- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஎன்னதான் முகத்தை கழுவினாலும் 1 மணி நேரத்திற்குள் எண்ணெய் வழிகிறதா? அப்படின்னா நீங்க இத ட்ரை...

என்னதான் முகத்தை கழுவினாலும் 1 மணி நேரத்திற்குள் எண்ணெய் வழிகிறதா? அப்படின்னா நீங்க இத ட்ரை பண்ணி பாருங்க இனி உங்க முகத்தில் கொஞ்சம் கூட எண்ணெயே வழியாது!

- Advertisement -

எல்லோருக்கும் ஒரே மாதிரியான சரும அமைப்பு இருப்பதில்லை. சிலருக்கு வறண்ட சருமம், சிலருக்கு சென்சிடிவான சருமம், சிலருக்கு எண்ணெய் வழிகிற தன்மை உள்ள சருமம் இப்படி வித்தியாசமான சரும அமைப்பை கொண்டுள்ள நமக்கு அதிகப்படியான எண்ணெய் வழிவது சரும நோய்களை உண்டாக்குகிறது. இந்த அதிகப்படியாக இருக்கும் எண்ணெய் சுரப்பு நிற்பதற்கும், மீண்டும் எண்ணெய் வழியாமல் நம்முடைய முகம் எப்பொழுதும் பிரஷ்ஷாக இருப்பதற்கும் நாம் கடைபிடிக்க வேண்டியது என்ன? வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய ஆயில் ஸ்கின் பேஸ்டு டைப் சீக்ரெட் பியூட்டி டிப்ஸ் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்

எண்ணெய் பிசுக்குள்ள சருமம் உடையவர்களுக்கு என்ன தான் சோப்பு, கிரீம் போட்டு முகத்தை கழுவி வைத்தாலும் ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் எண்ணெய் வழிய ஆரம்பித்து விடும். இதனால் நீங்கள் போட்ட மேக்கப் கூட உங்களுடைய முகத்தில் நிற்காது. அது மட்டுமல்லாமல் எண்ணெய் தன்மை சருமத்தில் இருப்பதால் நீங்கள் வெளியில் தூசு, மாசு போன்ற இடங்களில் பயணம் செய்யும் பொழுது அதிவேகமாகவே உங்களுடைய சருமத்தில் சென்று அது ஒட்டிக் கொண்டு விடும். இதனால் சரும துளைகள் அடைப்பட்டு முகப்பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும்.

- Advertisement -

கடுமையான வலியை தரக்கூடிய முகப்பருக்கள் எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு தான் அதிகம் வருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே இத்தகையவர்கள் எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு பேஸ் பேக் தான் இது! இந்த ஃபேஸ் பேக் வாரம் ஒருமுறை சிரமப்படாமல் செய்து வந்தால் இரண்டிலிருந்து மூன்று மாதத்திற்குள் எண்ணெய் சுரப்பிகள் சரும துளைகளுக்குள் இருந்து வெளிவருவது தடுக்கப்பட்டு விடும். இதனால் உங்களுடைய முகம் இனி ஆய்லி ஸ்கின்னாக இருக்காது. சும்மா பளிச்சுன்னு தகதகன்னு தங்கம் போல ஜொலிக்கலாம்.

சரி, அதற்கு முதலில் ஒரு சிறிய அளவிலான பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு கடலை மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். கடலை மாவு இல்லை என்றால் பயத்தம் மாவையும் நீங்கள் சேர்க்கலாம். பின்னர் இதை பேஸ்ட் போல கரைக்கக் கூடிய அளவிற்கு ஆரஞ்சு பழ ஜூஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரஞ்சு பழம் இல்லை என்றால் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பின்னர் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் அல்லது கோக்கனட் ஆயில் ஏதாவது ஒரு ஆயிலை கலந்து கொள்ளுங்கள். ஏற்கனவே எண்ணெய் சருமம், இதில் எண்ணெய் சேர்க்க வேண்டுமா? என்று நினைக்கலாம். ஆனால் இது சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவும் என்பதால் எண்ணெயை தாராளமாக சேர்த்து பேக் போடலாம். முகம் முழுவதும் இந்த பேக்கை நீங்கள் ரப் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
உங்க முகம் பால் போல பளிச்சியென்று மாற, தினமும் 5 நிமிஷம், 5 நாள் மட்டும் இதை செஞ்சு பாருங்க, அப்புறம் நம்மளா இவ்வளவு கலராக மாறிட்டோம்ன்னு நீங்களே நினைப்பீங்க.

கீழிருந்து மேலாக கிளாக் மற்றும் ஆன்டி கிளாக் வைஸ் பேஷியல் செய்வது போல தேயுங்கள். பிறகு 20 நிமிடம் உலர விட்டுவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை அலம்பி கொள்ளுங்கள். அவ்வளவுதான், இது போல நீங்கள் வாரம் ஒரு முறை 20 நிமிடம் ஒதுக்கி செய்தால் இனி உங்கள் முகத்தில் எண்ணெய் வழியவே செய்யாது!

சற்று முன்