வெங்காயம் மட்டும் இருந்தால் போதும். சுடசுட சூப்பரான இந்த ‘ஆனியன் ரைஸ்’ ரெசிபி 15 நிமிஷத்துல செஞ்சிடலாம்.

onion-rice
- Advertisement -

வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை. என்ன சாதம் செய்வது என்று தெரியவில்லை எனும்போது ரொம்ப ரொம்ப ஈசியாக இந்த வெங்காய சாதத்தை செய்து கொடுங்கள். குறிப்பாக பேச்சாளராக இருப்பவர்களுக்கு இந்த வெரைட்டி ரைஸ் சாதம் ரொம்ப ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்து ஆனியன் ரைஸ் சுலபமாக எப்படி செய்வது தெரிந்து கொள்வோமா.

முதலில் 1 கப் அரிசியை, சாதம் வடித்து உதிரி உதிரியாக ஆற வைத்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 2 பேர் சாப்பிடும் அளவிற்கு சாதம் இருந்தால் கீழே சொல்லப்படும் அளவுகள் சரியாக இருக்கும். (பாசுமதி அரிசியையும் வடித்து இந்த சாதம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். சாதாரண சாப்பாட்டு அரிசி அல்லது பச்சரிசியை கூட உதிரி உதிரியாக வடித்து இந்த சாதம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். மீதமான சாதத்திலும் இந்த வெரைட்டி ரைஸ் செய்யலாம்)

- Advertisement -

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 3 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெய் சூடானதும் நீளவாக்கில் வெட்டிய மீடியம் சைஸ் – 1 வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுத்து இந்த வெங்காயத்தை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். (இந்த வெங்காயத்தை வெரைட்டி ரைஸ் செய்தபின்பு அதன் மேலே அழகாக தூவி விட வேண்டும்.)

இப்போது அதே கடாயில் மீதம் எண்ணெய் இருக்கும் அல்லவா. அந்த எண்ணெயில் கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், கடலைப்பருப்பு – 3 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், சேர்த்து இந்த பொருட்கள் அனைத்தும் பொரிந்து வந்தவுடன், மீடியம் சைஸில் இருக்கும் இரண்டு பெரிய வெங்காயங்களை நீள்வாக்கில் வெட்டி எண்ணெயில் போட்டு 2 லிருந்து 3 நிமிடங்கள் வதக்கி கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் நன்றாக வதங்கிய வந்தவுடன் பொடியாக நறுக்கிய சிறிய சைஸ் தக்காளி பழம் – 1, தோலுரித்து பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 10, கருவேப்பிலை – ஒரு கொத்து, பச்சை மிளகாய் குறுக்கே கீனியது – 2, இந்த பொருட்களையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

onion-rice1

அடுத்தபடியாக மஞ்சள்தூள் – 1/2  ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1/2 ஸ்பூன், இந்த மூன்று பொடிகளையும் சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் போல எண்ணெயில் வதக்கி விட்டு, தயாராக எடுத்து வைத்திருக்கும் ஆறிய சாதத்தை கடாயில் கொட்டி சாதத்திற்கு தேவையான அளவு உப்பு தூளை தூவி, கடாயில் இருக்கும் மசாலாவையும் சாதத்தையும் ஒன்றாக கலந்து விடவேண்டும்.

onion-rice2

மூன்று நிமிடங்கள் கடாயில் இருக்கும் சாதத்தை மசாலாவுடன் கலந்து சூடு செய்து அடுப்பை அணைத்துவிட்டு, இதன் மேலே வறுத்து வைத்திருக்கும் வெங்காயங்களை தூவி, கொஞ்சம் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழைகளைத் தூவி, ஒரு மூடி போட்டு இந்த வெரைட்டி ரைஸை 10 நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு, அதன் பின்பு ருசித்துப்பாருங்கள். இதன் ருசி அட்டகாசமாக இருக்கும். சட்டென சூப்பர் வெரைட்டி ரைஸ் தயார். ஒருமுறை இந்த ரைசஸ் செய்து பேஸ்ட் பண்ணி பார்த்தீங்கன்னா திரும்பத்திரும்ப கட்டாய செஞ்சுட்டே இருப்பீங்க.

- Advertisement -