இந்த எளிய பரிகாரத்தை பிள்ளைகள் செய்யும் பொழுது படிப்பில் நல்ல முன்னேற்றத்தை காண முடியும்.

hayagrivar
- Advertisement -

கல்வி என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. யாரொருவர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்வியில் சிறந்து விளங்குகிறார்களோ அவர்களுக்கு என்றுமே மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அது மட்டும் அல்லாமல் அவர்கள் எந்த காலத்தில் வேண்டுமானாலும் தாங்கள் கற்ற கல்வியை பயன்படுத்தி வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த முடியும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு குழந்தைகள் எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக கல்விக்கு அதிபதியாக விளங்கக்கூடியவர் சரஸ்வதி தேவி என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் சரஸ்வதி தேவிக்கு குருவாக விளங்கியவர் தான் ஹயக்ரீவர் என்பது பலரும் அறிந்திறாத ஒன்று. பிரம்மரிடம் இருந்து அசுரர்களால் அபகரிக்கப்பட்ட வேத புத்தகங்களை ஹயக்ரீவர் தான் திரும்பவும் மீட்டு பிரம்மரிடம் ஒப்படைத்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அப்படிப்பட்ட ஹயக்ரீவரை நாம் முறையாக வழிபட்டால் அவர் நமக்கு நல்ல ஞானத்தை வழங்குவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அவரை வணங்கிய பிறகு தான் சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன. ஹயக்ரீவருக்கும், சரஸ்வதி தேவிக்கும் மூல மந்திரங்கள் இருக்கின்றன. அந்த மூல மந்திரங்களை குழந்தைகளுக்கு மனப்பாடம் செய்ய வைத்து தினமும் உச்சரிக்க சொல்வதன் மூலம் ஹயக்ரீவர் மற்றும் சரஸ்வதி தேவியின் அருள் குழந்தைகளுக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அது மட்டும் அல்லாமல் புதன்கிழமையில் புதன் ஹோரையில் குழந்தைகளை வீட்டில் விளக்கேற்ற வைப்பதன் மூலம் புதன் பகவானின் அருள் குழந்தைகளுக்கு கிடைக்கும். புதன் பகவான் என்பவன் புத்தி காரகன். ஒரு குழந்தை சிறப்பாக தன்னுடைய புத்தியை செயலாற்றுவதற்கு புதன் பகவானின் அருள் பரிபூரணமாக வேண்டும். அப்படிப்பட்ட புதன் பகவானின் அருளை பெறுவதற்கு புதன்கிழமை புதன்ஹோரையில் வீட்டில் ஏதாவது ஒரு விளக்கை குழந்தைகள் கையால் ஏற்ற வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக ஒருவருடைய வாழ்க்கை முன்னேறுவதற்கு உறுதுணையாக இருக்கக் கூடியவர் குரு பகவான். குரு பகவானின் அருள் இருந்தாலும் குழந்தைகள் சிறந்த முறையில் படிப்பார்கள் என்று கூறப்படுகிறது. குரு பகவானின் கிழமையான வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி வழிபட வேண்டும். ஒன்பது ஏலக்காய்களை எடுத்து நூலில் கோர்த்து வீட்டில் இருக்கக் கூடிய லட்சுமி ஹயக்ரீவர் படத்திற்கு குழந்தைகள் கையால் மாலைகளை சூட்டி வழிபடுவதன் மூலமும் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

இதையும் படிக்கலாமே: வேலை கிடைத்து வருமானம் அதிகரித்து கடனில்லா வாழ்க்கை வாழ புதன்கிழமையன்று இதை செய்யுங்கள்

இந்த எளிமையான வழிபாட்டு முறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றினால் கூட குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றத்தை உணர முடியும்.

- Advertisement -