மனசு குழப்பமாக இருக்கும் போது இந்த தீபத்தை ஏற்றுங்கள். ரெண்டே நாளில் எல்லா பிரச்சனையும் போயே போச்சு சொல்லுவீங்க!

sivan-deepam

திருஷ்டி செய்யும் வேலைகளை நீங்கள் அறிவீர்களா? பொறாமை கண்கள், கண் திருஷ்டி போன்றவை சாதாரண விஷயம் அல்ல. இதனால் நாம் சில விஷயங்களில் பாதிக்கப்படுவது உண்மைதான். இதனை எதிர்மறை ஆற்றல் என்று கூறுகிறார்கள். நேர்மறை ஆற்றல்கள் எப்படி இருக்கிறதோ அதே மாதிரிதான் எதிர்மறை ஆற்றல்களும் நம்முடன் இருக்கிறது. நாம நல்லா இருந்தாலே சில பேருக்கு பொறாமையா இருக்கும். நமக்கு நல்லது செய்வதற்கு நாலு பேர் இருந்தால், கெட்டது செய்வதற்கு நாற்பது பேர் இருப்பார்கள்.

omathai

நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்தாலும் நம்மள பார்த்து பொறாமை படுபவர்களும் நம்முடைய சுற்றத்தில் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இது போன்ற கண் திருஷ்டியை ஊமத்தை காயால் நீக்கிவிட முடியும். நமக்கு ஏற்படும் பாதிப்பை நம்மால் தடுத்து பாதுகாத்துக் கொள்ள முடியும். மிகவும் சுலபமான வழிபாடு தான். இதற்கென்று தனியாக நீங்கள் எந்த நாளையும் தேர்ந்தெடுக்க தேவையில்லை. நீங்கள் பூஜை செய்யும் நல்ல நாட்களில் ஊமத்தை தீபத்தை ஏற்றினால் கண் திருஷ்டிகள் தடுக்கப்படும். எப்படி இந்த தீபம் ஏற்றுவது என்பதைக் குறித்த தகவல்களை இப்பதிவில் நாம் காணலாம்.

நீங்கள் தினமும் பூஜை செய்பவராக இருந்தாலும் சரி, செவ்வாய், வெள்ளி போன்ற கிழமைகளில் பூஜை செய்பவராக இருந்தாலும் சரி, ஒரு சிலர் அமாவாசை, பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி, ஏகாதசி, சஷ்டி என்று எல்லா நல்ல நாளிலும் பூஜை செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இது போன்ற நாட்களில் நீங்கள் பூஜை செய்யும் வேளையில் தவறாமல் இந்த தீபத்தையும் ஏற்றினால் எப்போதும் உங்களுக்கு கண் திருஷ்டி அல்லது பொறாமை கண்களோ பாதிப்பை உண்டாக்காது. இது பல பேரும் அறியாத ரகசியமாகவே உள்ளது.

omathai1

சிவனுக்கு உரிய இலையாக வில்வ இலை உள்ளது. அதற்கு இணையாக ஊமத்தை இலையும் உள்ளது. ஊமத்தை இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதால் நன்மைகள் பல நடைபெறும். வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. ஊமத்தை காயை எடுத்துக்கொண்டால் அதன் மேல் பகுதியில் முட்களாக இருக்கும். முட்கள் கொண்ட இந்த காயால் தீபம் ஏற்றினால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் முட்களை அடியோடு நீக்கிவிட முடியும்.

- Advertisement -

எந்த பிரச்சனையாக இருந்தாலும், எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் சிவபெருமானை நினைத்து ஊமத்தை தீபத்தை ஏற்றுங்கள். இரண்டே நாட்களில் உங்களது பிரச்சினைகள் நீங்கி தீர்வு கிடைத்துவிடும். பொதுவாக ஊமத்தை தீபத்தை நீங்கள் எந்த நாளில் ஏற்றுகிறீர்களோ அதே நாளில் ஒன்பது வாரங்கள் ஏற்ற வேண்டும். நீங்கள் வெள்ளி அன்று ஏற்றினால் ஒன்பது வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து ஏற்றி வந்தால் போதும் வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

omathai2

ஊமத்தை காயின் காம்பை நீக்கினால் உள்ளே விதைகள் இருக்கும். விதைகளை எடுத்து விட்டால் அகல் போன்ற வடிவம் கிடைத்துவிடும். ஊமத்தை காயின் அடியில் மண் அகல் ஒன்றை வைத்து கொள்ளுங்கள். அதன் உருண்டை வடிவம் தரையில் நிற்க்காது. அதன் உள்ளே வெண்கடுகு சிறிதளவு போட்டுக் கொள்ளுங்கள். சிவபெருமானுக்கு உகந்த எண்ணெய் இலுப்பை எண்ணெய் எனவே வேறு எந்த எண்ணெயும் பயன்படுத்தாமல் இலுப்பை எண்ணெய்யை பயன்படுத்தி தீபம் ஏற்றுங்கள். பிரச்சனைகளில் இருந்து வெளியே வந்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டுல இந்த தவறுகளை நீங்க செய்தால் கட்டாயம் கஷ்டம் உங்களை விடாமல் பிடித்துக் கொண்டுதான் இருக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Oomathankai deepam in Tamil. Oomathai kai Tamil. Oomathankai in Tamil. Sivan valipadu murai Tamil. Oomathai ilai.