Opposite words in Tamil: எதிர் சொற்கள் என்பது முற்றிலும் எதிர் அர்த்தங்களைக் கொண்ட சொற்கள் ஆகும். தமிழ் மொழி போன்ற தொன்மையான மொழிகளில் காலம் காலமாக பல எதிர்ச்சொற்கள் இருந்து வருகிறது. இவை பெரும்பாலும் ஒரு கேள்விக்கான பதிலாகவும், ஒரு வாக்கியத்தை சுருங்க சொல்லவும் உதவுகிறது. உதாரணமாக, உன்னால் இது முடியுமா? என்ற கேள்விக்கு முடியும், முடியாது என்ற இரு சொற்களில் ஏதாவது ஒன்று பதிலாக இருக்கும். இதில் முடியும் என்ற சொல்லுக்கு முடியாது என்பது எதிர்ச்சொல்லாக இருக்கிறது. இப்படி எதிர்ச்சொற்கள் நமது அன்றாட உரையாடல், பேச்சு, எழுத்து என அனைத்திலும் கலந்திருக்கிறது. அதே சமயம் குழந்தைகளின் மொழித் திறனை மேம்படுத்தவும் எதிர்ச்சொற்கள் உதவுகிறது. அந்த வகையில் 100 எதிர்ச்சொற்கள் தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Opposite words in Tamil
| உயர்வு | தாழ்வு |
| உயரம் | குள்ளம் |
| மேன்மை | சிறுமை |
| ஆண் | பெண் |
| குண்டு | ஒல்லி |
| மேல் | கீழ் |
| நன்மை | தீமை |
| மகிழ்ச்சி | சோகம் |
| வெளியே | உள்ளே |
| இரவு | பகல் |
| நாத்திகம் | ஆத்திகம் |
| பெரிய | சிறிய |
| ஓட்டம் | நடை |
| முதல் | இறுதி |
| நல்லது | கெட்டது |
| ஏறு | இறங்கு |
| வெற்றி | தோல்வி |
| இனிப்பு | கசப்பு |
| உள்நாடு | வெளிநாடு |
| திர | மூடு |
| அடிக்கடி | எப்போதாவது |
| சூடு | குளிர் |
| ஏற்றுமதி | இறக்குமதி |
| மகன் | மகள் |
| மிதமான | தீவிரமான |
| ஆரம்பம் | முடிவு |
| சுத்தம் | அசுத்தம் |
| நண்பன் | எதிரி |
| இனிப்பு | கசப்பு |
| திருப்தி | அதிருப்தி |
| ஆம் | இல்லை |
| ஏழை | பணக்காரன் |
| இளமை | முதுமை |
| உண்மை | பொய் |
| ஒற்றுமை | வேற்றுமை |
| பரந்த | குறுகிய |
| கணவன் | மனைவி |
| தாத்தா | பாட்டி |
| நடிகன் | நடிகை |
| சிரிப்பு | அழுகை |
| கடினம் | சுலபம் |
| நேர்மறை | எதிர்மறை |
| வலிமை | பலவீனம் |
| அன்பு | வெறுப்பு |
| உள்ளே | வெளியே |
| தடித்த | மெல்லிய |
| வடக்கு | தெற்கு |
| வீரம் | கோழை |
| சரி | தவறு |
| கொடு | எடு |
எதிர்ச்சொற்களை நாம் பல விதமாக பிரிக்கலாம். உறவுகளை குறிக்கும் எதிர்ச்சொற்கள் (கணவன் – மனைவி), அளவு அல்லது தன்மையை குறிக்கும் எதிர்ச்சொற்கள்(பெரியது – சிறியது, சூடு – குளிர்) உரையாடல் எதிர்ச்சொற்கள் (நீ வருகிறாயா?) மற்றும் நேர் எதிர் சொற்கள் (பிறப்பு – இறப்பு). இப்படி எதிர்ச்சொற்கள் (Opposite words in Tamil) என்பது மொழியின் அடிப்படை அம்சமாக விளங்குகிறது.
அதே போல சில நேரங்களில் எதிர்ச்சொற்கள் சில நோக்கங்களை அல்லது கருத்தை மறைமுகமாக வெளிப்படுத்தவும் உதவுகிறது. உதாரணமாக, இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த வாக்கியத்தில், நேற்று வெயில் குறைவாக இருந்தது என்ற மறைமுக பொருள் ஒளிந்துள்ளது.
நான் இன்று என் வீட்டில் இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பேன். இதில், அந்த குறிப்பிட்ட நபர் தான் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதை உணர்த்துகிறது. அதே போல கவிதை நயம் கொண்ட வாக்கியங்களை உருவாக்கவும் எதிர்ச்சொற்கள் பயன்படுகிறது. உதாரணமாக இரவிலும், பகலிலும் அவள் முகம் காண்கிறேன்.