- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஒரே இரவில் பிரகாசமான முக அழகை கொடுக்கும் ஓட்ஸ். கருப்பா இருக்கிறோமே என்கின்ற கவலை இனி...

ஒரே இரவில் பிரகாசமான முக அழகை கொடுக்கும் ஓட்ஸ். கருப்பா இருக்கிறோமே என்கின்ற கவலை இனி ஒருத்தருக்குமே வரக்கூடாது.

- Advertisement -

மாநிறமாக இருப்பவர்களுக்கும், கருப்பாக இருப்பவர்களுக்கும், வெள்ளையாக இருப்பவர்களை பார்க்கும்போது ஒரு ஏக்கம் கட்டாயம் வரும். சிலர், நான் கருப்பாக இருப்பதை நினைத்து ஒரு நாளும் கவலைப்பட்டது இல்லை என்று வாயில் சொல்லுவார்கள். ஆனால் மனதளவில் இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை கொஞ்சமாவது நிச்சயம் இருக்கும். இனி அந்த கவலையே வேண்டாம். பக்க விளைவுகள் இல்லாமல் எல்லோராலும் தங்களுடைய சருமத்தை பொலிவாக மாற்றச் செய்ய முடியும். அதற்கு ஒரு எளிமையான அழகு குறிப்பு இருக்கிறது அதைத்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆனால் நிறத்தில் எதுவுமே கிடையாது. நிறத்தை வைத்து ஒருவருடைய தகுதியை எடை போடுவது ரொம்ப ரொம்ப தவறு. அதையும் இந்த இடத்தில் நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முகப்பொலிவைத்தரும் ஓட்ஸ் அழகு குறிப்பு:
இந்த அழகு குறிப்புக்கு நமக்கு தேவையான பொருட்கள் இரண்டு. ஓட்ஸ், ஆலோவேரா ஜெல், கடைகளில் இருந்து கலர் சேர்க்காத ஆலோவேரா ஜெல்லாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். நல்ல பிராண்டட் ஆலோவேரா ஜெல்லை பயன்படுத்தும் போது ரிசல்ட் நன்றாக தெரியும். சில பேருக்கு ஆலுவேரா ஜெல் அலர்ஜியை கொடுக்கும் என்றால் அதற்கு பதில் ஜெல் பதத்தில் இருக்கக்கூடிய வேறு ஏதாவது கிரீம் பயன்படுத்தலாம். நீம் ஜெல், சேஃப்ரான் ஜெல், துளசியில் ஜெல் இப்படி நிறைய ஜெல் வகைகள் உள்ளது. அதில் உங்களுக்கு எது சருமத்திற்கு தோதாகிறதோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சின்ன கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவு ஓட்ஸ் போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீரை ஊற்றி, ஊற வைத்து விடுங்கள். வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றினாலும் சரிதான். ஓட்ஸ் நன்றாக ஊறி அந்த தண்ணீரின் நிறம் மாறி வந்திருக்கும். ஓட்ஸ் பால் போல நமக்கு தேவைப்படும். ஊற வைத்திருக்கும் ஓட்ஸை ஒரு வடிகட்டியில் ஊற்றி நன்றாக பிழிந்து எடுத்தால், ஓட்ஸ் பால் கிடைத்துவிடும். அதை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதில் 2 ஸ்பூன் அளவு ஆலோவேரா ஜெல் சேர்த்து, நன்றாக அடித்து கலக்கினால் ஒரு ஜெல்போல கிரீம் கிடைத்திருக்கும்.

அதை பாட்டிலில் போட்டு மூடி பிரிட்ஜில் ஸ்டொர் செய்தால் ஐந்து நாட்கள் கெட்டுப்போகாது. இதை தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். முகத்தை சுத்தமாக கழுவி துடைத்து விடுங்கள். பிறகு இந்த ஜெல்லை முகத்தில் லேசாக தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து விட்டால், உங்களுடைய முகம் இந்த ஜெல்லை அப்படியே உறிஞ்சிக் கொள்ளும். பிறகு தூங்கச் செல்லலாம். எப்போதும் போல காலை எழுந்து முகத்தை கழுவிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: வருடகணக்கில் சொட்டையாகவே இருக்கும் இடத்தில் கூட கடகடவென, கருகருவென முடியை வளர வைக்கும் கருவேப்பிலை. இதை எப்படி தலையில் ப்ராபரா போடணும். தெரிஞ்சுக்கலாம் வாங்க.

தொடர்ந்து ஏழு நாட்கள் இந்த ஜெல்லை முகத்தில் போட்டு பாருங்கள். உங்களுடைய சருமத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருந் திட்டுக்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து இருப்பதை உணர முடியும். குறிப்பாக கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம், நெற்றியில் இருக்கும் கருப்பு, கழுத்து கருப்பு நிற பகுதியில் எல்லாம் கொஞ்சம் கவனம் எடுத்து இந்த ஜெல்லை அப்ளை செய்து கொள்ளுங்கள். நீங்கள் வீட்டில் இருப்பவர்களாக இருந்தால் பகல் வேளையிலும் இந்த ஜெல்லை முகத்தில் அப்ளை செய்யலாம். தவறு கிடையாது. அழகான அழகைப் பெற மிகக் குறைந்த செலவில் எந்த பக்க விளைவுகளும் இல்லாத இந்த அழகு குறிப்பு உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும். ஆர்வம் உள்ளவர்கள் இந்த குறிப்பை பின்பற்றி பலன் பெறலாம்.

சற்று முன்