- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்1 கப் பொட்டுக்கடலை இருந்தா போதும் அருமையான கீரை வடை இப்படி செஞ்சு பாருங்க இவ்வளவு...

1 கப் பொட்டுக்கடலை இருந்தா போதும் அருமையான கீரை வடை இப்படி செஞ்சு பாருங்க இவ்வளவு ஈஸியா என்று நீங்களே வாயை பிளப்பீங்க!

- Advertisement -

விதவிதமான கீரை வடைகள் நாம் சாப்பிட்டு பார்த்திருப்போம். ஆனால் பொட்டுக்கடலை கொண்டு இது போல ஒரு முறை கீரை வடை சட்டுன்னு பத்து நிமிஷத்துல செஞ்சு பாருங்க, இனி வடை சுட நீங்கள் யோசிக்கவே மாட்டீங்க! தோணும் போதெல்லாம் இதை செய்ய ஆரம்பித்து விடுவீங்க, அந்த அளவிற்கு சுலபமாக செய்யக்கூடிய இந்த அருமையான பொட்டுக்கடலை கீரை வடை ரெசிபி எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.

பொட்டுக்கடலை கீரை வடை செய்ய தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 3, பூண்டு – ஐந்து பல், இஞ்சி – ஐந்து துண்டு, சோம்பு – ஒரு ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி, கருவேப்பிலை – மூணு கொத்து, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப.

- Advertisement -

பொட்டுக்கடலை கீரை வடை செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் அளவிற்கு பொட்டு கடலை எடுத்துக் கொள்ளுங்கள். இதை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பொட்டுக்கடலை பத்து நிமிடம் நன்கு ஊறியதும் தண்ணீரை வடிகட்டி விடுங்கள். பின்னர் இஞ்சி, பூண்டிற்கு சரிசமமாக எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு தோல் நீக்கி சீவி எடுத்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயத்தை தோலுரித்து சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மற்ற தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஊற வைத்து எடுத்த பொட்டுக் கடலையை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய்களை நறுக்கி சேருங்கள். இதனுடன் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் அதற்கு ஏற்ப இஞ்சி துண்டுகள் சேருங்கள். இந்த வடைக்கு வாசனையாக இருக்க சோம்பு ஒரு ஸ்பூன் சேர்த்து, இப்போது கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுக்க இந்த பொட்டுக்கடலை மாவுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் மூன்று கொத்து கருவேப்பிலையை எடுத்து நன்கு தண்ணீரில் அலசி உதறி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ, அவ்வளவு பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். பொடி பொடியாக நறுக்கிய கருவேப்பிலை துண்டுகளை மாவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே போல ஒரு கைப்பிடி அளவிற்கு வருமாறு கொத்தமல்லி தழையை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். இப்போது இந்த வடை மாவிற்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கைகளால் பிசைந்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
இந்த மசாலா உங்க கிட்ட இருந்தா போதும் அப்புறமா உங்க சமையல அடிச்சிக்க ஆளே இல்ல. நீங்க சமைக்கிற வாசனை உங்க தெரு வீதி வரைக்கும் வீசும்.

பருப்பு வடை செய்வது போல இந்த வடையும் கெட்டியாக இருக்க வேண்டும். நீங்கள் சேர்க்கும் வெங்காயம் மற்றும் மற்ற பொருட்கள் தண்ணீர் விடும் எனவே தண்ணீர் கூட இதற்கு சேர்க்க தேவையில்லை. கெட்டியாக மாவை நன்கு கலந்து விட்ட பின்பு சிறு சிறு வடைகளாக தட்டையாக தட்டிக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் தட்டி வைத்த வடைகளை போட்டு இரண்டு புறமும் சிவக்க எடுத்து சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும். இவ்வளவு ஈசியாக வடை சுடலாமா? என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

சற்று முன்