6 அடி கூந்தலை அருமையாக வளரச் செய்ய ஆரஞ்சு பழத்தோல் ஹேர் பேக். தலையில் இருந்து ஒரு முடி கூட, கீழே உதிர்வதற்கு யோசிக்கும்.

hair1
- Advertisement -

தலையில் முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. என்ன காரணம் என்றே தெரியவில்லை என்பவர்களும் இந்த பேக்கை பயன்படுத்தலாம். சில பேருக்கு சுண்டு பொடுகு ஸ்கால்ப்பில் அதிகமாக ஒட்டியிருக்கிறது. இதனாலேயே முடிஉதிர்வை கட்டுப்படுத்த முடியவில்லை என்பவர்களும் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தலாம். ஆக மொத்தத்தில் தலையிலிருந்து முடி உதிர்வதைக் கட்டுப்படுத்த இந்த ஹேர் பேக் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஹேர் பேகுக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் ஆரஞ்சு பழத்தோல்.

உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ற வாறு இரண்டு அல்லது மூன்று ஆரஞ்சு பழத்தில் இருந்து தோலை மட்டும் தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க சூடான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தயாராக எடுத்து வைத்திருக்கும் ஆரஞ்சு பழத் தோலை போட்டு 10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அந்த சுடு நீரிலேயே ஆரஞ்சுத் தோல்கள் நன்றாக வெந்து இருக்கும். 10 நிமிடங்கள் கழித்து இந்த ஆரஞ்சு பழ தோலை தண்ணீரில் இருந்து எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஊற வைத்த ஆரஞ்சு பழத்தோல் உடன், நன்றாக ஊறவைத்த 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தையும் சேர்த்து, வெந்தயம் ஊற வைத்த தண்ணீரை இந்த மிக்ஸி ஜாரில் ஊற்றி விழுது போல இந்த பேக்கை அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பேக் போடுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் காலையில் ஹேர் பேக் போட வேண்டும் என்றால் இரவே கூட வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளலாம்.

இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்த உடன் திக்கான ஒரு பேக் நமக்கு கிடைத்திருக்கும். இதைக் கொஞ்சம் தளதளவென, கொஞ்சமாக தண்ணீராக கூட அரைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். இந்த பேக்கை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். வடிகட்ட கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்யும். உங்கள் கையை வைத்து அழுத்தி பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தலையில் அப்ளை செய்வதற்கு வசதியாக இருக்கும்.

- Advertisement -

இந்த ஹேர் பேக்கை உங்களுடைய ஸ்கால்ப்பில் முதலில் மயிர் கால்களில் படும்படி நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு முடியின் நுனி வரை அப்ளை செய்துவிட்டு 20 நிமிடங்கள் அப்படியே ஊற விட்டு விடவேண்டும். அதன் பின்பு ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து விட்டால் உங்களுடைய மூடி பார்ப்பதற்கு அத்தனை சாப்டாக இருக்கும். குறிப்பாக தலைக்கு குளிக்கும் போது உங்களுடைய முடி உதிர்வதில் வித்தியாசம் தெரியும். தலைக்கு குளித்து விட்டு வந்து உலர வைத்து விட்டி சிக்கு எடுக்கும் போது முடி உதிர்வு குறைவதை பார்க்க முடியும்.

வாரத்தில் ஒரு நாள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தலாம். தொடர்ந்து 5 வாரம், 5 முறை, இந்த பேக்கை போட்டு விட்டு அதன் பின்பு நிறுத்தி விடுங்கள். முடி உதிர்வு கட்டுக்குள் அடங்கி விடும். நல்ல வித்தியாசம் தெரியும். மீண்டும் 6 மாதம் கழித்து இந்த ஹேர் பேக்கை போட்டு கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. நன்றாக புரிந்துகொள்ளுங்கள் வாரத்தில் ஒருநாள் போடவேண்டும். 5 வாரங்கள் தொடர்ந்து போடும் போது முடி உதிர்தல் நல்ல வித்தியாசத்தை காண்பீர்கள்.

- Advertisement -