- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇந்தப் புகையை வாரத்திற்கு ஒரு முறை போடுவதன் மூலம் பகைகள் அனைத்தும் ஓடிவிடும்.

இந்தப் புகையை வாரத்திற்கு ஒரு முறை போடுவதன் மூலம் பகைகள் அனைத்தும் ஓடிவிடும்.

- Advertisement -

யார் ஒருவருடைய வாழ்க்கையில் எதிர்ப்புகளும், எதிரிகளும் இருக்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கை விரைவிலேயே அடுத்த கட்ட முன்னேற்றத்தை நோக்கி செல்லும் என்று வெற்றியாளர்கள் கூறுகிறார்கள். இவர்கள்தான் எதிரிகள். இவர்கள் இந்த வகையில் தான் நம்மை எதிர்ப்பார்கள் என்பது தெரிந்து அதை எதிர்த்து போராடுவது ஒரு ரகம்.

யார் எதிரி எந்த வகையில் நம்மை எதிர்பார்க்கள் என்று தெரியாமலேயே இருப்பது மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகம் தான் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம் கண்ணுக்குத் தெரிந்த தெரியாத எதிரிகளையும் நம்மை சூழ்ந்திருக்கக் கூடிய தீய சக்திகளையும் விரட்டுவதற்கு எந்த தூபத்தை உபயோகப்படுத்த வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த கலியுகத்தில் யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? என்று கண்டறிவது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது. நம்மிடம் நன்றாக சிரித்துப் பேசிவிட்டு நாம் சென்ற பிறகு நமக்கு எதிராக செயலாற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள். மேலும் நம்முடைய முன்னேற்றத்தை கண்டு பொறாமைப்படுபவர்களும் உடன் இருப்பவர்கள் தான். இப்படி உடன் இருந்து கொண்டே நமக்கு தீமைகளை செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.

நம்மை சுற்றி பல பகைவர்களும் பல தீய சக்திகளும் இருந்து கொண்டு இருக்கிறது. ஒரு சூழ்நிலையை கடந்த பிறகு இந்த தீய சக்திகள் அதிகரிக்கும் பொழுது அதனால் நம்முடைய வாழ்க்கைத் தரம் என்பது குறைய ஆரம்பித்து விடும். அப்படி குறையும் பட்சத்தில் அதாவது தொழிலோ, வியாபாரமோ, வேலையோ, படிப்போ, குடும்பமோ நன்றாக இருந்து திடீரென்று ஏதாவது ஒரு ரூபத்தில் சரிவு ஏற்பட்டு அந்த சரிவிலிருந்து நம்மால் வெளியில் வர முடியாமல் கஷ்டப்படுகிறோம் என்றால் அது நம்மை சுற்றி இருக்கக் கூடிய நபர்களால் மேற்கொள்ளப்பட்ட தீய சக்திகளின் விளைவுதான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அந்த சூழ்நிலையில் வீட்டில் வெள்ளிக்கிழமையில் நாம் விளக்கேற்றி சாம்பிராணி தூபம் போடும் பொழுது, அந்த தூபத்துடன் 5 கிராம்பு மற்றும் பூண்டு தோலை போட்டு அதிலிருந்து வரக்கூடிய புகையை நம் வீடு முழுவதும் நாம் காட்ட வேண்டும். வியாபாரம் செய்பவர்களாக இருந்தால் வியாபார ஸ்தலங்களில் இந்த புகையை காட்ட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் இந்த புகையால் நம்மை சுற்றி இருக்கக் கூடிய பகை அனைத்தும் விலகி ஓடும். எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும் தீய சக்திகள் விரட்டி அடிக்கப்படும்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினை தீர எளிய வழிமுறையும், வழிபாட்டு முறையும்.

இந்த இரண்டு பொருட்களும் எப்பொழுதும் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்கள்தான் என்பதால் இதற்காக நாம் எந்தவித சிரமமும் படத் தேவையில்லை. தீய சக்திகள் அனைத்தையும் விலக்கி நம்முடைய வாழ்க்கை பாதையை முன்னேற்றுவதற்கு இந்த தூபம் நமக்கு உதவி செய்யும்.

சற்று முன்