தமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் சிலை எங்குள்ளது தெரியுமா ?

1918
vinayagar
- விளம்பரம் -

பிள்ளையாரே அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவராக கருதப்படுகிறார். அவரை வணங்கிய பின்பே யாகம் முதல் அனைத்து வேலைகளும் நடைபெறுகின்றது. இப்படி பல சிறப்புக்கள் பெற்ற பிள்ளையாரின் முதல் சிலை தமிழ் நாட்டில் எந்த பகுதியில் உள்ளது, அதன் சிறப்பு என்ன வாருங்கள் பார்ப்போம்.

vinayagar

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி என்ற கிராமத்தில் உள்ள கற்பக விநாயர் சிலையே தமிழ் நாட்டில் வடிக்கப்பட்ட முதல் விநாயகர் சிலை என்று கூறப்படுகிறது. ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் இந்த கோவில் குடையப்பட்டுள்ளது. சுமார் 1600 வருடங்கள் பழமைவாய்ந்த இந்த கோவிலில் 2 மீட்டர் உயரத்தில் காட்சி தருகிறார் கற்பக விநாயகர்.

- Advertisement -

வடக்குத் திசை பார்த்து வீற்றிருக்கும் கற்பக விநாயகர், கற்பக மரத்தை போல, கேட்ட அனைத்தையும் கொடுத்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவில் முற்கால பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறது கல்வெட்டு ஆதாரங்கள்.

vinayagar

தற்காலத்தில் இந்த ஊர் பிள்ளையார்பட்டி என அழைக்கப்பட்டாலும் பழங்காலத்தில் இந்த ஊருக்கு பல்வேறு பெயர்கள் இருந்துள்ளன. எருக்காட்டூர், திருவீங்கைக்குடி, மருதங்குடி, திருவீங்கைச்வரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என பல பெயர்கள் இந்த ஊருக்கு இருந்துள்ளதை கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் அறியலாம்.

vinayagar

இதையும் படிக்கலாமே:
தோஷங்களை நிவர்த்தி செய்யும் பிள்ளையார் மந்திரம்

பொதுவாக இரண்டு கரங்களை கொண்ட விநாயகரை பார்ப்பதென்பது அரிதினும் அரிது. இங்குள்ள விநாயர் இரண்டு கரங்களோடு இருக்கிறார். இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில் மட்டுமே இரண்டு கரங்களோடு விநாயகர் சிலை உள்ளது என்று கூறப்படுகிறது. இந்த அற்புத விநாயகரை செதுக்கிய சிற்பியின் பெயர் ‘எக்காட்டூர் கோன் பெருபரணன்’.

Advertisement