நாம் படுத்து உறங்கும் பாய், தலையணை, மெத்தை விரிப்பு, இப்படி இருந்தால் கூட, நம்முடைய வீட்டில் நிச்சயமாக கஷ்டம் நீங்காமல் ஒட்டிக்கொள்ளும்.

paay

தினம் தோறும் நாம் தூங்குவதற்காக பயன்படுத்தும் தலையணைகள், பாய், மெத்தை விரிப்பு, மேலே போர்த்திக் கொள்ளும் பெட்ஷீட், இவைகளின் மூலமாக கூட நம்முடைய வீட்டில் எதிர்மறை ஆற்றல் தங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. ‘இறப்பதற்கு ஒரு ஒத்திகை தான் தூக்கம்’ என்று சொல்லுவார்கள். இறப்பு என்றால் என்ன என்பதை நமக்கு உணர்த்த கூடிய, நாம் தூங்கக் கூடிய அந்த சமயத்தில், நமக்கு என்ன நடக்கிறது என்பதை நம்மால் நிச்சயம் அறிய முடியாது. சில சமயங்களில் நல்ல சக்திகளின் தாக்கம் இருந்தாலும், ஒரு சில சமயங்களில் நமக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலின் தாக்கம் நம்மிடம் நிச்சயம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

night-sleep

அந்த எதிர்மறை ஆற்றலின் மூலம் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத் தான் அந்த காலத்திலேயே காலை எழுந்தவுடன் முகத்தை தண்ணீரால் கழுவி விடவேண்டும் என்று சொல்லுவார்கள். அதாவது பல் தேய்த்து குளிப்பது என்பது அடுத்த விஷயம். நம்முடைய முகத்தை தண்ணீரால் கழுவி விட்டோம் ஆனால் நம்மிடம் இருக்கும் எப்படிப்பட்ட தோஷமாக இருந்தாலும் அது நம்மை விட்டு நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இது மட்டுமல்லாமல் நாம் தூங்கும் நேரத்தில், நாம் பயன்படுத்தும் தலையணை பாய் மெத்தைகளில் நிச்சயம் அந்த எதிர்மறை ஆற்றலின் தாக்கம் இருக்கும். இதற்காக தினம்தோறும் மெத்தை விரிப்புகளை பாயையும் தலையணை உறைகளையும் நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அதாவது துவைக்க முடியாது. இந்த தோஷத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம்?

sleep

ஒரு சிறிய டம்ளரில் கொஞ்சமாக தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கல் உப்பைப் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு சிட்டிகை படிகாரத்தூள் இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து இந்த தண்ணீரை லேசாக விரல்களில் எடுத்து, நீங்கள் உறங்கும்போது பயன்படுத்தும் பாய்  தலைகளின் மீது லேசாக தெளித்து நன்றாக உதறி மடித்து எடுத்து வைப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

இப்படி செய்து வரும் பட்சத்தில் எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும், உங்கள் படுக்கையில் வந்து தங்குவதற்கு வாய்ப்பு இல்லை. தினம்தோறும் இதை செய்து வரலாம். சில பேருக்கு இரவு நேரத்தில் கெட்ட கனவு வந்து தொல்லை கொடுக்கும். ஏதோ கண்ணுக்கு தெரியாத உருவம் போல, சிலபேருக்கு பிரம்மை இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகளையும் தடுக்கும் சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு.

sleep

வீட்டில் எதிர்பாராத விதமாக கூட எந்த ஒரு கெட்டதும் நடக்காமல் இருக்க, சில நல்லவைகள் நடப்பதற்கும் இந்த பரிகாரம் ஒரு உதவியாக இருக்கும், இரவு தூக்கமும் கெட்டு போக வாய்ப்பில்லை, என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
9 சனிக்கிழமைகளில் இதை செய்ய உங்களுக்கு எவ்வளவு லட்சம் கடன்கள் இருந்தாலும் கரைந்து காணாமல் போய்விடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.