புரோட்டின் சத்து மிகுந்த பச்சைப்பயிறு வடை ரெசிபி

pachai payaru vadai
- Advertisement -

நம்முடைய உணவு பழக்க வழக்கங்களில் தடபுடலான விருந்து என்றாலும் சரி எளிமையான சிற்றுண்டி என்றாலும் சரி வடைக்கு எப்போதுமே முதலிடம் தான். அதிலும் டீக்கடையில் கிடைக்கக் கூடிய மசால் வடைக்கு என தனி ரசிகர் பட்டாளமே இருப்பார்கள் பலர் மாலை நேரத்தில் டீ குடிக்க கடைக்கு செல்வதை இந்த வடைக்காகத் தான் இருக்கும்.

அப்படியான ஒரு ஈவினிங் வடை ரெசிபி கொஞ்சம் ஹெல்தியாகவும் நம்முடைய குழந்தைகளின் ஆரோக்கியமாகவும் செய்யலாம் என்றால் சந்தோஷம் தானே. அப்படி ஒரு வடை ரெசிபி தான் இந்த பச்சை பயிறு வடை. அதை எப்படி செய்யலாம் என்பதை தான் சமையல் குறிப்பு குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

பச்சைப்பயிறு – 250 கிராம்,
கடலை மாவு -1 டேபிள் ஸ்பூன்,
இஞ்சி -1 சிறிய துண்டு,
பச்சை மிளகாய் -2,
காய்ந்த மிளகாய் – 2,
பூண்டு – 5 பல்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பெரிய வெங்காயம் -1
கறிவேப்பிலை -1 கொத்து,
கொத்தமல்லி – கைப்பிடி,
உப்பு – 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு.

செய்முறை

இந்த பச்சைப்பயிறு வடை செய்வதற்கு பருப்பை குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். காலையில் வடை சுட வேண்டும் என்றால் இரவு உறங்கும் உண்டு ஊற வைத்து விடுங்கள். அப்போது தான் வடை நன்றாக வரும்.

- Advertisement -

ஊற வைத்த பருப்பை தண்ணீர் இல்லாமல் வடித்த பிறகுமிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை சேர்க்கும் முன்பு இரண்டு டேபிள்ஸ்பூன் பருப்பை தனியாக எடுத்து வைத்து விடுங்கள். இத்துடன் இஞ்சி தோல் சீவி சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பூண்டு அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் இதை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இந்த மாவை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெங்காயத்தை பொடியாக அரிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல் கருவேப்பிலை கொத்தமையும் பொடியாக அரிந்து சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் கடலை மாவு உப்பு சேர்த்து மாவை நன்றாக பிசைந்து விடுங்கள். கடலை மாவு சேர்க்கும் போது வடை இன்னும் மொறு மொறுவென்று இருக்கும். பிடிக்காதவர்கள் இந்த மாவை தவிர்த்து விடலாம்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அடுப்பை மிதமான தீயை மாற்றி விடுங்கள். அதன் பிறகு வடை மாவை எடுத்து உங்களுக்கு விருப்பமான அளவில் தட்டி எண்ணெயில் போட்டு இரண்டு புறமும் நன்றாக சிவக்க விட்டு எடுங்கள். டீக்கடையில் கிடப்பது போல் அதை மொறு மொறுப்பு தன்மையுடன் இருக்க வேண்டும் என்றால், வடையை தட்டும் போது கொஞ்சம் மெலிதாக தட்டுங்கள்.

இதையும் படிக்கலாமே: சர்க்கரைவள்ளி கிழங்கு அப்பம் செய்முறை

இதே போல அனைத்து மாவையும் வடைகளாக தட்டி சுட்டு எடுத்து விடுங்கள். அருமையான பச்சைப்பயிறு வடை தயாராகி விட்டது. இது உடல் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் கூட விரும்பி சாப்பிடுவார்கள். பச்சை பயிறும் உடலுக்கு அத்தனை நல்லது. இந்த வடை ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

- Advertisement -