உடலுக்கு ஆரோக்கியம் தரும் பச்சைபயிறு தோசையை இதைவிட மொரு மொருன்னு ருசியா வேறு யாராலும் செய்யவே முடியாதுங்க.

pachai-payaru-dosai3
- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பச்சை பயிறு வைத்து ஆரோக்கியமான மொரு மொரு தோசை ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை இப்படி ருசியாக செய்து கொடுக்கும் போது நிச்சயமாக அவர்கள் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதன்மூலம் அவர்களுக்கு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும். வாரத்தில் ஒருநாள் இந்த ரெசிபியை உங்க வீட்டில் செய்வது நல்லது. கிரைண்டரில் கூட மாவு அரைக்க வேண்டாம். மிக்சி ஜாரில் போட்டாலே போதும். சுலபமா தோசையை சுட்டு எடுக்கலாம். அந்த ஹெல்தி பிரேக்பாஸ்ட் ரெசிபியை நாமும் தெரிந்துகொள்வோமா.

pachai_payaru

இந்த தோசை செய்வதற்கு பச்சரிசி – 1 டம்ளர், பச்சைப்பயிறு – 1 டம்ளர் நமக்கு தேவைப்படும். பச்சரிசியையும், பச்சை பயிறையும் தனித்தனியாக நன்றாக கழுவி விட்டு, தனித்தனிப் பாத்திரத்தில் போட்டு, இந்த பொருட்கள் மூழ்கும் அளவிற்கு நல்ல தண்ணீரை ஊற்றி 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஊறிய இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்க முடியும் என்றால் அரைத்துக் கொள்ளலாம். உங்களுடைய மிக்ஸி ஜார் அரைக்காத பட்சத்தில் இரண்டு பொருட்களையும் தனித்தனியாக போட்டு அரைத்து ஒரு கிண்ணத்தில் வழித்து, இந்த மாவுக்கு தேவையான அளவு உப்பு போட்டு, மாவை உங்கள் கையைக் கொண்டு கரைத்து 6 லிருந்து 8 மணி நேரம் கட்டாயம் புளிக்க வைக்க வேண்டும். ஊறவைத்த பச்சைப் பயறையும், அரிசியையும் ஒன்றாக அரைத்தால் கூட ஒருமுறை உங்கள் கையைப் போட்டு கரைக்க வேண்டும். அப்போதுதான் மாவு புளிக்கும்.

புளித்த இந்த மாவில் அப்படியே தோசை வார்த்தாலும் நன்றாகத்தான் இருக்கும். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி எதை வேண்டு மென்றாலும் வைத்துக்கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம்தான். ஆனால் இந்த தோசைக்கு இன்னும் கொஞ்சம் சுவை கூட்டலாம்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சித்துண்டு – 1/2 இன்ச், வரமிளகாய் – 4, சீரகம் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல் அரைத்து, இதை அப்படியே புளித்திருக்கும் தோசை மாவில் ஊற்றி, நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.

dosai5

அடுத்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி தடைகளை இந்த தோசை மாவில் போட்டு நன்றாக கலந்து விட்டு எப்போதும் போல தோசைக்கல்லில் அரிசி மாவு தோசை எப்படி மெல்லிசாக வார்ப்பீர்கலோ, அதேபோல வார்த்து திருப்பி கூட போட வேண்டாம். அடுப்பை மிதமான தீயில் வைத்து மேலே எண்ணெய் ஊற்றி சிவக்க வைத்து சுருட்டி அப்படியே ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள். நிச்சயம் வேணாம்னு சொல்ல மாட்டாங்க. விருப்பமா சாப்பிடுவாங்க. இந்த தோசை சுடும்போது நமக்கு அப்படி ஒரு மணம் வீசும். சாப்பிடும்போது ருசியை சொல்லவே வேணாம். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -