வீட்டின் வரவேற்பறையில் கட்டாயமாக இந்த 1 பொருளை வையுங்கள். வீட்டில் சந்தோஷம் நிரம்பி வழிய இது போதும்.

padikaram
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் ஒரு வீட்டில் சந்தோஷம் என்பது மிக மிகக் குறைவாக உள்ளது. எப்போது பார்த்தாலும் வீட்டில் இருப்பவர்களுக்குள் சண்டை சச்சரவு வாக்குவாதம் பணப் பிரச்சினை, நோய்நொடி பிரச்சனை கடன் தொல்லை, என்று இருக்கவே கூடாது. பெரும்பாலானோர் வீட்டில் பிரச்சனைதான் மூட்டை மூட்டையாக இருக்கின்றது. இதையெல்லாம் சரி செய்வதற்கு என்ன தான் வழி. ஒரே ஒரு வழி உங்கள் வீட்டில், உங்களுடைய முன்னோர்கள் என்னென்னவெல்லாம் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்களோ, அவர்கள் எதையெல்லாம் பின்பற்றி வந்தார்களோ அதை நீங்களும் செய்து வர வேண்டும்.

உங்களுடைய அம்மா அப்பா தாத்தா பாட்டி வழிவழியாக செய்து வந்த விஷயங்களை நாகரீகம் என்று சொல்லி, மாற்றம் என்று சொல்லி நீங்கள் அதை மாற்ற வேண்டாம். சாஸ்திர சம்பிரதாயங்களை முறையாக கடைபிடித்து வந்தாலே ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலையாக இருக்கும். அந்த காலத்திலிருந்தே பிரச்சினைகள் தீர்வதற்கு நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒரு சிறிய பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

நம்முடைய எல்லார் வீட்டு வரவேற்பறையிலும் கட்டாயமாக இருக்க வேண்டிய ஒரு பொருள் படிகாரம். படிகாரம் இருந்து விட்டாலே பார்ப்பவர்களுடைய கண் திருஷ்டியால் நம்முடைய வீட்டில் சண்டை வராது. கண்ணுக்குத்தெரியாத எதிர்மறை ஆற்றல் நம் வீட்டில் தாங்காது. கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தி நம் வீட்டிற்குள் நுழைவதற்கும் வாய்ப்பே கிடையாது.

வீடுகளில் பிரச்சனை வருவதற்கு காரணம் எதிர்மறை ஆற்றல் தான். நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்கும்போது வெளியில் இருந்து யாரோ ஒரு நபர் நம் வீட்டிற்குள் வருவார்கள். நம்முடைய குடும்பத்தின் சந்தோஷத்தை பார்த்துவிட்டு சென்றிருப்பார். அவ்வளவு தான். அவர்களுடைய கண் பார்வையே நம் குடும்ப கஷ்டத்திற்கு காரணமாக மாறிவிடும்.

- Advertisement -

இதற்காக அடுத்தவர்களை குறை கூறும்படி நினைக்க வேண்டாம். பொதுவாகவே நல்ல மனம் கொண்டவர்கள் கூட ஏக்கத்தோடு சந்தோஷமாக இருப்பவர்களை பார்த்தால் அவர்களுடைய கண்களில் இருந்து வெளிவரக்கூடிய எதிர்மறை ஆற்றலானது கண்டிப்பாக ஏதாவது ஒரு பாதிப்பை விளைவித்து விடும். அப்படி நம்முடைய குடும்பத்திற்கு கண்ணுக்குத் தெரியாத எந்த கெட்ட சக்தியின் மூலம் பாதிப்பும் இருக்கக்கூடாது என்றால் உங்கள் வீட்டு வரவேற்பறையில் தரையில் படும்படி இந்த படிகார கல்லை வைக்க வேண்டும்.

சிறிய சிறிய துண்டுகளாக படிகார கல்லை உடைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டின் வரவேற்பறையில் நாற்காலி, சோபாவிற்கு அடியில் யாருக்கும் தெரியாமல் இந்த படிகாரக்கலை ஆங்காங்கே வைத்து விடுங்கள். இது அல்லாமல் வரவேற்பறையில் அலமாரிகளில் ஆங்காங்கே ஒவ்வொரு படிகக் கல்லை வைத்து கொள்ளலாம். நிலை வாசலில் ஒரு கருப்பு கயிறில் இந்த படிகாரக் கல்லை கட்டி தொங்க விடுங்கள் போதும். உங்கள் வீடு ஒரு பாதுகாப்பு கவசத்தோடு சந்தோஷமாக இருக்கும்.

- Advertisement -