அச்சச்சோ முடி கொட்டுமே என்ற பயம் இனி வேண்டவே வேண்டாம். இந்த 2 பொருள் இருந்தால் போதும். எப்போதுமே உங்க முடி பொடுகு அரிப்பு வராமல், உதிராமல் ரொம்ப ரொம்ப பத்திரமா இருக்கும்.

hair15
- Advertisement -

எதை செய்தாலும் தலையில் இருந்து முடி கொட்டி விடுமே என்ற பயம் நம்முடைய ஆழ்மனதில் எப்போதுமே இருக்கும். எண்ணெய் வைக்கும் போது, ஹேர் பேக் போடும்போது, தலை கசக்கும்போது, வெயிலில் செல்லும் போது, இந்த பயம் வருவது எல்லோருக்கும் இயற்கைதான். ஆனால், என்ன பிரச்சனை வந்தாலும் உங்களுடைய முடி ஸ்ட்ராங்காக தலையில் நிற்க ஒரு ரெமிடி உள்ளது. அதைத்தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த இரண்டு பொருட்களை சேர்த்து ஹர்பாக் போட்டால் ஜென்ம ஜென்மத்திற்கு உங்களுக்கு பொடுகு சுண்டு அரிப்பு பிரச்சனை வரவே வராது. பிறகு முடி உதிர்வும் இருக்காது. முடி திக்காக அடர்த்தியாக வளர தொடங்கி விடும். இரண்டு பொருட்களை வைத்து அந்த எளிமையான ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது தெரிந்து கொள்வோமா.

தலை முடி பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஹேர் பேக்:
இந்த ஹேர் பேக்கை தயார் செய்ய நமக்கு முட்டை, லேசாக புளித்து தயிர் இந்த இரண்டு பொருட்கள் போதும். ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள். மஞ்சள் கருவோடு ஊற்றிக்கொண்டாலும் சரி, இல்லை வெள்ளை கரு மட்டும் எடுத்துக் கொண்டாலும் சரி, அது உங்கள் விருப்பம். இதோடு தயிர் ஊற்றிக் கொள்ளவும். 1 முட்டை என்றால், 2 டேபிள் ஸ்பூன் தயிர் சரியாக இருக்கும். 2 முட்டை சேர்த்தால், 4 டேபிள் ஸ்பூன் தயிர் சரியாக இருக்கும். உங்களுடைய முடிக்கு ஏற்ப இந்த இரண்டு பொருட்களையும் ஒரு பவுலில் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் கையை வைத்து இந்த இரண்டு பொருட்களையும் கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். ஹேர் பேக் போடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே உங்களுடைய தலையில் தேங்காய் எண்ணெயை வைத்து சிக்கு எடுத்து விடுங்கள். பிறகு இந்த ஹேர் பேக்கை எடுத்து தலையில் மசாஜ் செய்து, அப்ளை செய்ய வேண்டும். குறிப்பாக பொடுகு அரிப்பு இருப்பவர்கள் இந்த பேக்கை போட்டு உங்கள் விரல்களின் நுனியை வைத்து மசாஜ் செய்யுங்கள். பேக் போடும் போது நகத்தை வைத்து எப்போதுமே மசாஜ் செய்து சுரண்டக்கூடாது.

ஸ்கேல்ப் முழுவதும் இந்த பேக் போட்டுவிட்டு பிறகு, முடியை பாகம் பாகங்களாக பிரித்துவிட்டு நுனி முடி வரை இந்த பேக்கை போட்டுக் கொண்டை கட்டி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மைல்டான ஷாம்பு போட்டு தலையை அலசி விட்டால், முடி ஸ்ட்ராங்காக ஷைனிங்காக மாறிவிடும். வாரத்தில் ஒரு நாள் இந்த பேக்கை தொடர்ந்து போட்டு வர தலையில் இருக்கும் சுண்டு எல்லாம் படிப்படியாக குறைய தொடங்கும்.

- Advertisement -

எப்போதுமே நாம் சாப்பிடக்கூடிய பொருட்களை பயப்படாமல் தலையில் ஹேர் பேக்காக போடலாம். அதேசமயம் முட்டை, பச்சைப்பயிறு, தயிறு, நெல்லிக்காய், கருவேப்பிலை, இவைகளை தலைக்கு ஹேர் பேக் போடுவதோடு சேர்த்து உணவோடும் சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் தலைமுடி வளரும். ஹேர் பேக்கை மட்டும் போட்டுவிட்டு முழு முடி வளர்ச்சியை எதிர்பார்ப்பது ரொம்ப ரொம்ப தவறு.

இதையும் படிக்கலாமே: ஒவ்வொரு வயது கூடும் போதும் உங்களுடைய முடியின் அழகும் கூடிக் கொண்டே செல்ல வேண்டுமா? கட்டுக்கடங்காத கருமையான கூந்தலை கொடுக்கும் கரிசலாங்கண்ணி ஹேர் பேக்.

ஆகவே ஆரோக்கியம் நிறைந்த பொருட்கள் சாப்பிடுவதையும் கொஞ்சம் கவனத்தில் வைத்துக் கொண்டு, இந்த ஹேர் பேக்கையும் முயற்சி செய்தால் முழு பலன் கிடைக்கும். அழகு குறிப்பு பிடித்தவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம்.

- Advertisement -