- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெய்யும் வேலையில் சீக்கிரமே பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க பெருமாளை இப்படி வழிபாடு செய்தாலே...

செய்யும் வேலையில் சீக்கிரமே பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க பெருமாளை இப்படி வழிபாடு செய்தாலே போதும். வாழ்க்கையில் சீக்கிரம் முன்னேறி விடலாம்.

- Advertisement -

சில பேர் விழுந்து விழுந்து உழைத்தாலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டும் கிடைக்காது. சம்பளமும் கிடைக்காது. பதவி உயர்வும் கிடைக்காது. இருக்கின்ற இடத்திலேயே தான் இருப்பார்கள். ஆனால் வேலை மட்டும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். நம்மில் நிறைய பேருக்கு இது அனுபவப் பூர்வமாக நடந்திருக்கும். நாம் ஒரு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருப்போம். நமக்கு பின்னால் வந்தவர்கள், நம்மை விட படிப்பில் தகுதியில், அனுபவத்தில், குறைவாக இருப்பவர்கள். ஆனால், சீக்கிரமே அவர்களுக்கு மட்டும் உயர் பதவி கிடைத்திருக்கும். அவர்கள் சொல்வதை நாம் கேட்க வேண்டிய நிலைமை வந்தால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. நமக்குப் பிறகு தான் இவன் வேலையில் சேர்ந்தான். நம்மைவிட வயது குறைவு. அனுபவம் குறைவு. படிப்புக் குறைவு. இவனுக்கு மட்டும் எப்படி உயர்பதவி கிடைக்கிறது என்ற எண்ணம் நிச்சயம் நமக்கும் வரத்தானே செய்யும்.

உங்களுக்கும் உயர்பதவிகள் தேவையா. சம்பள உயர்வு தேவையா. உங்களுக்காக இரண்டு பரிகாரங்கள் ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டில் ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்தாலும் சரி, அல்லது இரண்டு பரிகாரத்தை செய்து வந்தாலும் சரி உங்களுக்கு கூடிய சீக்கிரம் பதவி உயர்வு கிடைப்பது நிச்சயம். நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்ய வேண்டும்.

- Advertisement -

அறிவுத்திறன், பதவி உயர்வு, பேச்சாற்றல், பெயர், புகழ் இவை அனைத்தும் ஒரு சேர தேவை என்றால் இதற்கு புதன் பகவானின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும். புதன் பகவானின் அனுக்கிரகம் இல்லை என்றாலும் பெயர் புகழ் பதவி நம்மைத் தேடி வராது. வாரம்தோறும் வரக்கூடிய புதன்கிழமை அன்று பச்சை பயிரை வாங்கிக்கொண்டு கோவிலுக்கு செல்ல வேண்டும். நவகிரகம் சன்னதி இருக்கக்கூடிய கோவிலுக்கு செல்லுங்கள்.

நவகிரகங்களில் புதன் பகவானின் பாதங்களில் இந்த பச்சை பயறை வைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொண்டு, அந்த பச்சை பயிறை, கோவில் புரோகிதருக்கு தானமாக கொடுக்க வேண்டும். இப்படி 7 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்து வர உங்களுக்கு புதன் பகவானின் அனுக்கிரகம் கிடைக்கும். அதன் பின்பு வாழ்க்கையில் பெயர் புகழ் பதவி ஒவ்வொன்றாகத் தேடிவரும். இரண்டாவது பரிகாரத்தையும் பார்த்துவிடுவோம்.

- Advertisement -

இரண்டாவது பரிகாரம். மிக மிக சக்திவாய்ந்த பரிகாரம். மாதம்தோறும் மகம் நட்சத்திரம் வரும். அது என்றைக்கு என்பதை முன்கூட்டியே பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். ‘மகம்’ நட்சத்திரம் வரக்கூடிய நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று தேங்காய் சாதத்தை நிவேதனமாக வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும்.

இதுபோல தொடர்ந்து ஆறு மாதங்கள் செய்து வர உங்களுக்கு வேலையில் இருக்கக் கூடிய அத்தனை பிரச்சினைகளுக்கும் கூடிய சீக்கிரத்தில் தீர்வு கிடைக்கும். உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும். அதுவும் நீங்கள் எதிர்பார்க்காத சம்பளத்தோடு, எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரத்தொடங்கும்.

இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யத் தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே உங்களுக்கு உயர் பதவி கிடைத்து விட்டாலும் பரிகாரத்தை விட கூடாது. 6 மாதம், மகம் நட்சத்திரத்தன்று பெருமாள் கோவிலுக்கு சென்று உங்கள் கையால் செய்த தேங்காய் சாதத்தை நிவேதனமாக வைத்து, பூஜை செய்து கொண்டு அந்த தேங்காய் சாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரங்களை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்