9 சனிக்கிழமைகளில் இதை செய்ய உங்களுக்கு எவ்வளவு லட்சம் கடன்கள் இருந்தாலும் கரைந்து காணாமல் போய்விடும்.

perumal-cash

கடன் என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கும் மிகப்பெரிய சாபமாக இருந்து வருகிறது. இந்த சாபத்தை நிவர்த்தி செய்ய பெருமாள் வழிபாடு நல்ல பலன்களைக் கொடுக்கும். பொதுவாகவே நாம் செய்யும் தொழில் அல்லது வியாபாரம் போன்றவற்றில் வருமானம் அதிகரிக்க பெருமாளை தான் வழிபடுவார்கள். அவரின் பாதங்களை சரண் அடைந்தவர்களுக்கு கடன் தொல்லை தீரும், வருமானம் மேலும் அதிகரிக்கும் என்பது ஐதீகம் அல்லவா? லட்சம் லட்சமாக கடன்கள் இருந்தாலும், நம் வீட்டிலேயே 9 வாரங்கள் இவ்வாறு செய்தால் ஒரு ரூபாய் கூட கடன் இல்லாமல் முழு கடனும் தீர்ந்துவிடும். இந்த பரிகாரத்தை எப்படி செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Perumal

கடன் அன்பை முறிக்கும் என்று கூறுவார்கள். கடன் அன்பை முறிக்குமா? இல்லையா? என்பது வேறு விஷயம். ஆனால் கடன் நம் முன்னேற்றத்தை கண்டிப்பாக தடுக்கும். கடன் தொல்லை இருப்பவர்கள் அடுத்த அடியை எடுத்து வைப்பதற்கு எவ்வளவு போராடினாலும் அதில் வெற்றியை காண முடியாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற முதலில் கடன் என்கிற சாபத்தை நிவர்த்தி செய்ய வேண்டும்.

பூஜை அறையில் பித்தளை அல்லது வெள்ளி கலசம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். செம்பு கலசம் பயன்படுத்தினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். கலசம் என்றால் பூஜைக்காக மட்டுமே பயன்படுத்தும் எச்சில் படாத சுத்த பாத்திரம் ஆகும். இதனை சுத்தமாக அலம்பி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு கீழே சிறிய பூஜை தட்டு ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும்.

sembu-sombu

தட்டு மற்றும் கலசத்திற்கு மஞ்சள் பூசிக் கொள்ளுங்கள். பின் சந்தன, குங்குமம் இட்டு, பெருமாள் நாமத்தை கலசத்திற்கு போடுங்கள். இதனுள் இப்போது பெருமாளை ஆவாகனம் செய்ய வேண்டும். கலசத்திற்கு மற்றும் கலசத்தை சுற்றிலும் துளசி மற்றும் வாசனை மிகுந்த மலர்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். பின் மஞ்சளை தண்ணீரில் குழைத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளை துணி மற்றும் வெள்ளை நிற நூலை எடுத்து நினைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின் கலசத்திற்கு நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் இருந்து ஒரு காணிக்கைக்காக எவ்வளவு செலுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ! அந்தத் தொகையை கலசத்தில் போட வேண்டும். அது 100 ரூபாயாக இருந்தாலும் சரி, 2000 ரூபாயாக இருந்தாலும் சரி, அது அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தை இறுக்கமாக மஞ்சள் துணியை வைத்து மூடி, மஞ்சள் நூலால் கட்டிக் கொள்ளுங்கள்.

perumal

கலசத்தை தொட்டுக் கொண்டே 108 முறை ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிற சக்தி வாய்ந்த அவருடைய திரு மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த கலசம் இப்பொழுது பெருமாளுடைய பாதமாக மாறிவிட்டு இருக்கும். சாட்சாத் பெருமாளே அந்த கலசத்தில் ஆவாகனம் ஆகியிருப்பார். அவருடைய பாதமாக எண்ணி கலசத்தை தொட்டுக் கொண்டே உங்களுடைய கடன் பிரச்சினையை பிரார்த்தனையாக முன் வைக்க வேண்டும். கடன் தீர மட்டுமல்ல உத்தியோகம், வியாபாரம் மற்றும் தொழில் போன்ற வருமானம் ஈட்டக்கூடிய விஷயங்களில் சிக்கல்களும், சறுக்கல்களும் இருக்கும் பொழுதும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

Perumal

உங்களுடைய வேண்டுதல்களை இப்பொழுது பெருமாளிடம் கூறிவிட்டு தீப, தூப, ஆரத்தி அந்த கலசத்திற்கு காண்பியுங்கள். இது போல் 9 சனிக்கிழமைகள் அந்த கலசத்திற்கு தூப, தீப, ஆரத்தி காண்பித்து விட்டு ஒன்பதாவது சனிக்கிழமையில் உங்கள் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று அந்த காணிக்கையை உண்டியலில் செலுத்தி விடுங்கள். பெருமாளுடைய கடன் தீர நாம் செய்யும் சிறு பரிகாரம் கூட, நமக்கு இரட்டிப்பாக திரும்பி வரும் என்பது ஐதீகம்.

இதையும் படிக்கலாமே
கேட்ட வரத்தை உடனே கொடுக்கும் சிவன் அருள் பெற பௌர்ணமியில் அரசமரத்தை என்ன செய்யணும் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.