தோஷங்களை நிவர்த்தி செய்யும் பிள்ளையார் காயத்ரி மந்திரம்

vinayagar-3

முழு முதற் கடவுளான விநாயகரை தொழுவதன் பலனாக சனி தோஷம் முதல் ஜாதகத்தில் உள்ள பல விதமான தோஷங்கள் நீங்கும் என்பது உறுதி. அந்த வகையில் தினமும் வினாயகரை வணங்குகையில் கூற வேண்டிய பிள்ளையார் காயத்ரி மந்திரம் இதோ.

pillayar

விநாயகர் காயத்ரி மந்திரம்:

ஓம் ஏக தந்த்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமகி
தன்னோ தந்த் ப்ரஜோதயாத்:

பொது பொருள்:
கடவுள்களில் முதன்மையானவரும், உடைந்த தந்ததையும் கொண்டவரே உங்களை நான் வணங்குகிறேன். யானை முகத்தானே எனக்கு சிறப்பான அறிவை தந்து என்னை ஆசிர்வதியுங்கள்.

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக நம் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி மிக சிறந்த பலன்களை பெறலாம். அதோடு நமது தோஷங்கள் விலகி எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
72 தலைமுறை புண்ணியம் செய்தவர் மட்டுமே ஜபிக்க கூடிய காளி மந்திரம்

- Advertisement -

முழு முதற் கடவுள் விநாயகர்:
எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் அதற்கு நாம் அனைவரும சற்று முன்னதாகவே அக்காரியம் செய்வதற்கான முன் தயாரிப்புகளை செய்திருப்பது அவசியமாகும். நம் வேத புராணத்திலும் இந்த பாரத மக்கள் படித்து நல்லொழுக்கம் பெற்று வாழ மகாபாரதம் என்கிற அமரக் இதிகாசத்தை இயற்ற முன்னமே தீர்மானித்திருந்தார் வேத வியாசர்.

Vellerukka Vinayagar

அப்போது எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்கும் அந்த விநாயகப் பெருமானை வணங்கி, தனது படைப்பை இயற்ற எண்ணிய போது அந்த விநாயகப் பெருமானே அவருக்காக நேரில் தோன்றி வியாசர் கூற அந்த மஹாபாரத இதிகாசத்தை விநாயகப் பெருமானே தன் கைப்பட எழுதியதால் அந்த ஈடுஇணையற்ற இதிகாசம் இன்று வரை புகழோடு உள்ளது. அது போல நாமும் நமது வாழ்க்கைக்கு உதவக்கூடிய எந்த ஒரு நற்காரியத்தையும் அந்த விநாயகப் பெருமானை வணங்கி தொடங்கும் வழக்கத்தை கடைபிடிப்பது நல்லது இதை வாழ்நாள் முழுதும் பின்பற்றி வரக் கூடிய செயலாக நாம் பின்பற்றவேண்டும் இதனால் நாம் வாழ்வில் விரும்பிய அனைத்து இன்பங்களும் அந்த விநாயகர் பெருமாளின் அருள் ஏற்படும்.

English Overview:
Here we have Vinayagar Gayatri mantra in Tamil. This can also be called as Vinayagr mantra in Tamil. By chanting this mantra astrological dhosa will get rectified.