உலகிலேயே மிகப் பெரிய பணக்கார கோவிலாக இருக்கும் பத்மநாப ஸ்வாமி கோவிலில் சர்ச்சைக்குரிய 6-ஆம் அறையில் அப்படி என்ன தான் இருக்கும்? அவிழ்க்க முடியாத முடிச்சுகள் நிறைந்துள்ள மர்ம கோவில் வரலாறு!

padmanabhaswamy-temple

உலகிலேயே அதிக செல்வம் கொண்டுள்ள கோவிலாக விளங்கும் கேரளாவை சேர்ந்த பத்மநாப ஸ்வாமி கோவில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் தான் உலகிலேயே பணக்கார கோவிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. பத்மநாப ஸ்வாமி கோவில் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டுள்ளது அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பல சுவாரஸ்யமான கதைகளில் ஒன்று தான் ஆறு அறைகள் கொண்ட மர்மமான இடங்கள். பல்வேறு காலகட்டங்களில் 5 அறைகள் திறக்கப்பட்டு அதில் என்ன இருக்கிறது? என்பது பார்த்தாகிவிட்டது. கடைசியாக இருக்கும் ஆறாம் அறையில் என்ன இருக்கலாம்? ஏன் அந்த அறை இன்னும் திறக்கப்படவில்லை? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

temple-padmanabha-swamy

கிமு 500-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பத்மநாபசுவாமி கோவில் பல்வேறு மர்ம முடிச்சுகளை இன்று வரை தன்னுள்ளே கொண்டு கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. 2011-ஆம் ஆண்டு பத்மநாபசுவாமி கோவிலின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க ஆறு அறைகளையும் திறக்க கோரி அக்கோவிலின் அறநிலையத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி ஒவ்வொரு கதவாக திறந்து பார்க்கும் பொழுது இந்த உலகமே அதிர்ந்து போகும் படியான பொக்கிஷங்கள் சொல்ல முடியாத அளவில் கொட்டிக் கிடந்தது.

ஏராளமான தங்க நகைகளும், தங்கத்தாலான சுவாமி சிலைகளும், ஸ்வாமி சிலைகளுக்கான ஆபரணங்களும், தங்க நாணயங்களும், அறை முழுவதும் இருந்தது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதன் மதிப்பு ட்ரில்லியன் கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படியாக ஐந்து அறைகள் திறக்கப்பட்ட நிலையில் கடைசியாக இருக்கும் ஆறாவது அறையில் என்ன இருக்கும்? என்பது பலருடைய கேள்வியாக இருந்தது.

temple-treasure

ஆனால் அதை திறந்து பார்க்கும் பொழுது அதற்குள் இன்னொரு அறை இருந்தது தான் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 5 அறைகளில் விலைமதிப்பில்லாத ஸ்வர்ண பொக்கிஷங்கள் இருக்கும் பொழுது ஆறாவது அறைக்குள் இன்னொரு மர்ம அறை இருப்பது உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அறையை திறப்பதற்கான எந்த ஒரு துளையும் கொடுக்கப்படவில்லை என்பது மேலும் மர்மத்தை கூட்டியது. அதை எப்படி திறப்பது? என்று தெரியாமல் எல்லோரும் விழிபிதுங்கி நின்றனர்.

- Advertisement -

அந்த அறையை திறப்பதற்கு எந்த ஒரு வழியும் இல்லாததால் அதை திறந்தால் பலரும் உலக அழிவிற்கு வழிவகுக்கும் என்று அஞ்சி உள்ளனர். மேலும் அந்த அறையின் கதவில் பாம்புகள் கொண்ட அச்சுறுத்தும் வகையான அமைப்புகள் இருப்பதால் அதைத் திறப்பது ஆபத்திற்கு உரியது என்றும் கருதப்படுகிறது. அந்த அறையை திறக்க மாபெரும் சக்திகளை கொண்ட சித்தர்களால் முடியும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை. ஆனால் அதற்கு இந்த 21-ஆம் நூற்றாண்டில் நாம் எங்கே போவது? அது மட்டுமில்லாமல் ஆறாவது அறையை திறக்கக்கோரி உத்தரவிட்ட அரசின் உத்தரவை, பல்வேறு ஆன்மீக தரப்பினர் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர். இதன் தீர்ப்பு வரும் வரை ஆறாவது கதவிற்குள் என்ன இருக்கிறது? என்பது மர்மமாகவே இருக்கும்.

Padmanabhaswam_Door

ஆறாவது அறைக்குள் மற்ற அறைகளில் இருந்தது போலவே ஏராளமான பொக்கிஷங்கள் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. அல்லது அந்த அறைக்குள் இன்னொரு அறை இருக்க சாத்தியக் கூறுகள் உண்டு. ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு கூட வாய்ப்புகள் உண்டு. இவ்வகையில் பல்வேறு கருத்துகள் அந்த அறையை சுற்றிலும் உலக மக்காளால் எழுப்பப்பட்டுள்ளது. அக்காலத்தில் மன்னர் பயன்படுத்திய பொருட்களும், ஆடை அணிகலன்களும், அல்லது மன்னருடைய பதப்படுத்திய உடலும் இருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். அதை பற்றி உங்களுடைய கருத்து என்னவாக இருக்கும்?

இதையும் படிக்கலாமே
குறுகிய காலத்தில் குறிக்கோளை நிறைவேற்றும் பயிற்சி. வெற்றியின் ரகசிய பயிற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான கட்டுரைகளை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.