புதிதாக வீடு கட்டுபவர்கள் படிக்கட்டு மற்றும் முதல் தூண் அமைக்கும் பொழுது இப்படி மட்டும் செய்யக்கூடாது தெரிந்து கொள்ளுங்கள்!

- Advertisement -

இங்கு பல பேருடைய வாழ்நாள் இலட்சியம் என்றால் அது புதிதாக நமக்கென்று ஒரு வீடு கட்டுவதாக இருக்கும். சொந்த வீடு பாக்கியம் எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக அமைந்து விடுவதில்லை. சிலர் பிறக்கும் போதே சொந்த வீட்டில் வாழக்கூடிய பாக்கியத்துடன் இருப்பார்கள். சிலர் சாகும் வரை சொந்த வீட்டில் வாழ முடியாது என்கிற விதியுடன் பிறந்திருப்பார்கள். சொந்த வீடு கட்டும் பொழுது இந்த தவறை செய்யக்கூடாது. குறிப்பாக படிக்கட்டு அமைக்கும் போது, முதல் தூண் வைக்கும் பொழுதும் செய்யக்கூடாத தவறு என்ன? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஆசை ஆசையாக கட்டிய வீட்டில் முதல் நாள் படுத்து உறங்கும் சுகம் வேறு எதிலும் கிடைப்பது கிடையாது. வீடு கட்டும் பொழுது ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். நம் வீட்டின் மீது நமக்கு இருக்கும் அக்கறையை காட்டிலும், வேறு எவருக்கும் இருக்கப் போவதில்லை. எனவே எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இடையிடையே உங்களுடைய வீட்டை நீங்கள் தான் கண்காணிக்க வேண்டும்.

- Advertisement -

வீடு கட்டும் பொழுது படிக்கட்டு அமைத்தவுடன் வீட்டிற்கு உரிமையாளர் முதல் தடவை படிக்கட்டில் ஏறும் பொழுது இதை செய்துவிட்டு ஏறினால் படிக்கட்டை போல ஒவ்வொரு நிலையையும் கடந்து முன்னேற்றம் அடைவார்கள் என்கிறது வாஸ்து. எனவே படிக்கட்டை கட்டியவுடன் உரிமையாளர் அவசரப்பட்டு திபுதிபுவென ஏறி விடக்கூடாது.

முதல் படிக்கட்டில் விநாயகரை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். முதல் படிக்கட்டில் மஞ்சளில் பிள்ளையாரை பிடித்து வைத்து மஞ்சளால் பிள்ளையார் சுழி போட்டு கொள்ளுங்கள். அதற்கு கீழே லாபம் என்று எழுதிக் கொள்ளுங்கள். முதல் நான்கு பணிகளுக்கு இருபுறமும் பூக்களை வையுங்கள். இதை படி பூஜை என்பார்கள். இந்த பூஜையைச் செய்துவிட்டு ஒவ்வொரு படிக்கட்டாக உரிமையாளர் ஏறி செல்ல வேண்டும்.

- Advertisement -

இரண்டாவது படிக்கட்டில் பராசக்தியை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். திரிசூலம் வரைந்து ஓம் சக்தி என்கிற மந்திரத்தை குங்குமத்தால் எழுதுங்கள். மூன்றாவது படிக்கட்டில் ஈசனை நினைத்து விபூதியால் பட்டை தீட்டுங்கள். சிவாய நம என்ற மந்திரத்தை எழுதுங்கள். நான்காவது படிக்கட்டில் பெருமாளை நினைத்து கொள்ளுங்கள். திருநாமம் வரைந்து கொள்ளுங்கள். முதல் நான்கு படிக்கட்டுகளில் இவ்வாறு செய்து பின்னர் ஊதுபத்தி ஏற்றி வைத்து கற்பூர ஆரத்தி காண்பியுங்கள். அதன் பிறகு இவற்றை மிதிக்காமல் ஒவ்வொரு படியாக ஏறி மேலே செல்லுங்கள். இவ்வழியாக படி பூஜை உரிமையாளர் செய்யும் பொழுது வாழ்வில் இறக்கங்களை சந்திக்காமல் ஒவ்வொரு படியாக ஏறி கொண்டே செல்வார்கள் என்பது நியதி.

அதே போல வீடு கட்டும் பொழுது முதல் தூண் அமைத்து விட்ட பின்பு வீட்டின் உரிமையாளர், கர்த்தாவாகியவர் மேல்நோக்கி வானத்தை எக்காரணம் கொண்டும் பார்க்கக் கூடாது. முதல் தூண் அமைத்த பின்பு வானத்தில் பறக்கும் காகத்தை பார்த்தால் உரிமையாளருக்கு சுகம் கிடைக்காது. நட்டு வைக்கப்பட்டிருக்கும் தூணின் மீது காகம் வந்து அமர்ந்தால் சனி தோஷம் இருப்பதாகவும் ஐதீகம் உண்டு. எனவே தூண் அமைக்கும் பொழுது இவற்றையும் கவனிக்க வேண்டும்.

- Advertisement -