பணத்தை ஈர்க்கும், பச்சை கற்பூர திலகத்தை வீட்டிலேயே எப்படி தயார் செய்வது?

pachai-karpoor

பொதுவாகவே பச்சை கற்பூரத்திற்க்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். மகாலட்சுமியின் அருளைப் பெறவேண்டும் என்றாலும் பச்சை கற்பூரத்தை பயன்படுத்தலாம். வீட்டில் கெட்ட சக்திகள் தங்காமல் இருக்க பச்சை கற்பூரத்தை பயன்படுத்தலாம். இப்படி பல வகைப்பட்ட அற்புதங்களை உள்ளடக்கி வைத்திருக்கும் இந்தப் பச்சை கற்பூரத்தை வைத்து எப்படி திலகத்தை தயார் செய்வது? இதை குறிப்பிட்ட எந்த நாளில் தயார் செய்தால் அதிக பலன் கிடைக்கும்? அந்த திலகத்தை தினம் தோறும் நெற்றியில் வைத்துக் கொண்டால், என்னென்ன பலன்களை நம்மால் அடைய முடியும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

pachai karpooram

இந்த பச்சை கற்பூர திலகத்தை தினந்தோறும் நெற்றியில் வைத்துக்கொண்டால் பலவிதமான பண பிரச்சனைகள் சுலபமாக ஒரு முடிவுக்கு வந்து விடும். அதாவது கொடுத்த கடன் தொகையை வசூலிக்க செல்லும் போது சிறிதளவு இந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். தொழில் சம்பந்தப்பட்ட முக்கியமான கான்ட்ராக்டுகள் உங்கள் பக்கம், சாதமாக கையெழுத்தாக வேண்டும் என்றால் இந்த திலகத்தினை கொஞ்சம் நெற்றியில் வைத்துக் கொண்டு செல்லலாம். நல்ல காரியம் வெற்றியில் முடிய, உங்களுக்கு சாதகமாக முடிய வேண்டும் என்றால் இந்த திலகம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

திலகத்தை தயார் செய்ய வேண்டிய தினம் பவுர்ணமி நாள். அந்தப் பௌர்ணமி தினத்தன்று சுக்கிர ஹோரையில் தான் கட்டாயமாக திலகம் தயார் செய்யபடவேண்டும். மற்ற நேரங்களில் இந்த திலகத்தை தயார் செய்து நெற்றியில் வைத்துக் கொண்டாலும் அதற்கான பலன் முழுமை அடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திலகத்தை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இனி பார்க்கலாம்.

pachai-karpooram

இந்த திலகத்தை தயார் செய்ய தேவையான பொருட்கள் பச்சை கற்பூரம், சாதாரண பூங்கற்ப்பூரம் 1கட்டி(மெழுகு கற்பூரம் பயன்படுத்தப்படக் கூடாது), ஜாதிப் பத்திரி, ஏலக்காய். உங்களுக்கு எந்த அளவில் திலகம் தேவையோ அந்த அளவிற்கு, இந்த பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். இவை அனைத்தையும் நன்றாக இடித்து, ஒரு மண் சட்டியில் போட்டு எரிக்க வேண்டும். எவர்சில்வர் பாத்திரத்தை பயன்படுத்த வேண்டாம். இந்த பொருட்கள் அனைத்தும் எரிந்தால்  சாம்பலாகிவிடும்.

- Advertisement -

அந்த சாம்பலை சேகரித்து தனியாக ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். சிறிதளவு பசு நெய்யை விட்டு அந்த சாம்பலை குழைத்து நெற்றியில் வைத்துக்கொண்டால் போதும். இந்த திலகத்தை பூஜை அறையில் வைத்து தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, வீட்டில் மற்ற இடங்களில் வைக்கக்கூடாது.

karpooram

பெண்கள் மாதவிடாய் நாட்களில் இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ள கூடாது. மற்ற நாட்களில் காலை மாலை இரு வேலையும் ஆண்கள் பெண்கள் இருபாலரும் இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். இத்திலகத்தை தொடர்ந்து நெற்றியில் வைத்துக்கொண்டால் உண்டாகும் மாற்றத்தை அனுபவபூர்வமாக உங்களால் கட்டாயம் உணர முடியும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம் உண்டு.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில், ஆண்கள் விளக்கை ஏற்றுவார்களா? அப்படி என்றால் இதை நீங்கள் கட்டாயமாக படிக்க வேண்டும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have. Pachai karpooram benefits in Tamil. Pachai karpooram nanmaigal.. Pachai karpooram uses in Tamil. Pachai karpooram Tamil. Pachai karpooram pariharam Tamil.