இவர் தான் ஆஸ்திரேலிய அணியின் விராட் கோலி.! பயிற்சியாளர் அதிரடி

langer

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் “ஸ்டீவ் ஸ்மித்” தான் ஆஸ்திரேலிய அணியின் விராட் கோலி என்று கூறியுள்ளார்.

smith 2

அவர் அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது : கடந்த மார்ச் மாதம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதற்காக வார்னர், பேன்க்ராப்ட் மற்றும் ஸ்மித் ஆகியோர் அணியில் இருந்து ஓர் ஆண்டு தடை செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களது தடைகாலம் அடுத்த வருடம் துவங்கும் உலககோப்பைக்கு முன்பாக முடிய உள்ளது.

ஸ்மித் எங்கள் அணியின் விராட் கோலி. அவர் ஒரு சிறந்த வீரர் மற்றும் கேப்டன் அவரின் வருகையை அணி எதிர்பார்த்து காத்திருக்கிறது. உலககோப்பைக்கு முன்பான பாகிஸ்தான் தொடரில் ஸ்மித் அணியில் இணைய ஆவலுடன் காத்திருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

smith 1

மேலும் கடந்த 9 மாதங்கள் தனக்கு மிகுந்த மனஉளைச்சலை தந்ததாகவும், நான் மீண்டும் அணியில் அணியில் இணைய காத்திருப்பதாகவும், அதனால் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரிடம் தெரிவித்துள்ளார். அவரது வருகை அணிக்கு மீண்டும் பழைய உற்சாகத்தினை நிச்சயம் தரும் எனவே அவரின் வருகை எங்களுக்கு முக்கியம் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே:
கோலி ஓய்வுக்கு தயாரா.? சீண்டிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்.!

இது போன்ற மேலும் கிரிக்கெட் செய்திகள் பலவற்றை அறிந்துகொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.