பலாப்பழத்தில் பாயாசமா! அடடே இது என்ன புது சுவையாக இருக்கிறதே என்று அனைவரும் கூறும் அளவிற்கு சுவைக்க சுவைக்க நாவில் நாட்டியமாடும் பலாச்சுளை பாயாசம் ரெசிபி

palapazha payasam seivathu eppadi
- Advertisement -

பொதுவாகவே பாயசம் என்றால் பாசிப்பருப்பு, ஜவ்வரிசி, பால், சேமியா, அவல் இவை எதையாவது கொண்டு தான் பாயாசம் செய்வது வழக்கம். ஆனால் பழங்களை கொண்டு பாயாசம் செய்துள்ளீர்களா? சாதாரணமாக பாயசமும் இனிக்கும், பழங்களும் இனிக்கும், இந்த இரண்டு இனிப்பும் ஒன்றாக சேரும்போது, அப்பப்பா எப்படி இருக்கும்? நாவில் எச்சில் ஊறுகிறது அல்லவா? அப்படி இனிப்பு பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான பலாச்சுளை வைத்து பாயசம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் காண்போம்.

பலாப்பழ பாயசம் செய்ய தேவையான பொருட்கள்:
பலா சுளைகள் – 20, வெல்லம் – 1/2 கிலோ, தேங்காய் – 1 பெரியது, ஏலக்காய் – தேவைக்கேற்ப, பச்சை கற்பூரம் – ஒரு சிட்டிகை, உப்பு – ஒரு சிட்டிகை

- Advertisement -

பலாப்பழ பாயசம் செய்வது எப்படி:
முதலில் தேங்காயை துருவி, அதை மிக்ஸியில் போட்டு சிறிது நீரூற்றி, அரைக்க வேண்டும். பிறகு அரைத்த விழுதை சுத்தமான துணியில் வடிகட்டி, தேங்காய் பாலை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பலாச்சுளையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரை ஊற்றி அடி கனமான பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும்.

பலாச்சுளை நன்றாக வெந்த பிறகு, தயிர் கடையும் மத்தை எடுத்து நன்றாக கடைய வேண்டும், அதாவது நன்றாக மசித்து விட வேண்டும். பிறகு வெல்லத்தை பொடியாக உடைத்து, சிறிது தண்ணீர் ஊற்றி, வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்து, பிறகு அதை இறக்கி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

கடைந்த பலாச்சுளை உடன் வெல்லத்தை சேர்த்து, அடி பிடிக்காத அளவு கிண்ட வேண்டும். அவை ஒரு கொதி வந்தவுடன், தேங்காய் பாலையும் அதில் சேர்த்து மீண்டும் அடிபிடிக்காதவாறு நன்றாக கிளறி விட வேண்டும். இவை மூன்றும் சேர்ந்து நன்றாக கொதி வந்தவுடன், அவற்றை கீழே இறக்கி வைத்து விட வேண்டும். இப்பொழுது அதில் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் மற்றும் ஏலக்காயை பொடி போட வேண்டும்.

பிறகு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை வாணலியில் நெய்விட்டு வறுக்க வேண்டும். நன்கு வருத்தபின் அந்த தேங்காய் துண்டுகளை பாயசத்துடன் சேர்த்து விட வேண்டும். விருப்பம் இருந்தால், முந்திரி, திராட்சை போன்றவற்றையும் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இப்படி மட்டும் வாழைக்காய் பஜ்ஜி செஞ்சுங்கன்னா நல்லா புசுபுசுன்னு கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காம இருக்கும்.

அவ்வளவு தான் மனமும் ருசியும் மிக்க பலாச்சுளை பாயசம் தயார். பலாப்பழமும் இனிக்கும், பாயசமும் இனிக்கும். இந்த இரண்டு இனிப்பும் சேர்ந்து இனிப்பு பிரியர்களுக்கு மிகப்பெரிய இனிப்பு விருந்தாக இந்த பாயாசம் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -