ஒரே வாரத்தில் வழுக்கை விழுந்த இடத்தில் கூட புதிய முடிகள் முளைக்குமா! ஆச்சர்யமா இருக்குல்ல? வாங்க எப்படின்னு தெரிஞ்சிக்கலாம்

- Advertisement -

தலைமுடி பிரச்சனைகளில் முடி உதிர்வு, இளநரை, முடி வெடிப்பு இப்படி முடி சம்பந்தமான பிரச்சனைகள் அதிகமாகி கொண்டே தான் இருந்தாலும் இதையெல்லாம் கூட ஒரு அளவுக்கு சரி செய்து விடலாம். அனால் தலைமுடி வழுக்கை ஆனால் திரும்பவும் அங்கு முடி வளர்வது கொஞ்சம் கஷ்டம் தான். இதற்காக பல ஹேர் ஆயில், கீரிம், ஷாம்பு , கண்டிஷனர் என்று கெமிக்கல் கலந்த எண்ணற்ற பொருட்கள் இப்போது விற்பனையில் உள்ளது. ஆனால் இவையெல்லாம் இந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடையாது. தற்காலிகமாக வேண்டுமானால் சரியாகலாம் ஆனால் நிரந்தரமாக சரியாகாது. அதற்கு நாம் இயற்கையாக இருக்கும் பொருட்களை கொண்டு தான் சரி செய்ய வேண்டும்.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் சில பொருட்களை வைத்தே செய்யும் இந்த பேஸ்டை வாரம் ஒரு முறை தேய்த்து வாருங்கள், வழுக்கைவிழுந்த இடத்தில் கூட திரும்ப முடி வளரும்.

- Advertisement -

முதலில் ஒரு ஐந்து சின்ன வெங்காயம் எடுத்து இடி உரலில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ளுங்கள். இத்துடன் இயற்கையான ஆலுவேரா ஜெல் கடைகளில் கிடைக்கும் ஆலுவேரா ஜெல்லை உபயோகிக்க கூடாது. ஆலு வேரா ஜெல்லை நீங்கள் அலச வேண்டிய அவசியம் இல்லை. இது முகத்திற்கு போடும் போது தான் அலர்ஜி போன்றவை ஏற்படும். இது நாம் தலைக்கு தேய்க்க போகிறோம் என்பதால் அலச வேண்டாம். இரண்டு ஸ்பூன் அளவு இந்த ஆலுவேரா ஜெல் எடுத்து வெங்காயத்துடன் சேர்த்து நன்றாக இடித்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள்.

இத்துடன் ஒரு மூடி கடுகு எண்ணெய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். கடுகு எண்ணெய் ஒத்துக் கொள்ளாது அலர்ஜி ஏற்படும் என்று நினைப்பவர்கள் சுத்தமான தேங்காய் எண்ணெயை உபயோகித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்படி கலந்த இந்த கிரீமை நீங்கள் தலைக்கு குளிக்க அரை மணி நேரத்திற்கு முன்பாக உங்கள் வேர்க்கால்களில் மட்டும் படும் படியாக தேய்த்து கொள்ளுங்கள். முடிகளில் தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. இதை தேய்த்து நன்றாக ஒரு பத்து நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். சின்ன வெங்காயம் அல்லது ஆலுவேரா இவை எல்லாம் முடிக்கு எந்த அளவு முடி வளர்ச்சிக்கு துணைச் செய்யுமோ அதை விட அதிகமாக நீங்கள் செய்யும் இந்த மசாஜ் பெரிதும் உதவி செய்யும்.

இந்த பேஸ்ட்டை தலையில் தேய்த்து மசாஜ் செய்யும் போது அங்கு உங்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து புதிய முடிகள் வளர செய்யும். எனவே இதை தேய்த்து பத்து நிமிடம் கண்டிப்பாக மசாஜ் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல தலைக்கு குளித்து விடுங்கள். தலையில் அங்கங்கே இந்த சின்ன வெங்காயம் கொஞ்சம் ஒட்டி இருக்கும் அது உதிர்ந்து விடும். இப்படி இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வெங்காயத்தை நசுக்கும் போதே அதை சாறு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் சாறு, ஆலுவேரா ஜெல், கடுகு எண்ணெய் சேர்த்து இப்படியும் தேய்க்கலாம்.

இதையும் படிக்கலாமே: விளம்பரங்களில் வருவது போல உங்கள் பற்கள் பளிச்சென்று மின்ன வேண்டுமா? இதோ உங்களுக்காக, இதுவரை யாரும் அறிந்திடாத ஒரு புதுவகையான குறிப்பு.

இப்படி வெங்காயம் தேய்க்கும் போது உங்கள் கண்களில் எரிச்சல் ஏற்பட்டால் அதில் ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து தேய்த்து கொள்ளுங்கள் கண்களில் எரிச்சல் ஏற்படாது. இந்த முறை நிச்சயம் நல்ல பலன் தரும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -