அட வாழைக்காய் பஜ்ஜி செய்யறது பெரிய விஷயமா? இப்படி மட்டும் வாழைக்காய் பஜ்ஜி செஞ்சுங்கன்னா நல்லா புசுபுசுன்னு கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காத சூப்பரான பஜ்ஜியை டேஸ்டா ரெடி பண்ணலாம். இதுக்கு அப்புறம் கடையில் பஜ்ஜி வாங்கி சாப்பிடவே மாட்டீங்க.

- Advertisement -

பெரும்பாலும் பஜ்ஜி சாப்பிட ஆசைப்பட்டால் உடனே அருகில் இருக்கும் டீக்கடையில் வாங்கி சாப்பிடுவோம். இப்படி சாப்பிடும் போது அதில் இருக்கும் எண்ணெய் திகட்ட தொடங்கி விடும். அது மட்டுமின்றி சாப்பிட்ட பிறகும் அதன் மூலம் பல தொந்தரவுகள் ஏற்படும். இந்த முறையில் நாம் வீட்டில் பஜ்ஜி செய்து சாப்பிடும் போது நல்ல ருசியுடன் கொஞ்சம் கூட எண்ணெய் குடிக்காமல், நம் ஆரோக்கியத்திற்கும் அதிக தீங்கு விளைக்காத பஜ்ஜியை செய்யலாம். இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சுவையான எண்ணெய் குடிக்காத பஜ்ஜி எப்படி செய்வது என்பதை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 1,கடலை மாவு -2 கப், பச்சரிசி மாவு -1/2 கப், மிளகாய் தூள் -11/2 டீஸ்பூன், உப்பு -1 டீஸ்பூன், சமையல் சோடா -1/4 டீஸ்பூன், பெருங்காயத் தூள் -1/2 டீஸ்பூன், எண்ணெய் – பஜ்ஜி பொரிக்க தேவையான அளவு.

- Advertisement -

செய்முறை

இந்த பஜ்ஜி செய்வதற்கு முதலில் வாழைக்காயின் காம்பு பகுதியும் அடிப்பகுதியும் நீக்கி விட்டு பீலர் வைத்து மேலே இருக்கும் பச்சை நிற தோலை மட்டும் நீக்கி விடுங்கள்.

வாழைக்காய் சீவியவுடன் பெரும்பாலானோர் செய்யும் தவறு வாழைக்காய் அரிந்தவுடன் தண்ணீரில் போடுவது. அப்படி மட்டும் செய்யவே கூடாது. வாழைக்காயை சீவிய பிறகு ஒரு அகலமான தட்டில் பரப்பி வைத்து விட வேண்டும். இப்படி செய்யும் போது வாழைக்காய் எண்ணெய் குடிக்காமல் நல்ல கிரிஸ்பியாக வெந்து வரும்.

- Advertisement -

அடுத்தது ஒரு பவுலின் கடலை மாவு, பச்சரிசி மாவு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள், என அனைத்தையும் சேர்த்த பிறகு தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை கலந்து விடுங்கள். அதன் பிறகு மாவை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். மாவு தோசை மாவின் பதத்தை விட கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்.

இந்த மாவின் பதம் சரியாக இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள மாவில் ஒரு கரண்டியை விட்டு எடுத்தால் கரண்டியே தெரியாத அளவிற்கு மாவு ஒட்டி வர வேண்டும். இந்த மாவை கரைத்த உடனே பஜ்ஜி சுட ஆரம்பித்து விட வேண்டும். மாவை கரைத்து அதிக நேரம் வைத்து விட்டால் பஜ்ஜி சரியாக வராது. அது மட்டும் இன்றி அதிகம் எண்ணெய் குடித்து விடும். பஜ்ஜியும் நன்றாக உப்பி வராது.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், அடுப்பை மீடியம் பிளேமில் மாற்றி விடுங்கள். அடுத்ததாக சீவி வைத்திருக்கும் வாழைக்காயை ஒவ்வொன்றாக எடுத்து மாவில் முக்கி இரண்டு முறை நன்றாக மாவில் தேய்த்து அதன் பிறகு எண்ணெய் சட்டியில் போட்டு வெந்து மேலே வந்தது மறுபுறம் திருப்பி போட்டு எடுத்து விடுங்கள்.

அதே போல் பஜ்ஜி சூட எண்ணெய் காய்ந்த பிறகு மிதமான தீக்கு மாற்றிய பிறகு தான் பஜ்ஜி சுட்டு எடுக்க வேண்டும். எண்ணெய் அதிக தீயில் இருக்கும் போது பஜ்ஜி போட்டால் மேலே கருகி வாழைக்காய் வேகாது. கம்மியான தீயில் இருக்கும் பொழுது போட்டால் பற்றி சொத சொதவென்று வந்து விடும்.

இதையும் படிக்கலாமே: மண்வாசனை மாறாத முருங்கை கீரை கடையல் கிராமத்து சுவையில் செய்வது எப்படி? இந்தக் கீரையை சாப்பிட்டால் கொள்ளு பாட்டி கையால் கீரை சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்.

பஜ்ஜி செய்வதெல்லாம் பெரிய விஷயமா என்று யோசிக்கலாம். இந்த சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து கொண்டு பஜ்ஜி செய்து பாருங்கள். இதுவரை சுவைத்திடாத அட்டகாசமான சுவையில் இருக்கும்.

- Advertisement -