ஓபன் போர்ஸ் என்று சொல்லப்படும் முக குழிகளை 3 நாட்களில் மறைக்க இவ்வளவு ஈசியான டிப்ஸ் இருப்பது இத்தனை நாட்களாக தெரியாமல் போச்சே.

open-pores
- Advertisement -

முகத்தில் இருக்கும் ஓபன் போர்ஸை மறைப்பதற்கு நாம் எவ்வளவு முயற்சி செய்திருப்போம். ஆனால் பலன் தோல்வியில் தான் முடிந்திருக்கும். மிக மிக எளிமையாக குறைந்த செலவில் இந்த டிப்ஸை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. நிறைய நாட்கள் கூட வேண்டாம். மூன்று நாட்கள் மட்டும் பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு வித்தியாசம் தெரிந்தால், இதைத் தொடர்ந்து பயன்படுத்திப் பலனடையலாம். வித்தியாசம் தெரியவில்லை என்றால் அப்படியே விட்டு விடுங்கள். ஆனால் முயற்சி செய்து மட்டும் பார்க்காமல் இருக்காதீங்க. இது அவ்வளவு அருமையான டிப்ஸ்.

முதலில் இந்த ஓபன் போர்ஸ் வருவதற்கு காரணத்தை தெரிந்து கொள்ளலாம். ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சணை நிறைய இருக்கும். இரண்டாவது அடிக்கடி வியர்வை சுரபவர்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கும். அடுத்தபடியாக மேக்கப்பை போட்டு கொண்டே அப்படியே இரவு தூங்குபவர்களுக்கு இந்த பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

சரி, பிரச்சனை வந்து விட்டது. இப்போது அந்த முகத்துவாரங்களை எப்படி சரி செய்வது. முதலில் ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தக்காளி பழச்சாறு – 4 டேபிள்ஸ்பூன், ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன், இந்த 2 பொருட்களையும் போட்டு கலந்தால் இயற்கையான சீரம் நமக்கு கிடைத்துவிடும். இதை அப்படியே உங்களுடைய முகம் முழுவதும் நன்றாக தடவிக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஓபன் போர்ஸ்க்கு உள்ளே இந்த சாறு நன்றாக இருக்கட்டும்.

8 லிருந்து 10 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவி விடுங்கள். அதன் பின்பு ஒரு பேக் போட வேண்டும். சிறிய கிண்ணத்தில் முல்தானிமெட்டி 1 டேபிள்ஸ்பூன், அரிசி மாவு – 1/2 ஸ்பூன், அலோ வெற ஜெல் – 1 ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். தேவைப்பட்டால் இன்னும் கொஞ்சம் அலோ வேரா ஜெல் சேர்த்து இதை பேஸ்ட் போல தயார் செய்து உங்களுடைய முகத்தில் நன்றாக எல்லா இடங்களிலும் அப்ளை செய்யவேண்டும்.

- Advertisement -

குறிப்பாக முகத்தில் இருக்கக்கூடிய அந்தக் குழிகளில் இந்த கிரீம் நன்றாக உள்ளே வரை செல்ல வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள். ஒருமுறை இந்த பேக்கை போட்ட உடனேயே உங்களுடைய முக குழிகள் லேசாக மூடியது போல ஒரு வித்தியாசம் தெரியும். மூன்று நாட்கள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பார்த்தால், நீங்கள் நம்ப முடியாத ரிசல்ட் நிச்சயம் உங்களுக்கு கிடைத்திருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாதீங்க ட்ரை பண்ணி பாருங்க.

பெரும்பாலும் ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த ஓபன் போர்ஸ் இருக்காது. உங்களுக்கு ட்ரை ஸ்கின் இருந்து முகத்தில் கரும்புள்ளிகள், முகத்துவாரங்கள் இருந்தால், இந்த முல்தானிமெட்டி பொடி, அரிசி மாவு, ஆலுவேரா ஜெல் உடன் கொஞ்சமாக தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். முகம் மேலும் ட்ரையாகமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -