2 நிமிஷத்துக்குள்ள நல்லா சுள்ளுன்னு சூப்பரான காரச் சட்னி ரெடி பண்ணிடலாம் தெரியுமா? சுட சுட இட்லியோட இந்த சட்னியை கொடுத்து பாருங்க இன்னைக்கெல்லாம் நீங்க இட்லி சுட்டாலும் பத்தாது.

- Advertisement -

இட்லிக்கு எத்தனையோ வகை சைடு டிஷ் இருந்தாலும் இந்த காரச் சட்னி வைத்து சாப்பிடும் போது அதன் சுவையே தனியாகத் தான் இருக்கும். அதிலும் காரம் அதிகமாக விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இது போல சட்னி அரைச்சு கொடுத்து பாருங்க கணக்கில்லாமல் சாப்பிடுவாங்க. அதுமட்டுமில்லாமல் இந்த சட்னி செய்ய அதிக நேரம் பிடிக்காது அதிக பொருள் செலவும் கிடையாது. வேலைக்கு கிளம்பும் கடைசி நேரத்தில் கூட சட்டுனு ஒரு சைட் டிஷ் செய்யணும்னா இந்த சட்னியும் செஞ்சு முடிச்சிடலாம். டேஸ்ட்டும் அட்டகாசமா இருக்கும். வாங்க அந்த சட்னி ரெசிபியை எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

தேவையான பொருட்கள்

பெரிய சைஸ் வெங்காயம் – 4, காய்ந்த மிளகாய் – 10, புளி – சின்ன நெல்லிக்காய் அளவு, உப்பு – அரை டீஸ்பூன், பூண்டு – 6 பல் உரித்தது, நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், கடுகு -1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – ஸ்பூன், கறிவேப்பிலை – 1கொத்து.

- Advertisement -

செய்முறை

இந்த சட்னி செய்வதற்கு முதலில் வெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதில் வெங்காயத்தை மட்டும் மீடியம் சைஸில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது மிக்ஸி ஜாரில் மிளகாய் காம்பு கிள்ளி சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மிளகாய் எந்த அளவிற்கு மைய அரைக்க முடியுமோ அந்த அளவிற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து இத்துடன் வெங்காயம், பூண்டு, உப்பு, புளி அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் லேசான கொரகொரப்புடன் அரைத்துக் கொள்ளுங்கள். இதில் சேர்த்து இருக்கும் வெங்காயம் காய்ந்த மிளகாய் இரண்டும் உங்களின் காரத்திற்கு ஏற்றார் போல் கூட்டியும் குறைத்தும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வேளை உங்களுக்கு காரம் குறைவாக வேண்டும் ஆனால் இதே போன்ற நிறத்தில் வேண்டுமென்றால் காய்ந்த மிளகாயின் அளவை குறைத்து விட்டு காஷ்மீரி சில்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அரைத்த சட்னியை ஒரு பவுலில் மாற்றி ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு சிறிய தாளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு போட்டு பொறிந்த பிறகு உளுத்தம் பருப்பு சேர்த்து அதன் நிறம் மாறிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு கறிவேப்பிலையை சேர்த்த பிறகு இந்த தாளிப்பை சட்னியில் ஊற்றி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தோசை செய்ய போறீங்களா? அப்போ இந்த காய்கறியை பயன்படுத்தி தோசை ஊத்தி பாருங்க. தோசையோட டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

இந்த சட்னியில் நாம் வெங்காயம் மிளகாய் அனைத்தையும் பச்சையாக சேர்த்திருப்பதால் தாளிக்கும் போது எண்ணெய் அதிகமாக ஊற்றி சேர்த்த பிறகு அந்த எண்ணெயை சுடச்சுட அப்படியே சட்னியில் ஊற்றி கலந்து விட வேண்டும் இதனால் சட்னியில் இருக்கும் பச்சை வாடை முழுவதுமாகவே நீங்கி விடும். ஒரே ஒரு முறை இந்த சட்னி அரைச்சு கொடுத்து பாருங்க இனி காரச் சட்னின்னா இப்படித் தான் அரைக்கணும்னு சொல்லி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.

- Advertisement -