படு வேகமாக முடி வளர்ச்சியை அதிகரிக்கும் பாலக்கீரை ஹேர் பேக். 10 மடங்கு பலம், உங்களுடைய முடிக்கு 10 நிமிடத்தில் கிடைக்கும்.

hair15
- Advertisement -

கால்சியம் அயன் விட்டமின் சத்துக்கள் நிறைந்த இந்தப் பாலக் கீரையை தலையில் பேக் போடுவதால் முடி வளர்ச்சி பல மடங்காக நமக்கு அதிகரிக்க போகின்றது. வலுவிழந்த முடிக்கு தேவையான ஊட்டச்சத்தை உடனடியாக கொடுக்கக்கூடிய சத்தும் இந்த கீரையில் அடங்கியுள்ளது. வெறும் பேக்காக மட்டுமே இந்த கீரையை பயன்படுத்தாமல், வாரத்தில் இரண்டு நாள் இந்த கீரையை சமைத்து சாப்பிடவும் பயன்படுத்தி வந்தால், முடி வளர்ச்சி பல மடங்காக அதிகரிக்கும். குறைந்த செலவில் இந்த பேக்கை நம்முடைய வீட்டிலேயே தயாரித்து அப்ளை செய்வது எப்படி என்பதை பற்றிய குறிப்பை தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் சிறிதளவு பாலக் கீரையை எடுத்து சுத்தமாக தண்ணீரில் கழுவி விடுங்கள். பாலக்கீரை கொஞ்சம் பெரியதாக இருக்கும் அல்லவா. கழுவிய பின்பு கீரையை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். பொடியாக நறுக்கிய கீரை 2 கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் இருக்கும் பாலக்குரையோடு, 2 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக அரைக்க வேண்டும். நமக்கு ஒரு பேஸ்ட் கிடைத்திருக்கும் அல்லவா. இதுதான் ஹேர்பேக் இதை அப்படியே தலையில் போட்டுக் கொள்ளலாம். (தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டாம். தயிர் ஊற்றி இருக்கிறோம் அல்லவா. அதிலேயே பேக் போல நமக்கு கீரை அரை பட்டு கிடைக்கும்.)

- Advertisement -

சில சமயம் ஆங்காங்கே கீரை அரைபடாமல் இருந்தால் அது தலையை அலசும் போது அப்படியே தலையில் ஒட்டிக் கொள்ளும். முடிந்தவரை இந்த ஹேர் பேக்கை மெல்லிசான காட்டன் துணியில் போட்டு வடிகட்ட பாருங்கள். வடிகட்டிய ஹேர் பேக்கை எடுத்து தலையில் ஸ்கேல்பில் நன்றாக படும்படி அப்ளை செய்து விட்டு 10 லிருந்து 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.

அதன் பின்பு ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு உங்களுடைய தலையை அலசி கொள்ள வேண்டும். வாரத்தில் 2 நாள் இந்த பாலக்கீரை ஹேர் பேக்கை தலையில் போட்டு வந்தால் முடி உதிர்வு உடனடியாக நின்று, இரண்டு மாதத்தில் முடி வளர்ச்சியில் நல்ல வித்தியாசத்தை பார்க்க முடியும். உங்களுடைய தலைமுடிக்கு ஏற்ப கீரையின் அளவுகளையும் தயிரின் அளவுகளையும் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம் தவறு கிடையாது.

- Advertisement -

மேலே சொன்ன ஹேர் பேக்கில் பாலக்கீரையுடன் தயிர், தேங்காய் எண்ணெய் தான் சேர்த்திருக்கின்றோம். இதில் சில மாற்றங்களையும் நீங்கள் செய்து கொள்ளலாம். ஆனால் கட்டாயமாக நாம் பாலக்கீரை ஹேர் பேக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நரைமுடி உள்ளவர்கள் இதோடு கருவேப்பிலை அல்லது மருதாணி இலை சேர்த்து அரைத்தும் தலையில் போட்டுக் கொள்ளலாம் எந்த ஒரு தவறும் கிடையாது.

நீங்கள் அசைவம் சாப்பிடுவீர்கள். முட்டை உங்களுடைய வீட்டில் பயன்படுத்துவீர்கள் என்றால் இந்த பேக்கோடு ஒரு முட்டையின் வெள்ளை கருவை சேர்த்தும் தலைக்கு அப்ளை செய்து கொள்ளலாம். உங்களுடைய முடியில் பேன் பொடுகு தொல்லை அதிகமாக இருந்தால் இதோடு ஒரு கைப்பிடி வேப்பிலை சேர்த்து கூட அரைத்து தலையில் பேக் போட்டுக் கொள்ளலாம். உங்களுக்கு சவுகரியமான பொருட்களை சேர்த்து கூட இந்த பேக்கை மேலும் சிறந்த பேக்காக மாற்றி பயன்படுத்தி பாருங்கள். நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும். மறக்காதீங்க. பாலக்கீரை என்று மட்டுமல்ல. வாரத்தில் இரண்டு நாள் உங்களுக்கு எந்த கீரை கிடைக்கிறதோ அந்த கீரையை வாங்கி சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக முருங்கைக்கீரை சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

- Advertisement -