சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் என்ன ஆகும்? இதில் உருவாகும் பாக்டீரியாக்கள் நம்மை என்ன செய்யும் தெரியுமா? தெரியலன்னா தெரிஞ்சுக்கோங்க!

palaya-sadam-rice
- Advertisement -

சுட சுட சாதம் சமைத்து வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட்டாலும், மீதம் இருக்கும் சாதத்தை என்ன செய்வது? என்று தெரியாமல் அதில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுவோம். இரவு முழுவதும் தண்ணீரில் ஊறிய இந்த சாதத்தில் லட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் உருவாகி இருக்குமாம்! இது நமக்கு என்ன செய்யும்? இதனால் உண்டாகக் கூடிய வியக்க வைக்கும் மாற்றங்கள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முதல் நாள் மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்தால் அதை ‘பழைய சாதம்’ என்கிறோம். இந்த பழைய சாதம் இன்று, நேற்று அல்ல காலம் காலமாக நம் முன்னோர்கள் பிரதான உணவாக உட்கொண்டு வந்த ஒரு அற்புதமான சிற்றுண்டி ஆகும். காலையில் எழுந்ததும் முதல் உணவாக அவர்கள் பழைய சாதத்தை அதன் தண்ணீருடன் உட்கொண்டு வந்தனர். இதனால் அவர்கள் நாள் முழுக்க எவ்வளவு வேலை செய்தாலும், அவர்களுக்கு சோர்வு தட்டாமல் சுறுசுறுப்பு இருந்தது.

- Advertisement -

பழைய சாதத்தில் ஏராளமான விட்டமின்கள் நிறைந்துள்ளன. இதில் பி6, பி12 போன்ற விட்டமின்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு பெருகுகிறது என்பது தான் ஆச்சரியத் தாக்க விஷயமாக இருக்கிறது. இன்று நாம் உணவு விஷயத்தில் ரொம்பவும் அலட்சியமாக இருக்கிறோம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கணிசமாக குறைந்து விட்டது ஆனால் பழைய சாதத்தில் இழந்த நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டு தரக்கூடிய அற்புதமான ஆற்றல் உண்டு.

இந்த பழைய சாதம் உடலை உடனடியாக குளிர்ச்சி அடைய செய்து சுறுசுறுப்பை, எனர்ஜியை தக்க வைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றலையும் சேர்த்து கொடுக்கிறது. உடலை லேசாக காற்றில் மிதப்பது போல வைத்துக் கொள்ளக்கூடிய சக்தி இதற்கு உண்டு. சூட்டை தணித்து வயிற்றுக்குள் இருக்கும் பிரச்சனைகள் குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் விரட்டி அடிக்கும்.

- Advertisement -

மேலும் பழைய சாதத்தில் உருவாகக்கூடிய லட்சக்கணக்கான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உருவாகி அதில் லாக்டிக் ஆசிட் மூலம் புளிப்பு சுவையை பெறுகிறது. இதை சாப்பிடும் பொழுது நமக்கு பொட்டாசியம், இரும்புச்சத்து, புரதச்சத்தை அதிக அளவில் கிடைக்கிறது. இதனால் நாள் முழுவதும் சோர்வு வராமல் நம்மால் வேலை செய்ய முடிகிறது. பழைய சாதத்தில் இருக்கும் நார் சத்து மலச்சிக்கலை நீக்கி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளவும், உடல் எடை குறைப்பதிலும் பெருமளவு துணை புரிகிறது. உடலை சீராக இயங்க செய்து உள்ளிருந்து சருமத்தை இளமையாக தக்க வைத்துக் கொள்ளவும் உதவி செய்கிறது. குறிப்பாக அலர்ஜி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் அதை விரட்டி ஓட வைக்கிறது.

தினமும் காலையில் பழைய சாதம் சாப்பிடுபவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகளும், தோல் தொடர்பான பிரச்சனைகளும் வருவது இல்லை. அது மட்டும் அல்லாமல் உடல் எப்பொழுதுமே குளிர்ச்சி தன்மையுடன், உஷ்ணம் இன்றி எப்போதும் ஆக்டிவாக இயங்க வைக்கிறது. ஒவ்வாமை பிரச்சினைகளையும் இது கட்டுப்படுத்துகிறது. இவ்வளவு விஷயங்களையும் நமக்கு அள்ளிக் கொடுக்கும் இந்த பழைய சாதத்தை பலரும் குப்பை தொட்டியில் மட்டுமே கொட்டி வருகின்றோம் என்பது தான் வேதனைக்குரியதாக இருக்கிறது.

- Advertisement -