வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ‘ஆர்கானிக் ஹேர் டை’ செய்வது இவ்வளவு ஈசியா?

hair-coloring
- Advertisement -

தங்களுடைய கூந்தல் விதவிதமான நிறங்களில் இருப்பதை இன்றைய நவீன பெண்கள் மிகவும் விரும்புகின்றனர். ஆண் பெண் வித்தியாசமின்றி அனைவரும் கேசத்தின் நிறத்தை மாற்ற விரும்புகிறார்கள். ஆனால் அதற்காக அதிக செலவு செய்ய வேண்டிய அவசியம் இனி இல்லை! எந்தவிதமான ரசாயன கலவைகளும் இல்லாமல், பக்க விளைவுகளும் இல்லாமல் வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து எப்படி ‘ஆர்கானிக் ஹேர் டை’ செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

hair1

வெளிநாட்டவரை போல அடர் பழுப்பு நிறமுள்ள கூந்தலுக்கு மருதாணி இருந்தால் போதும். கடைகளில் மருதாணி பொடியை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் மருதாணி பொடி, 2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 3 சொட்டு அளவிற்கு டீ ட்ரீ ஆயில், டீ-யில் இருந்து கிடைக்கக்கூடிய டிகாஷன் அரை கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதனை நன்கு கலந்து சுமார் 8 மணி நேரம் அளவிற்கு அப்படியே விட்டு ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முடி முழுவதும் தடவி சுமார் ஒரு மணி நேரம் உலர விட வேண்டும். அதன் பிறகு சாதாரண தண்ணீரில் தலையை அலசினால் உங்களுடைய கூந்தல் பட்டுப்போல அடர் பழுப்பு நிறத்தில் மின்னும். பார்ட்டி, விழாக்கள் என்று செல்லும் பொழுது அழகாக தோற்றம் அளிப்பீர்கள்.

hair-color1

கூந்தலுக்கு செந்நிறத்தை விரும்புபவர்கள் மாதுளம் பழத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மாதுளை பழத்தின் விதைகளிலிருந்து கிடைக்கும் சாற்றை தனியாக 2 கிண்ணங்களில் பிரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கிண்ணத்தில் இருக்கும் சாற்றை லேசாக அடுப்பில் வைத்து சூடு ஏற்றிக் கொள்ளுங்கள். அதனுடன் நேச்சுரல் ஹேர் கண்டிஷனர் கலந்து தலை முடி முழுவதும் பூசிக் கொள்ள வேண்டும். 5 நிமிடம் கழித்து மற்றொரு கிண்ணத்தில் எடுத்து வைத்த சாற்றை தடவி 20 நிமிடங்கள் நன்கு உலர விட வேண்டும் அதன் பின்னர் சாதாரண தண்ணீரை கொண்டு தலைக்கு அலசினால் விரும்பிய செந்நிற கூந்தல் பட்டுப் போல மின்னும்.

- Advertisement -

உங்களுடைய கூந்தல் கருஞ்சிவப்பு நிறத்தில் மின்ன பீட்ரூட் 1 போதுமானது. அரை கப் அளவிற்கு பீட்ரூட்டை துருவி வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஒரு கப், துருவிய கேரட் ஒரு கப், அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்கு கிரீம் போல மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதனை ஹேர் டை அடிக்க பயன்படுத்தும் பிரஷ் கொண்டு தலைமுடி முழுவதும் பூசி 20 நிமிடம் அளவிற்கு ஊற வைத்தால் கருஞ்சிவப்பு நிறத்தில் பட்டுப் போல மின்ன கூடிய கூந்தல் கிடைக்கும். இது போன்ற ஆர்கனிக் விஷயங்களை பயன்படுத்தி டை அடிக்கும் பொழுது சீக்கிரமாக நன்கு வெயில் அடிக்கும் இடத்தில் போய் அமர்ந்து கொள்ளுங்கள்.

hair-color

இப்படி நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இயற்கையான முறையில் கெமிக்கல்கள் சேர்க்காத ஹேர் டை கிடைக்கும். இதை விடுத்து கடைகளில் காசு கொடுத்து கண்ட கண்ட டை-களை வாங்கி அதில் இருக்கும் அமோனியா போன்ற பொருட்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை சேர்த்துக் கொள்ளாதீர்கள். விலை மலிவான ஹேர் டை மற்றும் தரம் இல்லாத ஹேர் டை உபயோகிக்கும் பொழுது தோல் அலர்ஜி ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே முடியின் நிறத்தை மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் இதுபோல இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி பயன் பெறலாமே!

- Advertisement -