வெங்காய தோலை குப்பையிலா போட்றீங்க! இந்த விஷயம் மட்டும் தெரிந்தால், வெங்காய குடோனில் இருந்து வெங்காயத் தோலை, காசு கொடுத்து வாங்கி, வீட்டுக்கு எடுத்து வருவீங்க!

vengayam
- Advertisement -

குப்பையில் தூக்கி போடும் வெங்காயத் தோலுக்குள் எவ்வளவு பெரிய ரகசியம் ஒளிந்துள்ளது என்பதை இந்தக் குறிப்பைப் படித்த பின்பு நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். குப்பையில் தூக்கி போடும் வெங்காய தோலை தனியாக சேகரித்து வாருங்கள். ஈரப்பதம் இருக்கக்கூடிய வெங்காய தோலை உலர வைத்து எடுத்து சேகரிக்க வேண்டும். ஈரத்தோடு அந்த வெங்காயத் தோல்களை சேகரித்து வைத்தால் கெட்ட வாடை வந்து விடும். இந்த வெங்காயத் தோலை வைத்து 2 பயனுள்ள குறிப்புகளை இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நீங்கள் சேகரித்த எல்லா வெங்காய தோல்களையும் ஒரு துணிப்பையில் போட்டுக்கொள்ள வேண்டும். மைக்கா கவரில் வெங்காய தோலினை சேர்த்து வைக்கக் கூடாது. அப்படி இல்லை என்றால் உங்களுடைய வீட்டில் பழைய தலையணை உறை இருக்குமல்லவா. அதில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று கைப்பிடி வெங்காயத் தோல்கள் சேர்ந்ததும் அதை மடித்து ஒரு ரப்பர் பேண்ட் அல்லது நூல் போட்டு கட்டி வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக வெங்காய தோல் இருக்கும் பட்சத்தில் இது சிறிய தலையணை போல இருக்கும்.

- Advertisement -

இதை எதற்கு பயன்படுத்தலாம். நிறைய பேருக்கு மூலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். அதாவது மலம் வெளியேறும் இடத்தில், மூலம் வெளிவந்து பல தொந்தரவுகளை கொடுக்கும். இதற்கு அறுவைசிகிச்சை ஒன்று மட்டுமே தீர்வு அல்ல. சில பேருக்கு மலம் கழித்த பின்பு, மலம் கழித்த இடம் கடுப்பாக இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் அனைவருக்கும் இந்த வெங்காய தோல் தலையணை பயனுள்ளதாக அமையும். இதை எப்படி பயன்படுத்தலாம்.

vengayam

நீங்கள் நாற்காலியில் அமரும் போதோ அல்லது தரையில் அமரும் போதோ, நீங்கள் உட்காரக்கூடிய இடத்தில், இந்த தலையணையை வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி 1 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் இந்த வெங்காய தோல் தலையணையின் மீது அமர்ந்து பாருங்களேன். உங்களுக்கு மூலத்தால் இருக்கக் கூடிய பாதிப்புகள் படிப்படியாக குறைவதை நிச்சயம் உணர முடியும். அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் பின்பற்றி வந்த பழக்கங்களில் இதுவும் ஒன்று. காலப்போக்கில் மறைந்து விட்டது.

- Advertisement -

நிறைய வெங்காயத் தோல்களை நீங்கள் சேகரித்து விட்டால், வெங்காயத் தோல்களை பழைய தலையணை உறைக்குள் போட்டு, ஒரு தலையணை போலவே தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை நிரந்தரமாக உங்களுடைய நாற்காலியின் மீது போட்டு வைத்து விடுங்கள். தினம்தோறும் அதில் அமர்ந்து கொண்டே இருக்கும் பட்சத்தில், நிச்சயமாக உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

vengayam

அடுத்தபடியாக வெங்காய தோலில் தலை முடி உதிர்வு பிரச்சனைக்கான தீர்வு இருக்கின்றது. ஒரு டம்ளர் அளவு தண்ணீரை நன்றாக கொதிக்க விட்டு, அதில் சில வெங்காய தோல்களைப் போட்டு நன்றாகக் கொதிக்க விடுங்கள். அந்த தண்ணீர் இளஞ் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும். வெங்காயத்தில் இருந்து தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்து விடுங்கள். இந்த தண்ணீர் நன்றாக ஆறியதும் இந்த தண்ணீரை தலையில் தடவி மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதை செய்தால் முடி உதிர்வு பிரச்சினை படிப்படியாக நிச்சயம் குறையும். இதையும் ட்ரை பண்ணி பாருங்க. பக்க விளைவுகள் வருவதற்கு வாய்ப்பே இல்லை.

- Advertisement -