மதுரை ஸ்பெஷல் பால் பன் செய்முறை

paal bun Recipe
- Advertisement -

உணவு வகைகளை பொறுத்த வரையில் ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு ஊரின் பெயர் சொல்லும். அந்த வகையில் மதுரையின் ஸ்பெஷல் இனிப்பு பலகாரமான பால் பன் ரெசிபி பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஒரு வேளை தெரியாதவர்களும் இந்த சமையல் குறிப்பு பதிவில்அந்த ரெசிபி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் .

தேவையான பொருட்கள்

மைதா மாவு – 1 கப்,
சுகர் பவுடர் – 3/4 கப்,
தயிர் – 1/4 கப்,
காய்ச்சிய பால் – 2 டேபிள் ஸ்பூன்
சமையல் சோடா – 1/4 டீஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்,
சர்க்கரை – 1/4 கப்,
எண்ணெய் – பொரித்து எடுக்க தேவையான அளவு

- Advertisement -

செய்முறை

முதலில் ஒரு பவுலில் மைதா சுகர் பவுடர் சமையல் சோடா சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். அதன் பிறகு தயிர் பால் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்க கூடாது சர்க்கரை பவுடராக சேர்த்து இருப்பதால் அதுவே விலகி வரும். ஒரு வேளை மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் ஒரு டீஸ்பூன் மட்டும் தண்ணீர் சேர்த்துக் கொண்டால் போதும்.
இந்த மாவை நன்றாக கலந்த பிறகு 15 நிமிடம் வரை மூடி போட்டு அப்படியே வைத்து விடுங்கள்.

அடுத்து சக்கரை பாகு தயார் செய்து விடுவோம். அதுக்கு அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து சர்க்கரையை சேர்த்து சர்க்கரை மூழ்கும் அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக் கொண்டால் போதும். சர்க்கரை இளகி லேசாக பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும் பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள். இப்போது சர்க்கரைப் பாகும் தயாராகி விட்டது.

- Advertisement -

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீக்கு மாற்றி விடுங்கள். நீங்கள் தயார் செய்து வைத்த மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாவு கையில் எடுக்கும் போது ஒட்டிக் கொள்ளும் சரியாக உருண்டை பிடிக்க வராது. ஆகையால் கையில் லேசாக எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள்.

மாவை சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் போட்டு அனைத்து பொருளும் சிவந்து வரும் படி பொரிய விட்டு தனியாக எடுத்து வைத்து விடுங்கள். இதை உடனே சர்க்கரைப் பாகில் போடக் கூடாது நன்றாக ஆற வேண்டும். இவை அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு சர்க்கரைப் பாகில் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி உடனே எடுத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இன்ஸ்டன்ட் மெதுவடை செய்முறை

சர்க்கரைப்பாகிலும் இது ஊற கூடாது. ஊறினால் குலோப் ஜாமுன் போல சாஃப்ட்டாக மாறி விடும். பன் போல இருக்காது பிரட்டி எடுத்தவுடன் சாப்பிட்டு பாருங்கள். மேலே நல்ல மொறு மொறு என்று உள்ளே சாப்பிட்டாக இருக்கக் கூடிய சூப்பரான மதுரை பால் பன் தயார். இந்த ரெசிபியை ஒரு முறை செஞ்சு சாப்பிட்டீங்கன்னா அடிக்கடி நீங்களே ட்ரை பண்ணுவீங்க.

- Advertisement -