இன்ஸ்டன்ட் மெதுவடை செய்முறை

vadai
- Advertisement -

உளுந்து வடைக்கு நிகரான ஆரோக்கியமும் ருசியும் தரும் ஒரு வடை ரெசிபி தான் இது. ஆனால் உளுந்து ஊற வைத்து கஷ்டப்பட்டு மாவு அரைத்து அதற்கு பிறகு இந்த வடையை சுடப்போவது கிடையாது. வெறும் பத்து நிமிடத்தில் இன்ஸ்டன்டாக உருளைக்கிழங்கு ரவையை வைத்து இந்த வடையை எப்படி சுடுவது சூப்பரான இன்ட்ரஸ்டிங்கான ரெசிபி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் இந்த பதிவை தொடர்ந்து படிக்கலாம்.

இன்ஸ்டன்ட் மெதுவடை செய்ய தேவையான பொருட்கள்

- Advertisement -

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
எள்ளு – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி ஃபிளக்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்
உருளைக்கிழங்கு – 3
ரவை – 2 கப்
மல்லித்தழை – பொடியாக நறுக்கியது
கருவேப்பிலை – சிறிதளவு பொடியாக நறுக்கியது
உப்பு – தேவையான அளவு
இந்த வடையை பொறுத்து எடுக்க தேவையான – எண்ணெய்

செய்முறை

- Advertisement -

முதலில் உருளைக்கிழங்குகளை தோல் சீவி தண்ணீரில் போட்டு கழுவி பச்சையாகவே ஒரு கிரேட்டரில் துருவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சாதாரணமாக உப்புமாவுக்கு பயன்படுத்தும் ரவையை 2 கப் அளவு எடுத்துக் கொள்ளுங்கள். எந்த கப்பில் ரவை அளந்து எடுத்தீர்களோ அதே கப்பில் 1 கப் அளவு தண்ணீர் நமக்கு போதும்.

அடுப்பில் முதலில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, அதில் சீரகம் எள்ளு, சில்லி ஃபிளக்ஸ், போட்டு தாளித்து இதில் ஒரு பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வையுங்கள். தண்ணீர் கொதி வந்ததும் முதலில் இதில் துருவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு இரண்டு கொதி விடவும். பிறகு எடுத்து வைத்திருக்கும் ரவையை இதில் போட்டு நன்றாக கலந்து விடுங்கள். ரவை தண்ணீரோடு கலந்து வெந்து கெட்டியான மாவு உங்களுக்கு கிடைக்கும். இதை கையில் எடுத்து உருட்டி வடை போல தட்ட வேண்டும்.

- Advertisement -

அந்த அளவுக்கு மாவு உங்களுக்கு கட்டியாக வரவேண்டும். அதற்கு தகுந்தது போல பார்த்து தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த மாவில் இறுதியாக பொடிக நறுக்கிய கொத்தமல்லி தழை கருவேப்பிலையை தூவி கலந்து விடுங்கள். இறுதியாக அடுப்பை அணைத்து மாவை கீழே இறங்கி வையுங்கள். மாவு கொஞ்சம் ஆறட்டும்.

பிறகு கையில் எண்ணெயை தடவிக் கொண்டு இந்த மாவை எல்லாம் வடை போல தயார் செய்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து, வடை பொறித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி, அது நன்றாக சூடானதும் தட்டி வைத்திருக்கும் வடைகளை எடுத்து போட்டு பொன்னிறம் வரும் வரை சிவக்க விட்டு எடுத்து, சுட சுட தேங்காய் சட்னியோடு பரிமாறி பாருங்கள் சூப்பரா இருக்கும்.

இதையும் படிக்கலாமே: ஆரோக்கியமான பார்லி கஞ்சி செய்முறை

பின்குறிப்பு: இந்த வடையில் தேவைப்பட்டால் இஞ்சி துருவல், பச்சை மிளகாயை சேர்க்கலாம். கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், எள்ளு, சில்லி ஃபிளக்ஸ், போட்டு தாளிக்கும் போது இஞ்சி துருவல், பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய ருசிக்கு தகுந்தது.

- Advertisement -