குறுகிய காலத்தில் குறிக்கோளை நிறைவேற்றும் பயிற்சி. வெற்றியின் ரகசிய பயிற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

vetri deepam

பொதுவாக நம் மனதில் எண்ணிய காரியத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால், தொடர்ந்து அதன் மீது ஈடுபாடும், பற்றுதலும் வைக்க வேண்டும். அந்த ஈடுபாடும், பற்றுதலும், வேண்டுதலும் குறிப்பிட்ட எந்த நேரத்தில் வைத்தால் நம் இலக்கை இன்னும் வேகமாக அடையலாம் என்பதையும், நாம் தெரிந்துகொள்ள வேண்டும். வெற்றியின் ரகசியம் அதில் தான் அடங்கியுள்ளது. ஒரு வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தால், அதற்கு இரண்டாவது கட்டமாக நமக்கு என்ன வேண்டும். அதிக பணம் தேவை. அதிக பணம் தேவை என்றால், நமக்கு சம்பாதிக்கும் ஒரு வழி தேவைப்படுவது. நல்ல வருமானம் வருவதற்கு, நல்ல தொழிலாகவோ அல்லது நல்ல வேலையாகவோ நமக்கு அமைய வேண்டும் என்பதுதான் முதல்கட்ட குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆக நம் வீடு கட்டும் குறிக்கோள் ஆனது மூன்றாவது கட்ட ஆசையாக வந்து நிற்கிறது. இப்படி நம்முடைய ஆசைகள் பல கட்டங்களைத் தாண்டித்தான் நிறைவேற்றிக்கொள்ள முடியும். இப்படி சிந்தித்தால் தான் நம் குறிக்கோளை அடைய முடியும். எடுத்தவுடனே, அடுத்த நாளே, வீடு கட்டி விட முடியுமா என்றால் அது நிச்சயமாக முடியாது. இது ஒரு எடுத்துக்காட்டு தான். உங்கள் மனதில் இருக்கும் ஆசைகள் எதுவாக இருந்தாலும், அதனை விரைவாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்யலாம்? என்பதைப் பற்றிய பயிற்சியை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

money bag

நம்முடைய எண்ணமும், மனதும் சுத்தமாகவும், எந்த ஒரு குழப்பமும் இல்லாமலும் இருக்கும் நேரம் என்றால் அது நாம் காலையில் கண் விழிக்கும் நேரம் தான். நன்றாக தூங்கிய சமயத்தில் நம் உடல் உறுப்புகளும், மூளையும் ஓய்வு எடுத்து, சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கும் நேரம் நம் கண் விழிக்கும் காலை நேரம்தான். அது அதிகாலை வேலையாக இருந்தால் இன்னும் சிறப்பு. நீங்கள் கண் விழிக்கும் நேரம் சூரிய உதயத்திற்கு முன்பாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நீங்கள் விழித்து இருப்பீர்கள். ஆனால் கண்களை திறக்கக்கூடாது.

கண்களைத் திறக்காமல் படுத்த நிலையிலேயே, உங்களது இரண்டு கைகளையும் சேர்த்து இறைவனை எப்படி வணங்குவோமே, அதே போல உங்களது கைகளை, உங்களது தொப்புள் பகுதியின் மேல் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். (சாமி கும்பிடிவது போல்). கவிழ்ந்து படுத்து இருக்கக்கூடாது. ஒருக்கழித்துப் படுத்து இருக்க கூடாது. மல்லாந்து மேலே பார்த்தவாறு தான் படுத்து இருக்க வேண்டும். இப்படியாக இரு கைகளையும் கூப்பி தொப்புளுக்கு மேல் வைத்து கும்பிட்டுக் கொண்டே, உங்களுக்கு அன்றைய தினம் எது வெற்றிகரமாக அமையவேண்டும் என்பதை முதலில் நேர்மறையாக வேண்டிக்கொள்ளுங்கள். இரண்டாவதாக அந்த வருடத்திற்கான என்ன இலக்கு வைத்திருக்கிறீர்கள் என்பதை வேண்டிக்கொள்ளுங்கள். மூன்றாவதாக உங்களது வாழ்நாள் குறிக்கோள்.

vanakkam

மேலே குறிப்பிட்டுள்ள எடுத்துக்காட்டின் படி வேண்டிக் கொள்ள வேண்டும் என்றால், அன்றைய நாள் உங்களது வேலை சிறப்பாக நடக்க வேண்டும். லாபம் அதிகமாக கிடைக்க வேண்டும். என்பது முதல் குறிக்கோள். இரண்டாவதாக இந்த வருடத்திற்குள் இவ்வளவு பணத்தை வீடு கட்டுவதற்காக சேமித்து விட வேண்டும். மூன்றாவதாக இத்தனை வருடங்கள் கழித்து, வீடு கட்டும் கனவு, எனக்கு கட்டாயம் நிறைவேற வேண்டும். இப்படியாக மனதார ஜெயிக்க வேண்டும்! ஜெயிக்க வேண்டும்! ஜெயிக்க வேண்டும்! என்ற எண்ணத்தோடு தினமும் கண்களைத் திறப்பதற்கு முன்பு இரண்டு நிமிடம் இந்த தியானத்தை செய்து பாருங்கள்.

- Advertisement -

Chandra-grahan-mantra

இதில் மந்திர தந்திர வித்தைகள் எல்லாம் எதுவுமில்லை. காலையில் உங்களது ஆற்றல் அதிகமாக இருக்கும். நீங்கள் எதை சொன்னாலும், அந்த செயலை, அந்த நாளில் உங்களது மூளை, சுறுசுறுப்பாக செய்து முடித்து விடும். இந்த ஒன்று போதும் நீங்கள் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு. காலையில் எழுந்த பின்பு வீட்டில் சந்தோஷமாக அந்த நாளை தொடங்குவது மிகவும் சிறப்பு. வீட்டில் உள்ளவர்களுக்கு காலை வணக்கம் சொல்வது, இனிமையான வார்த்தைகளை பேசுவது, இப்படி நேர்மறையாக தொடங்கப்படும் நாட்கள் என்றைக்குமே இனிமையாக தான் முடியும். அந்த நாளில் நாம் எடுத்த காரியங்கள் அனைத்துமே வெற்றிதான். இது நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால் சிலர் பின்பற்ற மாட்டார்கள். பின்பற்றி பாருங்கள். வாழ்க்கையில் நடக்கும் மாற்றத்தை உங்களால் உணரமுடியும்.

இதையும் படிக்கலாமே
இப்படியும் ஒரு வாழ்க்கை முறையா? சீனர்களை பற்றி நம்ப முடியாத ரகசிய தகவல்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான கட்டுரைகளை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vetrikkana tips in Tamil. Ninaithathu nadakka Tamil. Kariyam vetri pera Tamil. Valvil vetri pera valigal Tamil. Tips for success in life in Tamil.