சிக்ஸ் அடித்தால் நான் மும்பைக்கு மாறுகிறேன்.! ரோஹித்தை சீண்டும் ஆஸி கேப்டன்

rohith Hit

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று (26-12-2018) துவங்கியது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியான இதில் ஆஸ்திரேலிய வெற்றி பெற ஆக்கிரோஷமாக விளையாடும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணிவீரர்களை தொடர்ந்து சீண்டிய வண்ணம் வசைபாடி வருகின்றனர்.

rohit-2

கடந்த டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் மற்றும் இந்திய கேப்டன் கோலிக்கும் இடையே வார்த்தை போர் நடந்தது. தற்போது மீண்டும் ஆஸ்திரேலிய அணி கேப்டன் இந்திய அணியின் அதிரடி வீரரான ரோஹித் சர்மாவினை சீண்டும் விதமாக பேசிவருகிறார். ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் போது ஸ்டம்புக்கு பின்னால் இருந்து ரோஹித் சர்மாவினை பார்த்து அவரது பேட்டிங் குறித்து விமர்சித்துள்ளார்.

ஸ்டம்ப் மைக்கில் பதிவானவை : ரோஹித் நீ சிக்ஸ் அடித்தால் நான் மும்பை அணிக்காக எனது ஆதரவினை தருகிறேன் என்றும் மேலும் உன்னால் அவ்வளவு எளிதாக இங்கு பேட்டிங் செய்ய முடியாது என்றும் கூறினார். மேலும் அருகில் இருந்த பின்ச் ரோஹித்தை பார்த்து முடிந்தால் அடி என்பது போலவும் கூறினார்.

rohit-3

அவரை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே அவரை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சீண்டி வருகின்றனர். ஆனால் ரோஹித் அதனை காதில் வாங்காமல் தொடர்ந்து நிதானமாக ஆடி வருகிறார்.
தற்போது அவரை அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.

இதையும் படிக்கலாமே :
இவர் தான் ஆஸ்திரேலிய அணியின் விராட் கோலி.! பயிற்சியாளர் அதிரடி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்