சப்பாத்தி பூரி இதுக்கு எல்லாம் எப்போதும் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான சுவையில், அதே நேரத்தில் நல்ல ஆரோக்கியமான ஒரு சைடு டிஷ் தான் இந்த பச்சை பயறு கிரேவி. இதை மிக மிக எளிமையாக எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
செய்முறை
இந்த கிரேவி செய்வதற்கு ஒரு கப் பச்சை பயிறை அலசி சுத்தம் செய்த பிறகு குக்கரில் சேர்த்து விடுங்கள். அத்துடன் இரண்டு கத்திரிக்காயை பெரிய துண்டுகளாக அரிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் இரண்டு பெரிய தக்காளியும் அரிந்து சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் நான்கு விசில் வரும் விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
அடுத்ததாக மிக்ஸி ஜாரில் ஒரு கைப்பிடி கொத்தமல்லி, இரண்டு பச்சை மிளகாய், ஐந்து பல் பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, கால் ஸ்பூன் மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பைன் பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
குக்கரில் விசில் இறங்கியவுடன் குக்கர் மூடியை திறந்து பச்சை பயிறு கத்திரிக்காய் அனைத்தையும் மத்து வைத்து லேசாக கடைந்து கொள்ளுங்கள். இந்த பயிரை ரொம்ப மை போல கடைய வேண்டாம் கொஞ்சம் பருப்பு தெரியும் படி கடைந்து கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் பேன் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்த பேஸ்டை இதில் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு குக்கரில் இருக்கும் பருப்பை இதில் சேர்த்து அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள். கடைசியாக இறக்கும் முன்பு இரண்டு பச்சை மிளகாய் ஒரு பிடி கொத்தமல்லியும் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.
இந்த பச்சை பயிறு கிரேவி சப்பாத்தி பூரி போன்றவற்றுக்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த வித்தியாசமான அதே நேரத்தில் மிகவும் சுவையான கிரேவியை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.