விடாப்பிடியான எண்ணெய் கறை உள்ள பாத்திரங்களை பளிச்சிட வைக்க வீட்டில் இருக்கும் இந்த 2 மாவு போதுமே!

oil-vessel-can1
- Advertisement -

சமையலறையில் அடுப்படிக்கு பக்கத்திலேயே எண்ணெய் பாத்திரங்களை வரிசையாக அடுக்கி வைப்பது உண்டு. அப்போது தான் பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும் என்று இவ்வாறு பக்கத்திலேயே வைத்திருப்போம். ஏற்கனவே எண்ணெய் நிரம்பியுள்ள இந்த பாட்டில்கள் அல்லது பாத்திரங்களின் மீது நாம் சமைக்கும் பொழுது அதிலிருந்து தெரிக்கும் எண்ணெயும் படிந்து கொண்டே வருகிறது. இப்படி நாட்பட்ட விடாப்பிடியான எண்ணெய் கறை உள்ள பாத்திரங்களை எந்த விதமான கடினமான பொருட்களை கொண்டும் சுத்தம் செய்யாமல் வீட்டில் இருக்கும் சமையலுக்கு பயன்படுத்தும் இந்த 2 மாவு பொருட்களை வைத்தே ரொம்ப சுலபமாக எப்படி சுத்தம் செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கடினமாக இருக்கும் எண்ணெய் பாத்திரத்தை முதலில் தண்ணீர் எதுவும் ஊற்றி விடாமல் கையில் கொஞ்சம் கடலை மாவை எடுத்துக் கொண்டு உட்புறமும், வெளிப்புறமும் நன்கு தேயுங்கள். கடலை மாவுடன் எண்ணெய் பசை சேர்ந்து உருண்டு வந்துவிடும். பாத்திரத்தில் மூடி முதற்கொண்டு, எந்த இடத்தில் எல்லாம் அதிகமான எண்ணெய் பிசுக்கு ஒட்டிக் கொண்டு இருக்கிறதோ, அந்த இடத்தில் நன்கு கடலை மாவைப் பயன்படுத்தி தேய்த்தால் அவை பாத்திரத்திலிருந்து விலகி கடலை மாவுடன் சேர்ந்து உருண்டு கொண்டு விடும்.

- Advertisement -

இப்படி நீங்கள் வைத்திருக்கும் எல்லா வகையான எண்ணெய் பாத்திரங்கள் அல்லது பாட்டில்களை தேய்த்து சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு பாத்திரத்தில் இருக்கும் கடலை மாவை கீழே கொட்டி விடுங்கள். கைகளால் தட்டி விட்டு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு மீண்டும் கொஞ்சம் கடலை மாவுடன் சம அளவிற்கு அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

கடலை மாவு எண்ணெய் பசையை ஈர்த்துக் கொள்ளும். அரிசி மாவு ஸ்கிரப்பர் போல செயல்பட்டு பாத்திரத்தை பளிச்சிட வைக்கும். இரண்டையும் கலந்து மீண்டும் ஒருமுறை மூடி மற்றும் பாட்டில் அல்லது பாத்திரங்களை தேய்த்துக் கொள்ளுங்கள். பிறகு சிங்கிள் இருக்கும் குழாயை திறந்து தண்ணீரை பயன்படுத்தி பாத்திரத்தை கழுவிக் கொள்ளுங்கள். பிறகு வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் டிஷ் வாஷ் லிக்விட் அல்லது சோப் போட்டு பாத்திரங்களை ஒருமுறை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

90% இதிலேயே உங்களுக்கு எண்ணெய் பசையுள்ள விடாப்பிடியான பாத்திரங்கள் சுத்தமாகிவிடும். தேய்க்க முடியாத மற்றும் ஓரங்களில், கழுத்து பகுதிகளில் இருக்கும் எண்ணெய் பசை படிந்துள்ள இடங்களில் இருக்கும் கறைகளை அகற்ற கொஞ்சம் அரிசி மாவை பயன்படுத்தி லேசாக தேய்த்தாலே போதும், எளிதாக நீங்கி விடும். அதன் பிறகு மீண்டும் டிஷ் வாஷ் லிக்விட் அல்லது சோப்பு பயன்படுத்தி துவைத்தால் கொஞ்சம் கூட சிரமப்படாமல் ரொம்பவே எளிதாக விடாப்பிடியான எண்ணெய் கறை உள்ள பாத்திரங்களை ஜொலிக்க வைக்க முடியும்.

பொதுவாக எண்ணெய் ஊற்றி வைக்கும் பாத்திரங்களை ஒவ்வொரு முறையும் எண்ணெய் மாற்றும் முன்னர் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் எண்ணெயை மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருந்தால் விடாப்பிடியான கறை சேர்ந்து விடும். அதே போல எண்ணெய் பாட்டிலை சுற்றி ஒரு டிஷ்யூ பேப்பரை சுற்றி ரப்பர் பேண்ட் போட்டு வைத்துக் கொண்டால் சமையலின் பொழுது வழியும் எண்ணெயை டிஷ்யூ பேப்பர் இழுத்துக் கொள்ளும். இதனால் எண்ணெய் பாத்திரங்கள் சீக்கிரம் அழுகாமல் இருக்கும்.

- Advertisement -