மீதமான சாப்பாட்டை வைத்து மொறுமொறு மெதுவடை! 10 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம்!

sadam-vadai

மெதுவடை என்றாலே நம் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த வடைக்கு, பக்குவமான முறையில் மாவு அரைப்பது என்பது கொஞ்சம் கடினமானது. மெது வடைக்கு இனி மாவு அரைக்க வேண்டாம். மீதமான சாப்பாடு 2 கப் வைத்திருந்தால் போதும். அதை வைத்து சூப்பரான மெது வடை எப்படி செய்வது என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த வடையை செய்து, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு கொடுத்து பாருங்கள். இந்த வடையை, எதில் செய்தீர்கள் என்றே அவர்களால் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும்.

vadai

மீதமான சாப்பாட்டில் வடை செய்ய தேவையான பொருட்கள்:
மீதமான சாப்பாடு -2 கப், ரவை -3/4 கப், தயிர் – 1/4 கப், தேவையான அளவு இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, பெரிய வெங்காயம், இவைகளைப் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு, மிளகு – 1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து, அதில் இரண்டு கப் அளவு, சாதத்தை போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் ஊற்றக்கூடாது. எந்த கப்பில் சாதம் எடுத்தீர்களோ, அதே கப்பில், 3/4 கப் அளவு ரவையை எடுத்து கொள்ள வேண்டும். ரவையை, அரைத்த சாதத்தோடு சேர்த்து, அதனுடன் 1/4 கப் தயிர் ஊற்றி, உங்கள் கைகளால் நன்றாக பிசைந்து, 1/2 மணி நேரம் வரை ஊற வைத்துவிடுங்கள். அதற்க்குள் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து பொடியாக நறுக்கி, தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

ravai

1/2 மணி நேரம் மாவு ஊறியதும், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பிசைய வேண்டும். மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு பெருங்காயம் சேர்த்து நன்றாக உங்கள் கைகளாலேயே பிசைந்து கொடுங்கள்.

- Advertisement -

methu-vadai1

இப்போது வடை சுடுவதற்கு தேவையான மாவு தயார். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் நன்றாக சூடு பண்ணி வடையை விட்டு, பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து விடுங்கள். வடையை, திருப்பி திருப்பி போட்டு சிவக்க வைத்து எடுத்தீர்கள் என்றால், சுவையான சூப்பரான மொரு மொரு மெதுவடை தயார் ஆகிவிடும். மெதுவடை விட தெரியாதவர்கள், சின்ன சின்ன உருண்டையாக கூட, விட்டு சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டிலும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்!

இதையும் படிக்கலாமே
மீந்து போன சாதம் இருந்தா போதும் இரவு புதிய விதமான டிபன் 10 நிமிசத்துல தயார் செஞ்சி அசத்திரலாம்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.