மதியம் வடித்த சாதத்தில் ஒரு கைப்பிடி சாதம் நேரமாகிவிட்டதால் கவலைப்படாமல் உடனே இந்த மினி போண்டா செய்திடுங்கள்

bonda
- Advertisement -

ஒவ்வொரு நாளும் வீட்டில் இருப்பவர்கள் எந்த அளவிற்கு சாப்பிடுவார்கள் என்று யோசித்து அதற்கு ஏற்றார் போல அளவான அரிசியை சேர்த்து சாதம் வடிப்பது வீட்டில் உள்ள அனைத்து பெண்களின் வேலையாகும். என்றாவது ஒருநாள் வடித்த சாதம் ஒரு கைப்பிடி அளவாவது மீதமாகிவிடும். இந்த சாதத்தை கீழே கொட்டுவதற்கும் மனம் வராது. அது போல இரவு நேரத்தில் சாதம் சாப்பிடுவதற்கு பலருக்கும் பிடிப்பதில்லை. எனவே அப்படியே வைத்தால் இந்த சாதம் வீணாகிப் போகும். ஆனால் சாப்பாடு என்பது அன்னபூரணிக்கு சமம். அதனை வீணாக்குவது நமக்கு நல்லதல்ல. எனவே இந்த சாதத்தை வைத்து மாலை வேளையில் சுடச்சுட இப்படி மினி போண்டாவை செய்து கொடுங்கள். எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும் என்று வீட்டிலுள்ள அனைவரும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
மீதமான சாதம் – ஒரு கைப்பிடி, அரிசி மாவு – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, சீரகம் – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – முக்கால் ஸ்பூன், கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் மீதமான பழைய சாதத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு சேர்த்து, அதனுடன் அரைத்து வைத்துள்ள சாதத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். அதே போல் கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு நறுக்கிய அனைத்தையும் அரிசி மாவுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து அனைத்தையும் கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்து பிசைந்ததும் மாவு போண்டா போடும் பதத்திற்கு கெட்டியாக இருக்க வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, கால் லிட்டர் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

என்னை நன்றாக காய்ந்ததும் மாவை கையில் எடுத்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட வேண்டும். சிறிது நேரத்தில் அனைத்தும் நன்றாக சிவந்து உப்பி வர ஆரம்பிக்கும். அப்பொழுது அனைத்தையும் திருப்பி போட்டு சிறிது நேரம் எண்ணெயிலேயே பொரிய விட்டு வெளியே எடுக்க வேண்டும். பிறகு இந்த போண்டாவுடன் கார சட்னி, வெங்காய சட்னி சேர்த்து சாப்பிட கொடுத்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -