வீட்டில் உங்களுடைய படுக்கை அறை இப்படி இருந்தால் நிச்சயம் கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வந்தே தீரும் தெரியுமா? தவறியும் படுக்கையறையில் செய்யக்கூடாத தவறுகள் என்ன?

bed-food
- Advertisement -

ஒரு கணவன், மனைவி அதிகம் மனம் விட்டு பேசும் இடம் என்றால் அது படுக்கை அறை மட்டுமே ஆகும். படுக்கை அறை வாஸ்து முறைப்படி அமைக்கப்படா விட்டாலும் கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. இந்த வகையில் படுக்கை அறை எப்படி இருந்தால் கணவன், மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வருகின்றன? படுக்கை அறையில் நாம் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

கணவன்-மனைவி தம்பதியராக படுத்து உறங்கும் அறையில் மிகப் பெரிய கண்ணாடிகள் பதித்த பீரோ அல்லது ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்டிப்பாக அமைய பெற்றிருக்க கூடாது. பெரிய பெரிய கண்ணாடிகள் இருக்கும் படுக்கை அறையில் புழங்கும் கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் வருவதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அப்படி கண்ணாடிகள் இருந்தாலும் அவை திரை போட்டு மூடப்பட்டிருக்க வேண்டும் என்பது நியதி.

- Advertisement -

கண்ணாடியில் பிரதிபலிக்கும் பிம்பம் சில எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இத்தகைய விஷயங்களை நாம் தவிர்ப்பது நல்லது. மேலும் கணவன், மனைவி படுத்து உறங்கும் படுக்கை அறை எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். கண்ட இடத்தில் கண்ட பொருட்களை போட்டு வைப்பது, குப்பை போல படுக்கை அறையை வைத்திருப்பது எதிர்மறை அதிர்வலைகளை அதிகம் வெளியிடும் என்பதால் நிம்மதிக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விடும்.

குறிப்பாக காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் கண்டிப்பாக யாராவது ஒருவர் படுக்கையை சுத்தம் செய்ய வேண்டும். முன்பெல்லாம் நம் முன்னோர்கள் பாயை விரித்துப் படுப்பது வழக்கம் எனவே காலையில் எழுந்ததும் பாயை ஒருமுறை நன்கு தட்டி முறையாக மடித்து, சுருட்டி ஓரமாக வைத்து விடுவார்கள். ஆனால் இப்பொழுது மெத்தையில் படுப்பதால் அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

- Advertisement -

படுத்து உறங்கும் படுக்கையின் மீது சுத்தம் இல்லை என்றால் அதை பயன்படுத்தும் தம்பதியருக்குள் ஒற்றுமை நிச்சயம் இருக்காது என்கிற சூட்சமத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எழுந்ததும் ஒருமுறை பெட் சீட்டை உதறிப் சரியாக மடித்து, தலையணையை சரி செய்து, வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு பின்னர் மற்ற வேலைகளை துவங்க வேண்டும். அல்லது தூங்க செல்லும் முன் இதை செய்வதும் நல்லது தான். காலையில் எழுந்து செய்ய முடியவில்லை என்றால், இரவு படுக்க செல்லும் பொழுது ஒருமுறை சுத்தம் செய்துவிட்டு பின்னர் படுக்க செல்லுதல் நலம் தரும்.

அதே போல படுக்கை மீது அமர்ந்து குழந்தைகள் கல்வி பயில்வது அல்லது சாப்பிடுவது போன்றவற்றையும் செய்யக்கூடாது. கணவன், மனைவி படுக்கும் படுக்கை மீது அமர்ந்து குழந்தைகள் கல்வி பயில்வது சிந்தனையை சிதற செய்யும் என்பதால் அவ்வாறு செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது. அது போல படுக்கையின் மீது அமர்ந்து சாப்பிடுவது, சாப்பாட்டை அதில் சிந்துவது போன்ற செயல்கள் தரித்திரத்தை ஏற்படுத்தும். இதனால் அடிக்கடி குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் கணவன், மனைவிக்குள் தொடர்ந்து சண்டை, சச்சரவுகள் வரக்கூடும். மேலும் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கமும் குறையும். இத்தகைய தவறுகளை ஒருபோதும் இனியும் செய்யாமலிருப்பது நல்லது.

- Advertisement -