்படுகிறது. தாமரையுடன் வழிபடுவது ஆன்மீக முன்னேற்றத்தையும், பக்தியில் நிலைத்தன்மையையும் அளிக்கிறது. மேலும் தொழிலில் பெருமை, செல்வம் ஆகியவற்றையும் சேர்க்கிறது. சாமந்தி மலர் பூஜையில் பயன்படுத்தப்படும் போது வியாபார முன்னேற்றம், சகல காரியங்களிலும் வெற்றி, வீடும், தொழிலும் நல்ல அதிர்ஷ்டம் பெறுவதாக நம்பப்படுகிறது.

விநாயகருக்கு தும்பை மலர் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் பகைவர்களிடமிருந்து வரக்கூடிய தொல்லைகள் தீரும். எதிரிகளும் நண்பர்களாக வாய்ப்புகள் கிடைக்கும். செண்பக பூ கொண்டு விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தை இல்லா தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் மேலும் குடும்பம் செழிப்பாகவும் நல்ல வளமாகவும் இருக்க உதவும்.

- Advertisement -

தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாவதற்கும், வியாபார விருத்தி உண்டாகவும், தொழில் சிறப்பாக அமையவும் விநாயகருக்கு மந்தாரை மலர் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். சிவப்பு நிற மலர்கள் அனைத்தும் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். பூஜையில் பயன்படுத்தப்படும் மலர்கள் எப்போதும் புது சுத்தமாக இருக்க வேண்டும். காய்ந்த மலர்கள் அல்லது மணமில்லாத மலர்களை விநாயகர் அர்ச்சனையில் பயன்படுத்தக் கூடாது என்பது முக்கிய விதியாகும்.

இதையும் படிக்கலாமே:
பண வரவை அதிகரிக்கும் வளர்பிறை சஷ்டி

விநாயகர் வழிபாட்டில் மலர்களைச் சமர்ப்பிக்கும் போது மனமார பிரார்த்தனை செய்வதும் அவசியம். “வக்ரதுண்டாய ஹும், விக்னநாசாய ஹும், ஸ்ரீமஹாகணபதயே நம:” என்ற மந்திரத்துடன் மலர்களை அர்ச்சனை செய்து அர்ப்பணித்தால், அனைத்து தடைகளும் விலகி ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் ஆகியவை வாழ்க்கையில் கிட்டும். விநாயகர் அகவல், விநாயகர் மந்திரங்கள் போன்றவற்றையும் உச்சரிக்கலாம்.

சற்று முன்