இன்றைய காலத்தில் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கினால் தான் அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது சிறந்த பள்ளியாக பார்த்து சேர்க்கிறார்கள். தங்கள் வருமானத்திற்கு மீறிய செலவை செய்து குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். அவ்வாறு படிக்க வைக்கும் பொழுது குழந்தைகள் படிப்பில் கவனத்தை செலுத்தி படித்து விட்டால் பெற்றவர்களுக்கு எந்த வித கஷ்டமும் தெரியாது. ஆனால் படிப்பில் கவனம் செலுத்தாமல் வேறு செயல்களில் கவனத்தை செலுத்தி அதனால் படிப்பு பாதிக்கப்படும் பொழுதுதான் பெற்றவர்கள் மிகவும் வருத்தத்திற்கு ஆளாவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிள்ளைகள் கவனம் சிதறாமல் படிப்பதற்கு என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தான் இந்த ஜோதிடம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அந்த செயலில் நாம் கவனத்தை செலுத்தினால்தான் நம்மால் வெற்றி பெற முடியும். ஒரு செயலை செய்து கொண்டு வேறொரு விஷயத்தில் கவனத்தை செலுத்தினால் அந்த செயலில் நம்மால் வெற்றி பெற முடியாது. இது படிப்பிற்கும் பொருந்தும். ஒரு குழந்தை நன்றாக படித்து, படித்த படிப்பை தன்னுடைய வாழ்க்கையில் பயன்படுத்தி கொண்டால் தான் அந்த குழந்தையால் அதன் வாழ்க்கையை வெற்றிப் பாதையில் நடத்திச் செல்ல முடியும்.
குழந்தைகள் படிக்க அமரும் பொழுது படிப்பில் கவனத்தை செலுத்தாமல் வேறு எதிலாவது கவனத்தை செலுத்தினாலோ அல்லது தூக்கம் வருகிறது என்று தூங்கினாலோ அல்லது வேறு செயல்கள் எதிலாவது ஈடுபட்டாலோ அவர்களால் நன்றாக படிக்க முடியாது. அந்த சமயத்தில் அவர்களுக்கு தயிர் மற்றும் சர்க்கரை இரண்டையும் நன்றாக கலந்து ஐந்து ஸ்பூன் அளவிற்கு கொடுத்துவிட்டு பிறகு படிக்கச் சொன்னால் படிப்பில் அவர்களுக்கு கவனம் அதிகரிக்கும். இதை நம் முன்னோர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்பாக கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதை நாம் தினமும் குழந்தைகள் படிப்பதற்கு முன்பாக கொடுத்தால் குழந்தைகளின் கவன சிதறலை தடுக்க முடியும்.
கவனச் சிதறல் அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்கு அவர்கள் உபயோகப்படுத்துவதற்காக வாங்கிக் கொடுக்கும் பொருட்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும் படியாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது பேனா, பென்சில், புத்தகப்பை போன்றவை மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். மஞ்சள் என்பது குரு பகவானுக்குரிய நிறம் என்பதால் குரு பகவானின் அருள் அந்த குழந்தைக்கு பரிபூரணமாக கிடைத்து கவனச் சிதறல் என்பது குறைய ஆரம்பித்து படிப்பில் கவனத்தை செலுத்துவார்கள்.
படிக்கும் பொழுது மட்டும் கவனமாக இருந்தால் போதுமா? தேர்வு எழுதும் பொழுது கேள்விகளில் கவனம் செலுத்தினால்தான் அதற்குரிய பதில் நமக்கு ஞாபகத்திற்கு வரும் அல்லவா? அந்த சூழ்நிலையில் தேர்வு எழுதப் போகும் நபர் தன்னுடைய பாக்கெட்டில் ஆரஞ்சு பழத்தின் தோலை ஒன்பது துண்டுகளாக (அது சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை) வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம் தேர்வு எழுதும் பொழுது வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் தேர்வில் மட்டும் கவனம் செலுத்தி வெற்றி அடைய முடியும்.
இதையும் படிக்கலாமே: பணம் தேவை என்று நினைத்த உடனே பணம் உங்களைத் தேடி வர சுக்கிர ஹோரையில் சர்க்கரையை இந்த இடத்தில் வைத்தால் போதும். கொடுத்து இதுவரை வராத பணமும் உங்களைத் தேடி வரும்.
எளிமையான இந்த வழிமுறைகளை தொடர்ந்து செய்து வந்தால் கவன சிதறல் ஏற்பட்ட குழந்தைகளுக்கு அது சரியாகி படிப்பில் கவனத்தை செலுத்தி தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி செல்வார்கள்.