இட்லி தோசைக்கு வித்தியாசமான 5 மினிட் சட்னி! 2 வகையான சூப்பரான, சுலபமான இந்த சட்னி ரெசிபிய யாரும் மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!

chutney1

இட்லி தோசைக்கு சைட் டிஷ் தேடும் கஷ்டம் என்னவென்று குடும்பத் தலைவிகளை கேட்டால்தான் தெரியும். எதை செய்து வைத்தாலும் காலை உணவு தொண்டைக்குழியில் இறங்காது. உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே வித்தியாசமான முறையில், அதுவும் மிக மிக சுலபமாக ஒரு சட்னி ரெசிபியை தான் இன்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். காலையில் எவ்வளவு அவசரமாக இருந்தாலும் ஐந்தே நிமிடத்தில் இந்த சட்னியை அரைத்து அசத்த போறீங்க. குறிப்புக்கு செல்லலாமா?

milagu-chutney

தக்காளி பூண்டு சட்னி
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, வரமிளகாய் – 6 லிருந்து 8 காரத்திற்கு ஏற்ப, பொட்டுக்கடலை – 3 ஸ்பூன், பூண்டு தோலுரித்தது – 10 பல், சின்ன வெங்காயம் – 15 பல், பெருங்காயம் – 2 சிட்டிகை, கறிவேப்பிலை – 1 கொத்து, இவைகளைப் போட்டு முதலில் நன்றாக வதக்கி விட வேண்டும்.

மிதமான தீயில் மூன்றிலிருந்து நான்கு நிமிடங்கள் வரை இந்த பொருட்கள் எல்லாம் வதங்கிய உடன், இறுதியாக ஒரு மீடியம் சைஸ் தக்காளி பழத்தை போட்டு, 2 நிமிடங்கள் வதக்கி, இந்த கலவையை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துவிடுங்கள். அதன் பின்பு மிக்ஸியில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு, ரொம்பவும் தண்ணீர் பாதத்திலும் அறைக்கக் கூடாது. கெட்டியாகவும் அரைக்கக் கூடாது. வெங்காயச் சட்னி பதத்திற்கு அரைத்துக் கொண்டால் இதன் சுவை அருமையாக இருக்கும்.

மொத்தமாக இந்த சட்னியை செய்வதற்கு வெறும் 5 நிமிடங்கள் தான் எடுக்கும். ஆனால் சுவை அந்த நாள் முழுவதும் உங்க நாவில் இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால், முயற்சி செய்து பாருங்கள். சரி இப்போது அந்த இரண்டாவது சட்னியை எப்படி செய்வது பார்த்து விடலாமா?

வெங்காயம் வரமிளகாய் சட்னி
ஒரு பத்திலிருந்து பதினைந்து (10-15) வரமிளகாயை காம்பு நீக்கிவிட்டு, தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன்பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் இந்த வரமிளகாய் சேர்த்து, 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு ஒரே ஒரு பூண்டுப் பல் வைத்து 80% அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

தேவைப்பட்டால் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கறிவேப்பிலையை இந்த சட்னிக்கு தாளித்துக் கொள்ளலாம். தாளிப்பு தேவை இல்லை என்றால் அந்த சட்னியை கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். காரசாரமான வித்தியாசமான சுவையில் வரமிளகாய் பச்சை வெங்காயம் சேர்ந்து அசத்தலான சுவையில் இருக்கும். இதையும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க! புடிச்சிருந்தா அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.