- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஉங்கள் வீட்டில் அடிக்கடி பால் திரிந்து போகிறதா பலன் என்ன? பால் பொங்கி வழிந்தாலும், திரிந்து...

உங்கள் வீட்டில் அடிக்கடி பால் திரிந்து போகிறதா பலன் என்ன? பால் பொங்கி வழிந்தாலும், திரிந்து போனாலும் நடக்கக்கூடிய விபரீதங்கள் என்னென்ன?

- Advertisement -

ஒருவருடைய வீட்டில் பால் பொங்கி வழிவது மற்றும் திரிந்து போவது என்பது இயல்பான ஒரு விஷயம் தான் ஆனால் அது அடிக்கடி நேர்ந்தால் நடக்கக் கூடிய விபரீதங்கள் என்னென்ன? ஆன்மீகம் பொறுத்தவரை பால் பொங்கி வழிவதால் ஏற்படக் கூடிய சகுன பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பகுதியின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பால் பொங்கி வழிவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான். ஒரு முறை பொங்கி விட்டால் அடுப்பு முழுவதையும் துடைக்க வேண்டி இருக்கும். இதனால் தான் இப்பொழுதெல்லாம் பாலை குக்கரில் வைத்துவிட்டு வேலையை பார்க்கிறோம். ஆனால் குக்கர் விசில் அடிப்பது கூட தெரியாமல் பாலை வீணடிப்பதும் சிலர் செய்வது உண்டு.

- Advertisement -

மனிதனுக்கு தேவையான இன்றியமையாத அத்தனை சத்துக்களும் பாலில் நிறைந்து உள்ளன. இந்த பாலை வீணடிப்பது என்பது மகாபாவம் ஆகும் எனவே பால் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்று ஆன்மீக சாஸ்திர நூல்கள் கூறுகிறது. பாலை திரிய விடுவதும், பொங்கி வழிவதும் அடிக்கடி நிகழ்ந்தால் அந்த வீட்டில் மகாலட்சுமி கோபமாக இருக்கிறாள் என்று அர்த்தம். இத்தகைய வீட்டில் வருமான குறைவு ஏற்படும். பண ரீதியான பிரச்சினைகளும் வரும். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவுகளும், நிம்மதியின்மையும் ஏற்படும்.

காலாவதியான பால் மற்றும் கழுவாத பாத்திரத்தில் வைத்த பால் ஆகியவை திரிந்து போவது என்பது சாதாரண விஷயம் ஆனால் அனைத்தும் சரியாக இருந்தும் பால் சில இல்லங்களில் அடிக்கடி திரிந்து போவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இத்தகைய இல்லங்களில் பிரச்சனைகள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் எளிதான பரிகாரமாக இதை செய்யலாம்.

- Advertisement -

வாரத்துக்கு ரெண்டு நாள் பாலை இது போல பொங்கி வழிய விடுவது என்பது நல்ல விஷயம் அல்ல! சிறிது நேரம் பொறுமையாக இருந்து பாலை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லது பாலை குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். பால் பொங்கி வழிவதை விட பால் பாத்திரத்தில் முழுவதுமாக வற்றி தீய்ந்து போகக்கூடாது. இது மிகப்பெரிய தோஷமாக கருதப்படுகிறது. இதற்கு பரிகாரமாக பசுவிற்கு அடிக்கடி தானம் செய்வது நல்லது. பச்சரிசியும், வெல்லமும் கலந்து பசுவிற்கு தானம் கொடுக்க வேண்டும் அல்லது வாழைப்பழத்தை வாங்கி தானம் கொடுங்கள்.

கருகிய பாத்திரத்தால் இல்லத்தில் நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். மன ரீதியான சிக்கல்களை சந்திப்பீர்கள். அடிக்கடி பால் திரிந்து போவதும், பொங்கி வழிவதும், இது போல பால் சுண்டி தீய்ந்து போவதும் அந்த வீட்டில் இருப்பவர்களின் மனநிலையை எடுத்துக்காட்டுகிறது. துர் தேவதைகள் உங்கள் இல்லத்தை உங்கள் மனதை ஆட்சி செய்கிறார்கள் என்பது அர்த்தம் ஆகும். எனவே வீட்டை ஒரு முறை நன்கு சுத்தம் செய்து கல் உப்பு, மஞ்சள் கலந்த நீரால் துடைத்து எடுங்கள். அதன் பிறகு வீடு முழுவதும் தூபம் காண்பியுங்கள்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் இடமே இல்லை என்றாலும் இப்படி கூட நீங்கள் இந்த அதிர்ஷ்டம் தரும் செடியை வளர்க்க மறந்து விடாதீர்கள்! இந்த செடி உங்கள் வீட்டில் இருந்தால் மகாலட்சுமி உங்கள் வீட்டில் இருப்பது போல..

சாம்பிராணி காண்பித்து, வீட்டில் மகாலட்சுமிக்கு விளக்கு ஏற்றிவிட்டு பின்னர் ஒரு முறை பாலை காய்ச்சி பாருங்கள். பாலின் அருகிலேயே இருந்து பால் நன்கு கொதித்து வரும் வரை கவனமாக இருப்பது நல்லது. அதன் பிறகு ஒரு டம்ளர் பாலை பூஜை அறையில் வைத்து அதில் ஏலக்காய் தட்டி போட்டு பூஜை செய்து பிறகு அதை பிரசாதமாக வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் குடிக்க கொடுங்கள். இப்படி செய்து வந்தாலும் அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

சற்று முன்