முகத்தில் சிலருக்கு வறட்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் சருமத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும். அது போல சிலருக்கு அதிகப்படியான எண்ணெய் வழிந்து முகத்தையே கெடுத்து விடும் அளவிற்கு பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகளால் முகப்பருக்களும் அதிகமாக இவர்களுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. இத்தகையவர்கள் வீட்டிலேயே செய்ய வேண்டிய எளிய விஷயம் என்ன? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.
முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு நீங்குவதற்கு வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்கள் நல்ல ஒரு தீர்வை கொடுக்கும். பொதுவாக தினமும் சாதாரணமான முல்தானி மட்டியை தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து ஊறவைத்து பின் உலர விட்டு கழுவினால் எண்ணெய் பிசுக்குகள் கட்டுப்படும் என்று கூறுவார்கள். அதை விட சிறப்பான ஒன்று கடலை மாவு! கடலை மாவை தினமும் தேய்த்து குளிப்பவர்களுக்கு எண்ணெய் பிசுக்கு உள்ள சருமம் மட்டுப்படும்.
இந்த கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் உங்களிடம் கிரீன் டீ இருந்தால் அந்த கிரீன் டீயில் இருக்கக்கூடிய பவுடரை சிறிதளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை முகம் முழுவதும் நன்கு மசாஜ் செய்து கொடுத்தால் முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்கள் நீங்கி, புதிய செல்கள் புதுப்பிக்கப்படும். இதனால் எண்ணெய் பிசுக்குகள் முற்றிலும் கட்டுப்படும். பச்சை தேயிலையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஏராளம் நிறைந்து காணப்படுகின்றன. இது கடலை மாவுடன் சேரும் பொழுது ரொம்பவே எஃபக்டிவ் ஆனா ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும். இது முகப்பருக்களை தோற்றுவிக்கக்கூடிய பாக்டீரியாக்களையும் ஒழித்துக் கட்டும்.
கிரீன் டீயில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக முகப்பருக்களையும், அதனால் உண்டாகக் கூடிய வடுக்களையும் கூட இது எளிதாக நீக்கும். சிறிதளவு கிரீன் டீயுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து முகம் முழுவதும் லேசான மசாஜ் செய்து, பின்னர் உலர விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி வந்தால் முகம் மாசு, மரு இல்லாமல் ஹீரோயின் போல ஜொலிக்கலாம்.
கடலை மாவுடன் கிரீன் டீ இல்லை என்றால் அதற்கு பதிலாக பயன்படுத்திய தேயிலை தூலையும் நீங்கள் பயன்படுத்தலாம். சாதாரணமாக டீ குடித்துவிட்டு வடிகட்டக்கூடிய அந்த மீதம் இருக்கும் டீ தூளை சேர்த்து அதனுடன் சில சொட்டுக்கள் எலுமிச்சை சாறையும் கலந்து பன்னீர் சேர்த்து குழைத்து முகத்திற்கு பேக் போடலாம். முகம், கழுத்து, கழுத்து பின் பகுதி போன்ற எல்லா இடங்களிலும் பேக் போட்டு பின்னர் நன்கு உலர விட்டு விடுங்கள். அரை மணி நேரம் நன்கு உலர்ந்து இறுக ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:
அச்சச்சோ முடி கொட்டுமே என்ற பயம் இனி வேண்டவே வேண்டாம். இந்த 2 பொருள் இருந்தால் போதும். எப்போதுமே உங்க முடி பொடுகு அரிப்பு வராமல், உதிராமல் ரொம்ப ரொம்ப பத்திரமா இருக்கும்.
அந்த சமயத்தில் நீங்கள் தண்ணீரை தொட்டு மென்மையாக மசாஜ் செய்து கொஞ்சம் கொஞ்சமாக போட்ட பேக்கை ஈரத் துணியால் கலைக்க வேண்டும். இது போல நீங்கள் ஈர துணியை வைத்து துடைத்து எடுத்தாலே போதும், முகம் கழுவ வேண்டிய அவசியம் இல்லை! ஒரு முறை இதை செய்துவிட்டு சோப்பு எதுவும் போடாமல் விட்டு விடுங்கள். மறுநாள் பார்க்கும் பொழுது உங்களுடைய முகம் எண்ணெய் பிசுக்குகள் இல்லாமல், முகப்பருக்கள் அமுங்கி போய் இருக்கும். மீண்டும் முகப்பருக்கள் தோன்றாமல் இருக்க தொடர்ந்து இதை பயன்படுத்துங்கள். வெளியில் சென்று விட்டு வந்ததும் இவற்றில் ஒன்றை நீங்கள் செய்து வந்தாலே எண்ணெய் பிசுக்குகள் கட்டுப்படும்.