இந்தப் பொருளை தானம் கொடுப்பதன் மூலம் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. உங்களுடைய கர்மாவும், பாவமும் இரட்டிப்பாக உயரத்தான் செய்யும்.

dhanam
- Advertisement -

இந்த காலத்தில் தானம் கொடுப்பது என்பது மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டது. யார் வேண்டுமென்றாலும், யாருக்கு வேண்டுமென்றாலும் எந்த பொருளை வேண்டுமென்றாலும், எப்படி வேண்டுமென்றாலும் தானம் செய்கிறார்கள். தானத்திற்கு எந்த ஒரு வரையறையும் இல்லாமல் போய்விட்டது. அந்த காலத்திலெல்லாம் தானம் என்றால் சுபகாரியங்கள் செய்யும் போது கொடுக்கக்கூடிய தானங்கள். அசுபகாரியங்கள் செய்யும் போது கொடுக்கக்கூடிய தானங்கள் என்று வரையறையோடு தானம் செய்யப்பட்டது. தானத்தினை முறையாக எப்படி செய்யவேண்டும். எப்படி செய்யக்கூடாது. தவறான தானத்தின் மூலம் நமக்கு பாவம் வந்து சேருமா? எப்படிப்பட்ட தானங்கள் தவறான தானங்களாக சொல்லப்பட்டுள்ளது என்பதை பற்றிய விரிவான விளக்கம் உங்களுக்காக.

முதலில் முறை தவறிய தவறான தானம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். எடுத்துக்காட்டிற்கு ஒரு பசு மாட்டை வாங்கி தானமாக கொடுக்கின்றோம். அந்த பசு மாட்டை நாம் யார் கையில் தானமாக கொடுக்கின்றோம் என்பதை முதலில் பார்க்க வேண்டும். பசு மாடு வளர்க்க தெரியாதவனுக்கு இந்த பசு மாட்டை வாங்கி தானமாக கொடுத்தால், அவன் என்ன செய்வான்? இந்த கையில் வாங்கிய பசு மாட்டை, அந்த கையில் வேறு ஒருவனுக்கு விற்று விட்டு சென்று விடுவான். போக கூடாதவர் கையில் பசுமாடு சென்று, அந்த பசு மாட்டிற்கு ஏதாவது ஒரு விபரீதம் ஏற்பட்டு விட்டால், அந்தப் பாவம் நம்மை தான் வந்து சேரும். நீங்கள் தவறான ஒருவரிடம் பசு மாட்டைப் தானம் பிடித்துக் கொடுத்ததால் தானே, பசுமாட்டிற்கு இந்த நிலைமை. பாத்திரம் அறிந்து பிச்சை போட வேண்டும் என்பதை நம்முடைய முன்னோர்கள் இதற்காகத்தான் சொல்லி வைத்துள்ளார்கள்.

- Advertisement -

நீங்கள் ஒரு தானத்தை மற்றவர்களுக்கு கொடுக்கிறீர்கள் என்றால், அந்த தானத்தின் மூலம் தானம் பெற்றவர் முழுமையாக பயனை அடையவேண்டும். அதன் மூலமே நம்முடைய பாவங்கள் குறைக்கப்படும். நம்முடைய கர்ம வினைகள் குறைக்கப்படும். தானத்தை செய்த உடன் நம்முடைய கடமை முடிந்து விடவில்லை. நான் கொடுத்த தானம் சரியான இடத்தில் தான் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய கடமை.

dhanam

ஒரு பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுக்கின்றனர். பெண்ணை கன்னிகா தானம் செய்து விட்டோம் என்பதற்காக அந்தப் பெண்ணின் நல்லது கெட்டதை நாம் பார்க்காமலேயே இருக்கின்றோம். கடைசிவரை அந்த பெண் புகுந்த வீட்டில் எப்படி இருக்கிறாள் என்பதை கன்னிகாதானம் செய்து கொடுத்த பெற்றவர்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள். முறையான தானமும் இப்படித்தான் இருக்க வேண்டும்.

- Advertisement -

சரி, அடுத்த விஷயத்திற்கு வருவோம். நமக்கு உபயோகமில்லாத நாம் பயன்படுத்தாத சில பொருட்களை இல்லாதவர்களுக்கு கொடுக்கின்றோம். எடுத்துக்காட்டிற்கு நீங்கள் உடுத்திய துணி, நல்ல துணையாக இருக்கிறது என்றால் அதை அடுத்தவர்களுக்கு தானமாக கொடுக்கலாம். எப்படி? அந்த துணிகளை நன்றாக துவைத்து, வெயிலில் உலர வைத்து, மடித்து கொஞ்சமாக மஞ்சள் வைத்து அந்தத் துணியை அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

cloth

பழைய துணிகளை கஷ்டப்படுபவர்களுக்கு கொடுக்கும்போது அது தானத்தின் வரிசையில் வராது. இதை தானம் என்று சொல்ல வேண்டாம். உங்கள் கையால் அந்த பழைய துணிகளை அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டாம். சுத்தப்படுத்திய பழைய துணியை பையில் போட்டு, அந்த பையை கீழே வைத்து விட வேண்டும். அதை கஷ்டப்படும் அந்த குறிப்பிட்ட நபர் எடுத்துக் கொள்ளட்டும். இது நீங்கள் கஷ்டப்படுபவர்களுக்கு செய்யக் கூடிய சிறிய உதவி.

- Advertisement -

annathanam

ஒருவேளை நீங்கள் உடுத்திய துணியை துவைக்காமலோ, அல்லது கிழிந்து இருக்கக்கூடிய துணிகளையோ தானம் செய்தால், அதன் மூலம் உங்களுக்கு பாவம் தான் வந்துசேரும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

புதியதாக வாங்கிய குடை, செருப்பு, கம்பளி, புதிய ஆடைகள், அரிசி, பருப்பு, எண்ணெய், பூசணிக்காய், பாய், நல்ல சாப்பாடு இவைகளை புதியதாக வாங்கி தானமாக கொடுங்கள். முக்கியமாக நாம் கொடுக்கப்படும் தானம் அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். நமக்கு பயன்பட வில்லை என்பதற்காக, நாம் பயன்படாத பொருட்களை அடுத்தவர்களுக்கு தூக்கி தானமாக கொடுப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. இப்படிப்பட்ட பொருட்களை தானம் செய்வதன்மூலம் நமக்கு பலனும் கிடைக்காது.

annathanam

எதோ ஒரு பிரதிபலனை எதிர்பார்த்து தான் இன்றைய சூழ்நிலையில் எல்லோரும் தானம் கொடுக்கும் வழக்கத்தை வைத்திருக்கின்றோம். ஆனால் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உண்மையான மனதோடு அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அடுத்தவர்களுக்கு பயன்படக்கூடிய பொருட்களை கொடுக்கும் தானமே சிறந்த தானம் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இதை நாமும் பின்பற்றுவோம். நம்முடைய குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுப்போம்.

- Advertisement -