வீட்டில் இடமே இல்லை என்றாலும் இப்படி கூட நீங்கள் இந்த அதிர்ஷ்டம் தரும் செடியை வளர்க்க மறந்து விடாதீர்கள்! இந்த செடி உங்கள் வீட்டில் இருந்தால் மகாலட்சுமி உங்கள் வீட்டில் இருப்பது போல..

lakshmi-cash-tamil
- Advertisement -

இப்போது இருக்கும் காலத்தில் பெரும்பாலான இல்லங்களில் சிறு செடிகள் வைக்க கூட இடமில்லாத அளவிற்கு மாறிவிட்டது. குறிப்பாக அப்பார்ட்மெண்டுகளில் வசிப்பவர்களுக்கு தனக்கென ஒரு சிறு தொட்டியை வைத்து அதில் செடிகள் வளர்ப்பதற்கு கூட இடமில்லை அல்லது நேரமில்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு மாறிவிட்ட சூழ்நிலையிலும் இந்த ஒரு செடியை நீங்கள் கண்டிப்பாக வளர்ப்பது நன்மை தரும். நம் பாரம்பரியமாக வளர்த்து வரும் இந்த ஒரு அதிர்ஷ்டம் நிறைந்த செடியை வளர்க்க மறப்பது நல்லதல்ல! அந்தச் செடி என்ன செடி? அதை எப்படி வளர்க்கலாம்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

வீடு என்றால் கண்டிப்பாக இந்த ஒரு செடி இருந்து வருவது பாரம்பரியமிக்க ஒரு மங்களகரமான விஷயம் ஆகும். மருத்துவ குணங்களும், ஆன்மீகப் பலன்களும் உள்ள துளசி செடியை பற்றி தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மகிமை வாய்ந்த இந்த துளசி செடி வீட்டில் இருந்தால் உடல் நலமும் ஆரோக்கியம் பெறும், உள நலமும் ஆரோக்கியம் பெறும் என்பது தான் உண்மை.

- Advertisement -

சில வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில் வீடுகள் பெரிய அளவில் கட்ட முடியாவிட்டாலும் வீட்டை சுற்றி இருக்கும் இடங்கள் என்னவோ அதிகமாக இருக்கும். இந்த இடங்களில் அவர்கள் பலன் தரும் காய்கறி செடிகள், பூச்செடிகள் மற்றும் இந்த மாதிரி மூலிகை செடிகளை அதிகம் வளர்த்து வந்தனர். அதன் மூலம் கிடைக்கும் சாற்றை குழந்தைகளுக்கு கொடுத்து குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் பார்த்துக் கொண்டனர். ஆனால் இன்று குழந்தைகளுக்கு சாதாரணமாக சளி பிடித்தால் கூட உடனே மருத்துவரிடம் கொண்டு போய் மாத்திரைகளை விழுங்க விடுகின்றோம்.

மங்களம் தரும் இந்த துளசி செடி வீட்டில் இருந்தால் இது போன்ற பிரச்சனைகளுக்கு எளிதாக நிவாரணம் காணலாம். தினமும் 2 டீஸ்பூன் துளசி சாறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகி வந்தால் சளி, கபம் அனைத்தும் நீங்கும். மேலும் நல்ல ஒரு ஆற்றல் உடலுக்கு கிடைத்து எதிர்மறை எண்ணங்களை உங்கள் மனதில் இருந்து உடைய செய்யும் அற்புதம் வாய்ந்த மூலிகையாகவும் இது இருக்கிறது.

- Advertisement -

எங்கள் வீட்டில் துளசி செடி வைக்க இடம் இல்லை நாங்கள் அப்பார்ட்மெண்டில் வசிக்கிறோம் என்பவர்கள் கூட இது போல வீட்டு நிலை வாசலுக்கு அருகில் எந்த மூலையில் இடம் இருக்கிறதோ, அந்த பக்கத்தில் எளிமையான இந்த மாதிரியான துளசி மாடம் அமைத்து அதில் துளசி செடியை வளர்க்கலாம்.

இதையும் படிக்கலாமே:
பெண்கள் கையில் எப்போதும் காசு தாராளமாக புழங்க இதை யாருக்கும் தெரியாமல் செய்து விடுங்கள். பண வரவிற்கு பெண்கள் செய்ய வேண்டிய ரகசிய பரிகாரம்.

மேலும் துளசி செடியை வளர்ப்பவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதற்கு சிறு பூ ஒன்றை வைத்து, ஊதுபத்தி ஏற்றி துளசி தேவியை நினைத்து மாடத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் குடும்ப பிரச்சினைகள் அனைத்தும் தீரும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். மேலும் மனம் தெளிவாகும். குடும்பத்தில் வருமானம் பெருகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வங்களுக்கு அதிபதியாக இருக்கும் மகாலட்சுமி உங்கள் வீட்டில் பரிபூரணமாக நிறைந்து உங்களுக்கு அருள் புரிவாள்.

- Advertisement -