பாம்பின் விஷத்தை முறிக்கும் அம்மன் – இதனால் பலர் உயிர் பிழைத்த அதிசயம்

Paambuli Amman

நாகை மாவட்டத்தில் உள்ள ஒரு மிகச்சிறிய கிராமம் தான் கொங்கானோடை. இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஊரில் அதிசயம் என்னவென்றால் இதுவரை விஷப்பூச்சியோ அல்லது பாம்போ கடித்து இதுவரை யாரும் இறந்தது கிடையாது என்பது தான்.

PambuliAmman

இந்த ஊரில் உள்ள மக்களை பொதுவாக விஷ ஜந்துக்கள் தீண்டுவது கிடையாது. இதற்கு காரணமாக திகழ்கிறாள் பாம்புலியம்மன். ஊரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பாம்புலிஅம்மனின் மகிமையை பற்றி அந்த கோவில் பூசாரியிடம் விசாரித்தோம். அவர் கூறியதாவது.

பொதுவாக இந்த ஊர் மக்களை விஷ பூச்சிக்கலோ பாம்போ தீண்டுவது கிடையாது. அதே போல மற்ற ஊரில் உள்ள மக்களுக்கு விஷ பூச்சிக்களால் ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அவர்கள் இந்த ஊர் எல்லைக்குள் வந்த உடன் அந்த ஆபத்து விலகும்.

snake

விஷ பூச்சி மற்றும் பாம்பு கடி பட்டவர்களுக்கு பாம்புளியம்மனை வேண்டி ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் போடி போட்டு பருக கொடுப்போம். அவ்வளவு தான். பாலை குடித்த சில நிமிடங்களில் அம்மன் அருளால் விஷ முறிவு ஏற்பட்டு பிழைத்துக்கொள்வார்கள்.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன்பு இப்படி தான் கேரளாவை சேர்ந்து ஒரு இளஞ்சனரை பாம்பு தீண்டியது. முதலில் ஆங்கில மருந்துகள் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனாலும் விஷமுறிவு ஏற்படவில்லை. நிலைமை கையை மீறி போகும் வேலையில் எங்கள் ஊரை பற்றி கேள்விப்பட்டு இங்கு கொண்டு வந்தனர். அம்மன் அருளால் அந்த பையன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார் பூசாரி.

snake

பாம்புளியம்மன் இது போல ஏராளமான அதிசயங்களை நிகழ்த்தியுள்ளது அக்கம் பக்கத்தில் விசாரிக்கையில் தெரிய வந்தது. பாம்புலி அம்மனின் அருள் உலகம் முழுக்க பரவட்டும். சிறு கிராமத்தோடு நிற்காமல் இவ்வுலகில் உள்ள அனைவரையும் காத்து ரட்சிக்க அந்த அம்மனிடம் வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
பதவி யோகம் தரும் முருகன் கோவில் பற்றி தெரியுமா ?

உங்கள் ஊரில் இதுபோன்ற அதிசயமிக்க கோவில் இருந்தால் எங்களிடம் தெரிவியுங்கள். அது குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்தலாம்.